பாஜகவிலிருந்து விலகுவதாக திருச்சி சூர்யா திடீர் அறிவிப்பு!

சென்னை (06 டிச 2022): சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து தாம் விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா. தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் அவருக்கு மாநில ஓபிசி பிரிவு தலைவர் பதவி வழங்கப்பட்டது. அண்மையில் பாஜக நிர்வாகி டெய்சியை செல்போனில் ஆபாசமாக சூர்யா திட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பாஜக பொறுப்பில் இருந்து திருச்சி சூர்யா நீக்கப்பட்டார். இந்த…

மேலும்...

பிரதமர் தமிழக வருகையில் பாதுகாப்பு குறைபாடு – அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு டிஜிபி பதில்!

சென்னை (01 டிச 2022): பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு கடந்த ஜூலை மாதம் சுற்றுப்பயணம் வந்தார். அப்போது, அவரது பாதுகாப்பில் குளறுபடிகள் நடந்ததாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி கொடுத்தார். மேலும் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக கவர்னரை சந்தித்தும் மனு கொடுத்துள்ளதாக அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார். இந்நிலையில் இதுகுறித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று அளித்த பேட்டி ஒன்றில், அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார். அப்போது…

மேலும்...

தமிழக பாஜகவில் விரைவில் அதிரடி மாற்றங்கள் – கலக்கத்தில் பெரிய தலைகள்!

சென்னை (01 டிச 2022): சமீபத்திய நிகழ்வுகளால் தமிழக பாஜகவில் விரைவில் அதிரடி மாற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் திருச்சி சூர்யா சிவா, சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரணுடன் பேசிய போன் உரையால் ஆடியோ கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. டெய்சியை ஆபாசமான வார்த்தைகளால் அர்ச்சித்த சூர்யா, பதவிக்கு வந்தது எப்படி என கேசவ விநாயகத்தையும் தொடர்பு படுத்தி ஆபாசமாகப் பேசினார். இதனைத்…

மேலும்...

சூர்யா டெய்ஸி ஆபாச ஆடியோ வெளியானதன் பின்னணியில் அண்ணாமலை? – அதிர்ச்சியில் மூத்த தலைவர்கள்!

சென்னை (27 நவ 2022): பாஜ பெண் நிர்வாகி டெய்சி, திருச்சி சூர்யா ஆகியோர் பேசிய ஆபாச ஆடியோக்களை மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கலாம் என்கிற தகவல் பாஜக மூத்த தலைவர்கள அதிர வைத்துள்ளது. பாஜக சிறுபான்மையின பெண் நிர்வாகி டெய்சி சரண், ஓபிசி அணி மாநில நிர்வாகி திருச்சி சூர்யா ஆகியோர் ஆபாசமாக பேசும் ஆடியோ ஒன்று சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்தி டெல்லி மேலிடம் உத்தரவிட்டது….

மேலும்...

அண்ணாமலை தலைமைக்கு ஆபத்து – தமிழக பாஜகவில் மாற்றம்!

சென்னை (07 செப் 2022): பாஜகவில் அண்ணாமலை செயல்படும் விதம் பாஜகவினருக்கே பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரைவில் தமிழக தலைமையில் மற்றம் வரலாம் என தெரிகிறது. ஏற்கனவே அண்ணாமலையின் செயல்பாடுகளால் அதிருப்தியில் இருக்கும் மூத்த பாஜக தலைவர்கள் தற்போது மேலும் அதிருப்தியில் உள்ளனர். சமீபத்தில் எல்லையில் இறந்த தமிழக ராணுவ வீரருக்கு மரியாதை செலுத்துவதற்கு, மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த நிதி அமைச்சர் தியாகராஜன் கார் மீது, பா.ஜ.கவினர் செருப்பு வீசிய சம்பவம்…

மேலும்...

அண்ணாமலை ஒரு தகுதியற்றவர் – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பளீர்!

சென்னை (28 மார்ச் 2022): தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக பட்ஜெட்டில் ஏதேனும் தவறு இருப்பதாக கருதினால் அது அறியாமை என்றும் நான் பொய் சொல்வதாக நினைத்தால் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார். தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு மாநில பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்தார். அவர்…

மேலும்...

அதை விட்டுவிட்டு இதற்கு ஏன்? – அண்ணாமலையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

சென்னை (22 மார்ச் 2022): தமிழக பட்ஜெட் தொடர்பாக போராட்டம் நடத்தப்போவதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ள நிலையில் நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி முதல் 137 நாட்களாக தொடர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.81க்கு விற்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை திடீரென உயர்ந்துள்ளது. 137 நாட்களுக்குப் பின்னர் சென்னையில் பெட்ரோல் விலை 76 காசுகள் அதிகரித்து 102 ரூபாய் 16 காசுகளுக்கு…

மேலும்...

பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுனருடன் திடீர் சந்திப்பு!

சென்னை (21 மார்ச் 2022): தமிழ்நாடு மின்வாரியம் பி.ஜி.ஆர். நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து இருக்கிறார். கடந்த 16 ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ரூ.355 கோடி இழப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனமான பி.ஜி.ஆர். எனர்ஜியிடம் முறைகேடாக ரூ.4,442 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து இருப்பதாக குற்றம்சாட்டினார். இந்த நிலையில், இன்று காலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை…

மேலும்...

அண்ணாமலைக்கு எந்த தகுதியும் கிடையாது – கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை (23 பிப் 2022): தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது என்று அண்ணாமலை கூறுவதற்கு எந்தத் தகுதியும் கிடையாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது. கடந்த மக்களவை, சட்டமன்றம், ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் எத்தகைய பெருவெற்றியைத் தமிழக மக்கள் வழங்கினார்களோ, அதைவிடக் கூடுதலாக…

மேலும்...

தமிழகத்தில் ஹிஜாபுக்கு தடை – பாஜக அண்ணாமலை!

குன்னூர் (15 பிப் 2022): தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பள்ளி கல்லூரிகளில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் குன்னூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது: “தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்படும். பொதுவெளியில் வேண்டுமானால் ஹிஜாப் அணியலாம். ஆனால் பள்ளி கல்லூரிகளில்…

மேலும்...