மாணவி தற்கொலை வழக்கில் பாஜக தொண்டர் கைது!

பெங்களூரு (16 ஜன 2023): கர்நாடகாவில் மைனர் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், பாஜக பிரமுகர் கைது செய்யப் பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் சிக்கமங்களூரு மாவட்டம் குத்ரேமுக் பகுதியைச் சேர்ந்த நித்தேஷ் (25), அப்பகுதியில் பாஜக பிரமுகராவார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். பின்பு மாணவியை நித்தேஷ் திருமணம் செய்ய மறுத்ததால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அடுத்து இந்த வழக்கில் பாஜக பிரமுகரான…

மேலும்...

வெட்கக்கேடானது – குஷ்பு அதிரடி கருத்து!

கோவை (08ன் ஜன 2023): தமிழக அரசு பொங்கல் பரிசாக மக்களுக்கு ரூ.1000 மட்டுமே கொடுப்பது வெட்கக்கேடானது. பாஜக தேசியக்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட பாஜக சார்பில் நம்ம ஊர் பொங்கல் திருவிழா இன்று வெள்ளலூரில் நடைபெற்றது. இதில் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். அவர் அங்கு பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்தார். பொங்கல் திருவிழாவையொட்டி அங்கு நாட்டுபுற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. பெண்கள், ஆண்கள் ஒன்றிணைந்து பாடல் பாடி கும்மி அடித்து…

மேலும்...

துபாய் ஹோட்டலில் நடந்தது என்ன? – பெண்களுக்கு எதிரான அண்ணாமலை – விளாசும் காயத்ரி ரகுராம்!

சென்னை (04 ஜன 2023): தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான பாலியல் சர்ச்சை புகார்கள் எழுந்துள்ள நிலையில், நடிகையும் பாஜக உறுப்பினருமான காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். காயத்ரி ரகுராம், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி 6 மாதத்துக்கு சஸ்பெண்டு செய்யப்படுவதாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டார். அன்றுமுதல் தமிழக பாஜக பொறுப்புகளிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருந்தார் காயத்ரி ரகுராம். பாஜக-வில் இருந்து விலகிய நிலையில் தனியார்…

மேலும்...

திரிபுராவில் பாஜகவுக்கு பலத்த அடி!

அகர்தலா (29 டிச 2022): : திரிபுராவில் பாஜக எம்எல்ஏ திபச்சந்திரா ஹ்ரான்கவுல் கட்சியில் இருந்து விலகினார். எம்.எல்.ஏக்களின் தொடர் விலகலால் அங்கு பாஜக ஆட்டம் கண்டுள்ளது. இவர் ஓராண்டில் கட்சியிலிருந்து வெளியேறும் எட்டாவது எம்.எல்.ஏ. திபச்சந்திரா காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மூன்று முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த 67 வயதான இவர், 2018 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இணைந்தார். அவர் தலாய் மாவட்டத்தில் உள்ள கரம்சேராவில் சிட்டிங் எம்.எல்.ஏவாக இருந்தார். பாஜக…

மேலும்...

வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்ட அண்ணாமலை – விடாது துரத்தும் செந்தில்பாலாஜி!

சென்னை (18 டிச 2022): தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் பல லட்சம் மதிப்புடைய ரபேல் வாட்ச் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அண்ணாமலைக்கும் ட்விட்டரில் வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. அண்ணாமலையை செந்தில் பாலாஜி கேள்விகள் மூலம் துளைத்து வருகிறார். இந்நிலையில் சொத்துக் கணக்குகள் அனைத்தையும் காட்டுகிறேன் என்பதாக அண்ணாமலை இட்டுள்ள பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பதிவி கூறியிருப்பதாவது: சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என…

மேலும்...

ஆடு வளர்த்து 5 லட்சத்துக்கு கடிகாரம் வாங்கியது எப்படி? அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி!

சென்னை (18 டிச 2022): ரபேல் வாட்ச் வாங்கியதற்கான ரசீதை வெளியிட முடியுமா? என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பான அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பிரான்ஸ் நிறுவத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்பவர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள்…

மேலும்...

முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் பாஜக பிரமுகர் மீது வழக்கு பதிவு!

அஹமதாபாத் (17 டிச 2022): குஜராத்தில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் பாஜக பிரமுகர் சலீம் நூர் முகமது வோரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சலீம் நூர் முகமது வோரா தனது 22 வயது மனைவிக்கு உடனடி தலாக் கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளார். மேலும் சலீம் மீது முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2019, வரதட்சணை தடைச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிற பிரிவுகளின் கீழ்…

மேலும்...

பாஜகவுக்கு தைரியம் இல்லை; உமர் அப்துல்லா!

ஸ்ரீநகர் (14 டிச 2022): : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேர்தலை நடத்த ஒன்றிய அரசிடம் இனி கெஞ்சப்போவதில்லை என முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா கூறியுள்ளார். பஹல்காமில் செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, தேர்தலை தாமதப்படுத்துவது குறித்து தங்கள் கட்சிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், காஷ்மீரில் தேர்தலை நடத்த பாஜக பயப்படுவதாகவும் கூறினார். மத்திய அரசு எப்போது தேர்தல் நடத்தினாலும் தேசிய மாநாடு தயாராக உள்ளது. ஆனால்…

மேலும்...

துபாய் ஹோட்டலில் சந்தித்த நபர் – அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் கேள்வி!

சென்னை (14 டிச 2022): துபாய் ஹோட்டலில் நான் சந்தித்ததாக கூறப்படும் நபர் குறித்து அண்ணமலை பதிலளிப்பார் என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். திருச்சி சூர்யா – டெய்சி ஆபாச ஆடியோ விவகாரத்தில் பாஜகவிலிருந்து 6 மாதம் நீக்கப்பட்டுள்ளார் நடிகை காயத்ரி ரகுராம். தற்போது பாஜக குறித்து பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகிறார் காயத்ரி ரகுராம். இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் காயத்ரி ரகுராம், “முதலில் நான் சென்னை சோமர்செட் ஓட்டலில் சந்தித்ததாக தவறான முறையில்…

மேலும்...

தமிழக பாஜக தலைவராகும் அமர் பிரசாத் ரெட்டி?- அதிர்ச்சியில் அண்ணாமலை!

சென்னை (13 டிச 2022): தமிழக பாஜக தலைவராவதற்காக அமர் பிரசாத் ரெட்டி காய் நகர்த்தி வருவதாக திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆபாச ஆடியோ விவகாரத்தில் சிக்கி சின்னாபின்னமான திருச்சி சூர்யா பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் பாஜகவிலிருந்து விலகிய பின்பு பாஜக தலைவர்கள் பலர் மீது பகீர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். குறிப்பாக ஆர் எஸ் எஸ் கேசவ விநாயகம் என்பவர் மீது சில குற்றச்சாட்டுகளை வைத்தார். இந்நிலையில் யூடூப் சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள…

மேலும்...