டெல்லியில் மசூதி மீது தீ வைத்ததை படம் பிடித்த செய்தியாளர்கள் மீது தாக்குதல்!

புதுடெல்லி (25 பிப் 2020): டெல்லி வன்முறையின்போது மசூதி மீது தீ வைத்த கும்பலை படம் பிடித்த என்டிடிவி செய்தியாளர்கள் வன்முறையாளர்களால் தாக்கப்பட்டுள்ளார். டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகவே பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள் அன்று டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டுள்ளது. இந்த வன்முறையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில்…

மேலும்...

அரசை கேள்வி கேட்க யாரும் இல்லையா? டெல்லி அரச அடக்குமுறைக்கு எதிராக குமுறும் மாணவர்கள்!

புதுடெல்லி (10 பிப் 2020): “எங்கள் மீது அத்துமீறும் போலீசையும் அரசையும் கேள்வி கேட்க நாட்டில் யாரும் இல்லையா?” என்று கொந்தளிக்கின்றனர். டெல்லி மாணவர்கள். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அமைதி வழியில் போராடும் மாணவர்களை போலீஸார் கொடூரமாக தாக்கும் படலம் தொடர்கிறது. டெல்லியில் அமைதி வழியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது ஜாமியா மாணவிகள் மீது போலீசார் இன்றும் கொடூர தாக்குதலை மேற்கொண்டனர்.. ஜாமிய மில்லியா மாணவர்கள் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியாக பேரணி மேற்கொண்டனர். அப்போது…

மேலும்...

டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட பெண் யார் என்பது தெரிந்தது!

புதுடெல்லி (13 ஜன 2020): டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய பெண் ஏபிவிபியை சேர்ந்த பெண் என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி 5 ம் தேதி டில்லி ஜே.என்யு.,வில் முகமூடி அணிந்த கும்பல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கண்மூடி தனமாக தாக்குதல் நடத்தியது. இதில் பலர் காயமடைந்தனர். இந்த வன்முறை தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த டில்லி கிரைம் பிராஞ்ச் போலீசார், முகமூடி அணிந்து தாக்குதல் நடத்தியவர்களின் புகைப்படங்களைக் கொண்டு…

மேலும்...

மேற்கு வங்கத்தில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி!

கொல்கத்தா (07 ஜன 2020): டெல்லி ஜேஎன்யூ மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் விதமாக கொல்கத்தாவில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சபர்மதி விடுதிக்குள் ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த சிலர் உள்ளே நுழைந்து விடுதியை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அயிஷ் கோஷ் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அவர் தலை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் காயம் அடைந்த 20 மாணவர்கள் எய்ம்ஸ்…

மேலும்...

டெல்லி ஜே.என். யூ பல்கலைக் கழக தாக்குதலின் பின்னணியில் யார்? – அய்ஷி கோஷ் பரபரப்பு தகவல்!

புதுடெல்லி (07 ஜன 2020): “டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏபிவிபி அமைப்பினரே உள்ளனர்!” என்று ஜே.என்.யூ மாணவர் சங்க தலைவர் அய்ஷி கோஷ் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (05-01-2020) மாலை ஜே.என்.யூ பல்கலைக்கழத்தின் மாணவ, மாணவிகள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல், அங்கிருந்த கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்கள். ஆர்எஸ்எஸ்…

மேலும்...

மருத்துவர்கள், செவிலியர்களையும் விட்டு வைக்காத ஏபிவிபி குண்டர்கள்!

புதுடெல்லி (06 ஜன 2020): டெல்லி ஜெ.என்.யுவில் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீதும் ஏபிவிபி குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வந்து ஏபிவிபி குண்டர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் மாணவர் பேரவை தலைவர் ஆயிஷ் கோஷ் பலத்த காயம் அடைந்தார். மேலும் காயம் அடைந்த 20 பேர் டெல்லி எய்ம்ஸ்…

மேலும்...

டெல்லி பல்கலைக்கழக தாக்குதல் – 20 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

புதுடெல்லி (06 ஜன 2020): டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தக்குதலில் காயம் அடைந்த 20 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சபர்மதி விடுதிக்குள் ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த சிலர் உள்ளே நுழைந்து விடுதியை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அயிஷ் கோஷ் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அவர் தலை உடைந்து ரத்தம் கொட்டியது. முன்னதாக நேற்று முன்தினம் ஏ.பி.வி.பியைச் சேர்ந்த…

மேலும்...

டெல்லியில் பரபரப்பு – ஜே என் யூ மாணவர் சங்கத் தலைவர் மீது கொலை வெறி தாக்குதல்!

புதுடெல்லி (05 ஜன 2020): டெல்லி ஜவஹர்லால் நேரு (JNU) பல்கலைக்கழகம் மாணவர்கள் சங்க தலைவர் அய்ஷி கோஷ் மீது கொடூர தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. முகமூடி அணிந்து வந்த நபர்கள் மூர்க்கத்தனமாக தாக்கியதாக அய்ஷி கோஷ் புகார் தெரிவித்துள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சபர்மதி விடுதிக்குள் ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த சிலர் உள்ளே நுழைந்து விடுதியை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அயிஷ் கோஷ் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்….

மேலும்...