பீகார் கல்லூரியில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை!

பாட்னா (25 ஜன 2020): பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு கல்லூரியில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது திரும்ப பெறப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் ஜே.டி பெண்கள் கல்லூரி உள்ளது. அங்கு சமீபத்தில் சர்ச்சைக்குரிய ஒரு அறிவிப்பு வெளியானதால், மாணவர்களும் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அறிவிப்பில், “முஸ்லிம் பெண்கள் கல்லூரி வளாகத்திற்குள் புர்கா அணியக் கூடாது!” என்றும் “மீறினால் ரூ.250 அபராதம் விதிக்கப்படும்!” எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த…

மேலும்...

நிதிஷ்குமார் திடீர் மாற்றம் – பாஜக கூட்டணிக்குள் பிளவு ஏற்பட வாய்ப்பு!

பாட்னா (13 ஜன 2020): குடியுரிமை சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தேவையில்லை என்றும் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளமை பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து, குடியுரிமை சட்டத்திருத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தும் பாஜக கூட்டணியில் உள்ள முதல் கட்சியாக ஜேடியு உருவெடுத்துள்ளது….

மேலும்...