ஏர் இந்தியா விமானப் பயணத்தில் நடந்த அசிங்கம் – கண்டுகொள்ளாத விமான நிறுவனம்!

புதுடெல்லி (04 ஜன 2023): ஏர் இந்தியா பிசினஸ் கிளாஸ்-இல் ஆண் பயணி ஒருவர் பெண் பயணியிடம் முறைகேடாக நடந்து கொண்ட விதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணிமீது ஆண் ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார். நியூயார்க்கில் இருந்து டெல்லி செல்லும் ஏஐ-102 ஏர் இந்தியா விமானத்தின் பிசினஸ் கிளாஸ்-இல் இச் சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் பயணி மற்றும் சக பயணிகள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றாலும், சிறுநீர் கழித்தவர்…

மேலும்...

பாதியிலேயே திரும்பிய இந்தியர்களை மீட்கச்சென்ற விமானம்!

புதுடெல்லி (24 பிப் 2022): உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஏஐ- 1947நடுவானில் பாதி வழியிலேயே இந்தியா திரும்பி உள்ளது. ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது அந்நாட்டு படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி உள்ளது. மேலும் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் உக்ரைனின் முக்கியமான நகரங்களில் ஒன்றான ஒடேசாவில் ரஷிய ராணுவ வீரர்கள் நுழைந்துள்ளனர். உக்ரைன் விமான நிலையங்கள்…

மேலும்...

ஜூலை 6 வரை துபாய்க்கு விமான சேவை இல்லை – ஏர் இந்தியா அறிவிப்பு!

புதுடெல்லி (24 ஜூன் 2021): வரும் ஜூலை 6 ஆம் தேதி வரை துபாய்க்கான விமான சேவை தொடங்கப்படாது என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விமான சேவைகள் நேற்று மீண்டும் தொடங்கவிருந்த நிலையில், . பயண ஏற்பாடுகள் தொடர்பான தெளிவின்மை நீங்காததால் துபாய்க்கான எந்த விமான சேவையும் தொடங்கவில்லை. இந்நிலையில், ஜூலை 6 வரை துபாய்க்கு எந்த சேவையும் இருக்காது என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இரண்டு டோஸ்…

மேலும்...

வந்தேபாரத் திட்டத்தில் முறைகேடு – ஏர் இந்தியா மீது அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு!

நியூயார்க் (23 ஜூன் 2020): வந்தேபாரத் திட்டத்தின்படி வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வரும் ஏர்.இந்தியா விமானம் கட்டணங்கள் வசூலிப்பதை அமெரிக்க போக்குவரத்துதுறை எதிர்த்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டிலிருந்து இந்தியா வரமுடியாமல் சிக்கியுள்ள இந்தியர்களை வந்தேபாரத் திட்டத்தின் மூலம் ஏர் இந்தியா விமானம் மீட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா ஏர் இந்தியா விமானங்கள் இயக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானங்களை இயக்குவதற்கு அமெரிக்கா கட்டுப்பாடுளை விதித்துள்ளது. அமெரிக்காவில் இருந்து விமானங்கள் இயக்குவதற்கு முன் அனுமதி…

மேலும்...

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

புதுடெல்லி (25 மே 2020): வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் தாயகத்திற்கு அழைத்து வரும்போது, விமானத்தின் நடு இருக்கைகள் காலியாக விடப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கடந்த வாரம் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்திப் சிங் புரி, விமான சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், நடு இருக்கைகள் காலியாக இருக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். ஏர் இந்தியா விமானியான தேவேன் யோகேஷ் கனானி என்பவர், மும்பை உயர் நீதிமன்றத்தில்‘பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம், மார்ச்…

மேலும்...

ஏர் இந்தியா விமானிகள் ஐந்து பேருக்கு அதிர்ச்சி கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (10 மே 2020): ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஐந்து விமானிகள், தங்களது கடைசி பயணத்தின் 20 நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளனர். தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையானது, 63 ஆயிரத்தினை நெருங்கிக் கொண்டிருக்கக் கூடிய நிலையில் கிட்டதட்ட அனைத்து துறைசார்ந்த நபர்களையும் கொரோனா தாக்கியுள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியாவின் ஐந்து விமானிகள், ஒரு பொறியியலாளர், மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் கொரோனா…

மேலும்...

பாஜக அரசு தேசவிரோத செயலில் ஈடுபடுகிறது – பாஜக மூத்த தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு!

புதுடெல்லி (27 ஜன 2020): ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்வது முழுக்க முழுக்க தேசவிரோதமானது என்று பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 100 % பங்குகளையும், விற்பனை செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பங்குகளை வாங்குவதற்கான விருப்பத்தை தெரிவிக்க, தனியார் நிறுவனங்களுக்கு வரும் மார்ச் மாதம் 17ஆம் தேதியைக் கெடுவாக அறிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு கடனில் சிக்கித்…

மேலும்...

ஏர் இந்தியாவின் மொத்த பங்குகளையும் விற்க மத்திய அரசு முடிவு

புதுடெல்லி (27 ஜன 2020): ஏர் இந்தியாவின் ஒட்டுமொத்த பங்குகளையும் தனியாருக்கு விற்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது ஏர் இந்தியா விமான நிறுவனமானது சுமார் ரூ.58,000 கோடி கடனில் சிக்கித் தவித்து வருகிறது. இது தவிர அந்நிறுவனத்திற்கு ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்களுக்கும் மேல் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனை அடுத்து, ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 100 % பங்குகளையும், விற்பனை செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பங்குகளை வாங்குவதற்கான விருப்பத்தை தெரிவிக்க, தனியார்…

மேலும்...