பாஜகவுடன் நிதிஷ் கூட்டணி முறிவு – பகீர் கிளப்பும் சிராக் பாஸ்வான்!

பாட்னா (02 நவ 2020): பா.ஜ.க. கூட்டணியிலிருந்து நிதிஷ் குமார் விரைவில் விலகுவார் என்று லோக் ஜனசக்தி கட்சியின் சிராக் பாஸ்வான் கூறியுள்ளார். பீகாரில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலுக்கு மத்தியில் மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானின் மகனும், லோக் ஜனசக்தி கட்சியை சேர்ந்தவருமான சிராக் பாஸ்வான், நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் நேரத்துக்கு நேரம் தன் நிலையை மாற்றும் மனநிலை கொண்டவர்….

மேலும்...

பிகார் தேர்தல் பரபரப்பு – நான் வன்புணர்ந்து கொல்லப்படுவேன்: பிரபல நடிகை பகீர் தகவல்!

மும்பை (30 அக் 2020): பிகார் தேர்தல் பரபரப்பின் ஒரு பகுதியாக பிரபல பாலிவுட் நடிகை அமீமிஷா படேல் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில் நடிகை அமீஷா தெரிவித்துள்ளதாவது: லோக் ஜான்ஷக்தி வேட்பாளர் பிரகாஷ் சந்திராவுக்காக பிரச்சாரம் மேற்கொண்டபோது அவர் சார்பில் தனக்குச் சொல்லப்பட்டதை மட்டுமே சொல்லவும் செயல்படவும் நிர்பந்திக்கப்பட்டேன். ஒருவேளை அதனை மறுத்தால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட வாய்ப்புள்ளதாகவும் உணர்கிறேன். நான் மும்பை வந்து சேரும் வரை பாதுகாப்பற்ற…

மேலும்...

ராமர் கோவிலைபோல் சீதாவுக்கு கோவில் – லோக் ஜனசக்தி பிரச்சாரம்!

பாட்னா (25 அக் 2020): பிகாரில் சீதா வுக்கு கோவில் கட்டப்படும் என்று லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார். பிகாரில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் பா.ஜ.க.வின் ராம் கோயில் பிரச்சாரத்தைப் போலவே, சீதாவின் பிறப்பிடமாகக் கருதப்படும் பிகாரில் சிறப்பு கோயில் கட்டப்படும் என்று சிராக் பாஸ்வான் கூறினார். சீதா தேவி இல்லாமல் ராமர் முழுமையடைய மாட்டார் என்று தெரிவித்த சிராக், பீகாரில் கட்டப்படும் சீதா கோயிலை அயோத்தியில்…

மேலும்...

கொரோனாவை காட்டி தேர்தல் அறிக்கை – பாஜகவின் சித்து விளையாட்டு!

பாட்னா (22 அக் 2020): பிகாரில் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்பதாக பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோய் கால கட்டத்தில் இந்தியாவில் நடைபெறும் முதல் தேர்தல் பீகார் சட்டமன்றத் தேர்தல்கள் ஆகும். அக்டோபர் 28 முதல் நவம்பர் 7 வரை நடைபெறவிருக்கும் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (என்.டி.ஏ) பிரதான எதிர்க்கட்சியான மகாகத்பந்தனுக்கும் (எம்ஜிபி) நேரடிப் போட்டி ஏற்பட்டு உள்ளது. சமீபத்திய பாஜக மீதான பொதுமக்களின் அதிருப்தியால் பாஜக நிதிஷ் கூட்டணி…

மேலும்...

பீகாரில் மின்னல் தாக்கியதில் 83 பேர் பலி!

பாட்னா (25 ஜூன் 2020): பீகாரில் மின்னல் தாக்கியதில் 83 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பீகார் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் பீகாரின் பல பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 83 பேர் பலியாகியுள்ளனர். கோபால்கஞ்ச் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 13 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் நவாடா மாவட்டத்தில் 8 பேரும், சிவான் மற்றும் பாகல்பூர் மாவட்டத்தில் தலா 6 பேரும்,தர்பங்கா,…

மேலும்...

பீகாரில் 32 இடங்களில் போட்டியிடும் அசாதுத்தீன் உவைசி கட்சி!

ஐதராபாத் (10 ஜூன் 2020): ஐதராபாத் எம்பி அசாதுத்தீன் உவைசி தலைமையிலான AIMIM கட்சி, இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலில் 32 இடங்களுக்கு போட்டியிடுவதாக தெரிவித்துள்ளது. AIMIM கட்சி பீகார் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்துகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் கிஷன்கஞ்ச் தொகுதியை வென்ற கம்ருல் ஹுதா என்ற எம்.எல்.ஏ. வை தொடர்ந்து பீகாரில் மேலும் கட்சியை விரிவு படுத்த உவைசி கட்சி முன்வந்துள்ளது. இதுகுறித்து பீகார் எய்ஐஎம் தலைவர்…

மேலும்...

கொரோனா வைரஸ் தனிமை வார்டில் இருந்த பெண் வன்புணர்ந்து கொலை!

பாட்னா (09 ஏப் 2020): கொரோனா வைரஸ் தனிமை வார்டில் இருந்த பெண் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் கயா மாவட்டத்தில் வசிக்கும் 25 வயது பெண் ஒருவர் பஞ்சாபிலிருந்து திரும்பியிருந்தார். அவர் பஞ்சாபின் லூதியானாவில் இரண்டு மாத கர்ப்பினியாகவும் இருந்தார். ஆனால் அவருக்கு திடீரென குழந்தை கலைந்து விட்டது. உடனே மருத்துவர்களின் பரிந்துரைப்படி பஞ்சாபில் D and C செய்யப்பட்டது. அதன் பின்பு பீகாருக்கு திரும்பியிருந்தார். ஆனால் அவருக்கு இரத்தப் போக்கு…

மேலும்...

கூட்டணியில் இருந்து கொண்டே பாஜக அரசின் சட்டத்திற்கு எதிராக தீர்மானம்!

பாட்னா (26 பிப் 2020): பிகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) கணக்கெடுப்புக்கு எதிராக, அந்த மாநில சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பிகாா் சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை காலை கூடியபோது, சிஏஏ, என்ஆா்சி, என்பிஆா் ஆகியவை குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிா்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோா் ஒத்திவைப்பு தீா்மானம் கொண்டுவந்தனா். கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, இந்த விவகாரங்கள் தொடா்பாக விவாதிக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா். அதற்கு சட்டப் பேரவை விவகாரங்கள்…

மேலும்...

ஜே.என்.யூ மாணவர் ஷார்ஜில் இமாம் கைது!

பாட்னா (28 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ஜே.என்.யு மாணவர் ஷர்ஜில் இமாம் கைது செய்யப்பட்டுள்ளார். வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவிலிருந்து பிரித்துவிடலாம் என்று பேசியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஷர்ஜில் இமாம் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் உபி.யில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக உத்தரபிரதேச போலீசாரும் இவர் மீது வழக்கு…

மேலும்...

சீனாவிலிருந்து வந்த இந்தியப் பெண்ணுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு!

பாட்னா (27 ஜன 2020): சீனாவில் இருந்து இந்தியா வந்த 29 வயது பெண்ணுக்கு கரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் அவர் பாட்னா மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப் பட்டுள்ளார். சாப்ரா மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஏக்தா குமாரி. இவர், சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள டியான்ஸின் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி தொடர்பாக பயின்று வந்தார். சமீபத்தில் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய ஏக்தாவுக்கு, உடல் ரீதியிலான சிரமங்கள் ஏற்பட்டன. இதனால், அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற…

மேலும்...