சட்டசபையில் தன்னைதானே நொந்துகொண்ட ஓ.பி.எஸ்!

சென்னை (28 ஆக 2021): சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தன்னை தானே நொந்து கொண்டார். ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது திமுக அரசு. இந்த தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பி.எஸ்., வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பு மத்திய அரசிடம் தமிழக அரசு விவாதித்ததா? என்ற கேள்வியை எழுப்பினார். அப்போது எழுந்த…

மேலும்...
Supreme court of India

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி.உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

புதுடெல்லி (28 செப் 2020): வேளாண் சட்டங்களை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி.என்.பிரதாபன் உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்துள்ளார். நாடாளுமன்ற இரு அவைகளிலும், எதிர்க்‍கட்சிகளின் கடும் எதிர்ப்புக்‍கு இடையே வேளாண் மசோதாக்‍கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார். இந்த சட்டங்களுக்‍கு எதிரான விவசாயிகளின் போராட்டம் நாடு தழுவிய அளவில் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு நிறைவேற்றி உள்ள 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து…

மேலும்...

வேளாண் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் பந்த் – ரெயில் போக்குவரத்து பாதிப்பு!

புதுடெல்லி (25 செப் 2020): மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நாடு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. வேளாண் மசோதாக்களுக்கு எதிராக மூன்று நாட்கள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக விவசாய சங்கம் (கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி) அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முதல் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் நீடிப்பதால் ரெயில் போக்குவரத்து…

மேலும்...

நீக்கப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் தர்ணா!

புதுடெல்லி (22 செப் 2020):மாநிலங்களவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட எம்பிக்கள் இரவு முழுவதும் தர்ணாவில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட போது கடும் அமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார்கள். திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகளின் உறுப்பினர்கள் துணைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையில் விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட உறுப்பினர்கள் 8 பேரை ஒருவாரம் சஸ்பெண்ட்…

மேலும்...

விவசாயிகள் தீவிரவாதிகள் – கங்கனா ரானாவத் பரபரப்பு விமர்சனம்!

ஜலந்தர் (21 செப் 2020): “வேளாண் மசோதாவுக்கு போராடி வரும் விவசாயிகள் தீவிரவாதிகள்” என்று நடிகை கங்கனா ரானாவத் பகிரங்கமாக விமர்சனம் வைத்துள்ளார். People who spread misinformation and rumours about CAA that caused riots are the same people who are now spreading misinformations about Farmers bill and causing terror in the nation, they are terrorists. You very well know what I…

மேலும்...

விவசாய சட்டத்தின் பின்னுள்ள ஆபத்து!

சென்னை (21 செப் 2020): வேளாண் மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதனால் என்னென்ன பாதிப்பு என்பது குறித்து சமூக வலைதளங்களில் பெரிய விவாதமே நடைபெறுகிறது. இந்நிலையில் எழுத்தாளர் அபிலாஷ் இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து எழுதியுள்ளார். “விவசாயிகள் மசோதா – கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப்படுகிறோம் நாம். முதலில் மாநிலங்கள் வரிவசூலிக்கும் உரிமையைப் பறித்தார்கள். அடுத்து, கல்வி மீதான உரிமையைப் பிடுங்கினார்கள். இப்போது விவசாயிகள் மசோதா வழி அத்தியாவசியப் பொருட்களின் விலையை மாநில அரசு நிர்ணயிக்கும் உரிமையும்…

மேலும்...