ஹிஜாப் விவகாரம் – பள்ளிகளை சுற்றி 144 தடை உத்தரவு!

உடுப்பி (13 பிப் 2022): கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெங்களூரில் பள்ளி- கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு வருகிற 22-ந் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக உடுப்பி மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளிகளை சுற்றி நாளை (14-ந்தேதி) காலை 6 மணி முதல் 19-ந்தேதி மாலை 6…

மேலும்...

இன்று முதல் ஜனவரி 7 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு!

மும்பை (30 டிச 2021): பெருகிவரும் கோவிட் பரவலை அடுத்து மும்பையில் 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜனவரி 7ம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மும்பை போலீஸ் கமிஷனர் பிறப்பித்துள்ளார். இ௹ஆ உத்தரவின்படி புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை. ஹோட்டல்கள், உணவகங்கள், பார்கள், விடுதிகள், ஓய்வு விடுதிகள் மற்றும் கிளப்புகளில் எந்த நிகழுகளுக்கும் அனுமதி இல்லை. மீறுபவர்கள் மீது தொற்று நோய்கள் சட்டம் பிரிவு 188ன்…

மேலும்...

ஒமிக்ரான் பரவலைத் தடுக்க மும்பையில் 144 தடை உத்தரவு!

மும்பை (11 டிச 2021): மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒமிக்ரான் அச்சத்தால் மும்பையில் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிராவில் ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்ததை அடுத்து மும்பை மாநகரில் டிசம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்று மேலும் பரவாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து ஊர்வலங்கள், பேரணிகள், சமுதாய நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

புதுச்சேரியில் ஒருவாரத்திற்கு ஊரடங்கு உத்தரவு!

புதுச்சேரி (21 மார்ச் 2020): கொரோன வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் ஒருவாரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வரும் மார்ச் 23 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பொருட்கள் வாங்க காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் வெளியில் வந்து பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். என்று முதல்வர் நாராயணசாமி உத்தரவு…

மேலும்...