குஜராத் மாடலை டெல்லியில் நிகழ்த்திப் பார்க்க துடிக்கும் அமித் ஷா பதவி விலக வேண்டும்: திருமாவளவன்!

சென்னை (25 பிப் 2020): டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கவளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா நடத்திய ஊர்வலத்தைத் தொடர்ந்து கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் ஒரு போலீஸ்காரர் உட்பட ஏழு பேர்…

மேலும்...

அமித் ஷா வீட்டை நோக்கி பேரணி – ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் முடிவு!

புதுடெல்லி (16 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டை நோக்கி பேரணி செல்ல முடிவு செய்துள்ளனர். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களை தாண்டி பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிப்ரவரி 16 ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டை நோக்கி…

மேலும்...

டெல்லி தோல்வி எதிரொலி – பதுங்கும் பாஜக -குழப்பத்தில் அமித் ஷா!

புதுடெல்லி (13 பிப் 2020): டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து பாஜக தலைமை குழப்பத்தில் உள்ளது. இன்று டெல்லி தேர்தல் தோல்வி குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சே தோல்விக்கு காரணம்” என்பதை ஒப்புக் கொண்டார். மேலும், “பாகிஸ்தான் போ, சுட்டுத் தள்ளுங்கள்” போன்ற பாஜக தலைவர்களின் வார்த்தைகளை பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அமித் ஷா தெரிவித்தார். அதேவேளை குடியுரிமை சட்டம்தான் பாஜகவின் தோல்விக்கு…

மேலும்...

முதல்வர் அமித் ஷா – அதிர வைத்த சிறுவன்!

ராஞ்சி (07 பிப் 2020): பள்ளிச் சிறுவன் ஒருவனிடம் மாநில முதல்வர் யார்? என்ற கேள்விக்கு அளித்த பதில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. ஜார்க்கண்ட்டில் கல்வி ஜகர்நாத் மாத்தோ, ராம்கர் மாவட்டத்தில் உள்ள கோயா கிராமத்தில் உள்ள பள்ளியை ஆய்வு மேற்கொள்ள சென்றார். அப்போது 7ஆம் வகுப்பறைக்குள் நுழைந்த அமைச்சர், நமது மாநிலத்தின் முதலமைச்சர் யார் என்று ஒரு மாணவனிடம் கேட்டார். அந்த மாணவன் அமித்ஷா என்று பதில் கூறியதும் கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகள்…

மேலும்...

அமித் ஷா உள்ளிட்ட எம்பிக்களின் சொத்து விவரம் எங்கே? – தகவல்அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி!

புதுடெல்லி (24 ஜன 2020): உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட 503 எம்பிக்கள் இதுவரை சொத்து விவபரங்களை தாக்கல் செய்யவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. மக்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், 90 நாட்களுக்குள் தங்களது பெயரில் இருக்கும் அசையும் மற்றும் அசையா சொத்து, வாழ்க்கைத்துணையின் சொத்து விவரங்கள், தங்களுடன் இருக்கும் பிள்ளைகளின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. ஆனால் 2019ம் ஆண்டு…

மேலும்...

மோடி அமித்ஷாவுக்கு எதிராக காய் நகர்த்தும் ராஜ்நாத் சிங்!

மீரட் (23 ஜன 2020): இந்திய முஸ்லிம்கள் மீது யாரும் கை வைக்க முடியாது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மீரட்டில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், இந்தியாவில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே பிரிவினையை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது யாராக இருந்தாலும் சரியே என்றார். மேலும் குடியுரிமை சட்டம் எதிர்கட்சிகளால் சிறுபான்மையினருக்கு எதிரானதுபோல் திசை திருப்பப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். அமித் ஷா, யோகி…

மேலும்...

அமித் ஷாவின் மிரட்டும் அறிவிப்பைத் தொடர்ந்து வலுக்கும் போராட்டம்!

லக்னோ (22 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெற மாட்டோம் என்ற அமித் ஷாவின் அறிவிப்பை தொடர்ந்து போராட்டம் மேலும் வலுப் பெற்றுள்ளது. முஸ்லிம்களை குறிவைத்து இயற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் பாகுபாடின்றி அனைவரும் போராடி வருகின்றனர். குறிப்பாக டெல்லி ஷாஹீன் பாக், உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்கள் பெரும் அளவில் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் “எக்காரணம் கொண்டும் குடியுரிமை சட்டம் திரும்பப் பெற மாட்டாது”…

மேலும்...

குடியுரிமை திருத்தச் சட்டம்: நேருக்கு நேர் விவாதிக்க தயார் – அமித்ஷாவுக்கு உவைசி சவால்!

புதுடெல்லி (22 ஜன 2020): குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்க நானும் தயாராக உள்ளேன் என்று அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுபான்மையினரின் நலனுக்காக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனினும், இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பது, பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து…

மேலும்...

சவாலை ஏற்க தயார் – மோடி அமித் ஷாவுக்கு கபில் சிபல் அறைகூவல்!

புதுடெல்லி (21 ஜன 2020): குடியுரிமை சட்டம் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோருக்கு கபில் சிபல் அழைப்பு விடுத்துள்ளார். நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுபான்மையினரின் நலனுக்காக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனினும், இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பது, பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும்…

மேலும்...

மோடி – அமித் ஷா இடையே கருத்து வேறுபாடு – பகீர் தகவல்!

புதுடெல்லி (19 ஜன 2020): குடியுரிமை சட்ட விவகாரத்தில் பிரதமர் மோடிக்கும் அமித் ஷாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். ராய்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சிஏஏ, என்பிஆர், என்சிஆர் உள்ளிட்ட அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்று சொல்கிறார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, என்சிஆர் நாட்டில் நடைமுறைபடுத்தப்படாது என்கிறார். இங்கு யார் உண்மையைச் சொல்கிறார். யார் பொய் சொல்கிறார்….

மேலும்...