பாஜகவில் இணைந்த ஷாஹீன்பாக் போராட்டக்காரர்கள் – ஆம் ஆத்மி பாஜக மீது புகார்!

புதுடெல்லி (18 ஆக 2020): சிஏஏ எதிர்ப்பு, டெல்லி ஷாகீன்பாக் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் டெல்லி ஷாஹீன்பாக் போராட்டம் பாஜக திட்டமிட்டு நடத்திய சதி என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தேசிய தலைநகர் டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் 24 மணி நேரமும் 101 நாள் தொடர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனை பின்பற்றி நாடெங்கும் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது….

மேலும்...

கன்னையா குமார், உமர் காலித் உள்ளிட்டோர் மீது தேச துரோக வழக்கு – கெஜ்ரிவால் அரசு அனுமதி!

புதுடெல்லி (29 பிப் 2020): ஜேஎன்யூ முன்னாள் மாணவ தலைவர் கண்ணையா குமார் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய டெல்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2016 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜேஎன்யு., வில் நடந்த போராட்டத்தின் போது தேசத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கன்னையா குமார் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்ய டெல்லி அரசுக்கு போலீஸ் தரப்பு டெல்லி அரசுக்கு அனுமதி கோரியிருந்தது. இதனை ஏற்று கொண்ட டில்லி…

மேலும்...

டெல்லி கலவரம் தொடர்பாக ஆம் ஆத்மி தாஹிர் உசேன் மீது வழக்கு பதிவு!

புதுடெல்லி (27 பிப் 2020): டெல்லி கலவரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தாஹிர் உசேன் என்பவர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லி கலவரத்தில் அடித்துக்கொல்லப்பட்ட உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மாவின் உடல் ஜாப்ராபாத் பகுதியில் அங்கித் சர்மாவின் வீட்டின் அருகே உள்ள ஒரு கழிவுநீர் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, உளவுத்துறை அதிகாரியான அவரது தந்தை ரவீந்தர் சர்மா, ஆம் ஆத்மி பிரமுகர் தாஹீர் உசேனின் ஆதரவாளர்களே தனது மகனைக் கொன்றதாகக்…

மேலும்...

பாஜக பி டீம் – உறுதி படுத்துகிறதா ஆம் ஆத்மி?

புதுடெல்லி (21 பிப் 2020): ஆம் ஆத்மி கட்சி தற்போது பாஜக எதிர்ப்பிலிருந்து சற்று விலகி இருப்பதாகவே சமீபத்திய நகர்வுகள் தெளிவு படுத்துகின்றன. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர ஹனுமான் பக்தர் என்பது அனைவரும் அறிந்ததே. கடவுள் நம்பிக்கை என்பது அவரவரவர் விருப்பம் என்பதால் இது விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது. ஆனால் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சவரப் பரத்வாஜ் கூறியிருக்கும் கருத்துதான் கவனிக்கத்தக்கதாக உள்ளது. ‘பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டலாம்’ என உச்ச…

மேலும்...

டெல்லி முஸ்லிம் எம்.எல்.ஏ ட்விட்டரில் உண்மையில் பதிந்தது என்ன?

புதுடெல்லி (15 பிப் 2020): டெல்லி முஸ்லிம் எம்.எல்.ஏ அமானதுல்லா கான் ட்விட்டரில் பதிந்ததாக ஒரு பொய் தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. டெல்லியில் சமீபத்தில் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி 62 இடங்களை கைப்பற்றியது. ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட ஷஹின் பாக் பகுதி வேட்பாளர் அமானதுல்லா கான் 72 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர் ட்விட்டரில், “நான் 72000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்….

மேலும்...

மோடியின் சரிவு – சர்வதேச ஊடகங்கள் விமர்சனம்!

புதுடெல்லி (13 பிப் 2020): பிரதமர் மோடியின் சமீபத்திய சரிவுகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது. அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராக பதவியேற்கவுள்ளார். பல முக்கிய தலைவர்கள் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டபோதும், குடியுரிமை சட்டம், மக்கள் விரோத போக்கு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாஜக 8 இடங்களில் மட்டும்தான் வெற்றிபெற…

மேலும்...

ப.சிதம்பரம் மீது மகளிர் காங்கிரஸ் தலைவி காட்டம்!

புதுடெல்லி (12 பிப் 2020): ஆம் ஆத்மி கட்சியை பாராட்டிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை மகளிர் காங்கிரஸ் தலைவி ‌ஷர்மிஸ்தா முகர்ஜி கடுமையாக சாடியுள்ளார். டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. பிரித்தாளும் மோசமான…

மேலும்...

காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் ராஜினாமா!

புதுடெல்லி (12 பிப் 2020): டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று அக் கட்சியின் பொறுப்பாளர் பி.சி.சாக்கோ ராஜினாமா செய்துள்ளார். 70 இடங்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பாஜக எட்டு இடங்களை கைபற்றியது. ஆனால் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. காங்கிரஸ் வேட்பாளர்களில் 63 பேர் டெபாசிட்டுகளை இழந்துள்ளனர். இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவை…

மேலும்...

டெல்லியில் பரபரப்பு – ஆம் ஆத்மி எம்.எல்.ஏ மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!

புதுடெல்லி (12 பிப் 2020): டெல்லியில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆம் ஆத்மி தொண்டர் உயிரிழந்துள்ளார். டெல்லியில் கடந்த சில தினங்களாகவே துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டக் களத்தில் மூன்று முறை துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் செவ்வாயன்று டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்ட நிலையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ நரேஷ் யாதவ் அவரது ஆதரவாளர்களுடன் வெற்றியை கொண்டாடிவிட்டு, கோவிலிலிருந்து திரும்பி வந்து…

மேலும்...

டெல்லியில் ஆம் ஆத்மியின் ஐந்து முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி!

புதுடெல்லி (12 பிப் 2020): நடைபெற்று முடிந்துள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக போட்டியிட்ட ஐந்து முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளதோடு, ஆம் ஆத்மி 62 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி சார்பில் ஐந்து முஸ்லிம் வேட்பாளர்களும் களத்தில் இறக்கப்பட்டனர். டெல்லியின் ஒக்லா தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் அமானத்துல்லா கான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட…

மேலும்...