தேச துரோக வழக்கில் சிறையில் உள்ள ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (30 செப் 2022): சிஏஏ வழக்கில் 2019 முதல் சிறையில் உள்ள ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவர் மீது வேறு வழக்குகள் உள்ளதால் தொடர்ந்து அவர் காவலில் இருக்க நேர்ந்துள்ளது. கடந்த. 2019 ஆம் ஆண்டு ஜாமியா நகர் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பேசிய உரைக்காக ஷர்ஜீல் இமாம் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். ஷர்ஜீல் இமாம் மீது பல வழக்குகள்…

மேலும்...

பத்திரிகையாளர் சித்திக் கப்பன் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவது எப்போது?

லக்னோ (09 செப் 2022): பத்திரிகையாளர் சித்திக் கப்பன் அடுத்த வாரம் லக்னோ சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று ஒரு அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார், “சித்திக் கப்பன் கடந்த சில மாதங்களாக லக்னோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் உத்தரவு இங்கு சமர்ப்பிக்கப்பட்டதும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விடுதலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார், ”என்று டிஜிபி (சிறை) அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி (பிஆர்ஓ) சந்தோஷ் குமார் வர்மா கூறினார். கடந்த 2020ஆம்…

மேலும்...

பிரபல ஊடகவியலாளர் முஹம்மது ஜுபைர் விடுதலை – வீடியோ!

புதுடெல்லி (21 ஜூலை 2022): ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் உச்ச நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டர். மத உணர்வை புண்படுத்தியதாக ஜுபைரின் பழைய ட்வீட்டர் பதிவை வைத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதான நிலையில், அவர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து எஃப்ஐஆர்களிலும் உச்ச நீதிமன்றத்தால் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இதனை அடுத்து சில மணிநேரங்களுக்குப் பிறகு, புதன்கிழமை இரவு திகாரில் இருந்து ஜுபைர் விடுவிக்கப்பட்டார் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்….

மேலும்...

ஊடகவியலாளர் ஜுபைர் ஜாமீன் மனு நீதிமன்றம் நிராகரிப்பு!

புதுடெல்லி (02 ஜூலை 2022):ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைரின் ஜாமீன் மனுவை டெல்லியின் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் நிராகரித்தது, மேலும் ஜுபைருக்கு 14 நாள் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது ஜுபைர் கடந்த 2018 இல், இந்து தெய்வத்திற்கு எதிராக பதிவிட்டதாக்க கூறி டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜுபைர் ஜாமின் கோரி மனு அளித்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜுபைரின் ஜாமீன் மனுவை நிராகரித்தது. மேலும் டெல்லி காவல்துறையின் மனுவை…

மேலும்...

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் உத்திரவாதம் கொடுத்த நடிகை – மகிழ்ச்சியில் ஷாருக் வீடு!

மும்பை (29 அக் 2021): நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைதாக சிறையிலடைக்கப் பட்ட நிலையில் அவர் இன்று ஜாமீனில் விடுதலையானார். நேற்று ஜாமீன் கிடைத்தாலும் ஜாமீன் நகல் இன்றுதான் கிடைத்தது. ஆர்யன் கான் வழக்கறிஞரிடம் நீதிமன்ற பதிவாளர் தீர்ப்பின் நகலை இன்று மதியம் வழங்கினார். ஐந்து பக்கங்கள் கொண்ட தீர்ப்பு நகலில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, ஆர்யன் வெளிநாட்டுக்குச் செல்வதாக இருந்தால், அனுமதி வாங்கித்தான் செல்லவேண்டும். நீதிமன்ற…

மேலும்...

அர்ணாப் கோஸ்வாமியின் ஜாமீன் மேலும் நீட்டிப்பு – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (27 நவ 2020): ரிபப்ளிக் டிவி தலைமை செய்தியாளர் அர்ணாப் கோஸ்வாமியின் ஜாமீனை மேலும் நான்கு வாரங்கள் நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்வாய் நாயக் என்னும் ஆர்கிடெக்ட் மற்றும் அவரது தாயார் 2018ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டனர். அன்வாய் தனது தற்கொலைக் கடிதத்தில் தனது மரணத்துக்குக் காரணமாக ரிபப்ளிக் டிவியின் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி பெயரைக் குறிப்பிட்டு இருந்தார். இதன் அடிப்படையில் அர்ணாப் மீதான மறு விசாரணையில் அர்ணாப் கோஸ்வாமியை மும்பை…

மேலும்...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட வழக்கில் கைதான இஸ்ரத் ஜஹானுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன்!

புதுடெல்லி (30 மே 2020): காங்கிரஸ் முன்னாள் நகராட்சி கவுன்சிலரும், சிஏஏ-என்ஆர்சிஐ-என்ஆர்சி எதிர்ப்பாளருமான இஷ்ரத் ஜஹானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை சட்ட எதிர்ப்பு அமைதி போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்ரத் ஜஹான் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ராணா ஜஹானுக்கு ஜூன் 10 முதல் ஜூன் 19 வரை இடைக்கால ஜாமீன் வழங்கினார். இஷ்ரத் மீதான ஜாமீன் மனுவில், இந்த விவகாரத்தில்…

மேலும்...

நெஞ்சு வலி காரணமாக நெல்லை கண்ணன் மருத்துவமனையில் அனுமதி!

திருநெல்வேலி (30 ஜன 2020): நெல்லை கண்ணன் நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடநத பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டார். பின்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர் தினமும் காலையும், மாலையும் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில் நெஞ்சுவலி, மூச்சித்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும்...

2002 குஜராத் கலவரத்தில் முஸ்லிம்களை எரித்துக் கொன்றவர்களுக்கு ஜாமீன்!

புதுடெல்லி (28 ஜன 2020): 2002 குஜராத் வன்முறையில் முஸ்லிம்களை எரித்துக் கொலை செய்த குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 2002 குஜராத் கலவரத்தில் 2000 க்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். நாட்டை உலுக்கிய இச்சம்பவத்தில், சர்தார்பூராவில் 33 முஸ்லிம்கள் உயிருடன் எரிக்கப்பட்டதும் அடங்கும். அந்த வழக்கு தனியாக நடைபெற்று வந்தது. இதில் 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது. மேலும் அவர்கள் மத்திய பிரதேசத்துக்கு…

மேலும்...

சந்திரசேகர் ஆசாத்துக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!

புதுடெல்லி (15 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பிம் இராணுவத் தலைவர் சந்திரசேகர் ஆசாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. டெல்லி பகுதியில் உள்ள ஜும்மா மஸ்ஜித்தில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்திற்கு தலைமை தாங்கியதை அடுத்து சந்திரசேகர் ஆசாத் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் பீம் இராணுவத் தலைவர் சந்திரசேகர் ஆசாத்திற்கு டெல்லி நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமின் வழங்கியுள்ளது. ஆனால்…

மேலும்...