சென்னை எக்மோர் ரெயில் நிலையத்தில் டீ காப்பி சாப்பிடுபவர்கள் ஜாக்கிரதை!

சென்னை (18 ஜன 2020): சென்னை எக்மோர் ரெயில் நிலையத்தில் டீ தயாரிப்பவர் பால் காய்ச்ச கழிவரைக்கு உபயோகிக்கும் நீரை பயன்படுத்தியுள்ளார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ஒரு ஊழியர் ரெயில் கழிவரைக்கு பயன்படுத்த செல்லும் நீரை பிடித்து அதில் பால் காய்ச்சுவது போன்று உள்ளது. இதற்கிடையே அந்த வீடியோ வைரலானதை அடுத்து அந்த கடையை மூடி ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பதாக இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

ஒரே நாளில் சென்னையை அதிர வைத்த இரண்டு சம்பவங்கள்!

சென்னை (15 ஜன 2020): ஒரே நாளில் இரண்டு கொலை சம்பவங்கள் சென்னையை அதிர வைத்துள்ளன. சென்னை மாங்காடு பகுதியில் நடந்துள்ளது. சென்னையை அடுத்த மாங்காடு அருகே உள்ள கோவூர், அனு கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (28), பெயின்டர் மற்றும் வாகனங்களைப் பறிமுதல் செய்யும் வேலை செய்துவந்தார். நேற்றிரவு வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரின் உறவினர்கள் யுவராஜைத் தேடினர். அப்போது கோவூர், ஈஸ்வரன் நகர் பகுதியில் யுவராஜ் சரமாரியாக வெட்டி கொலை…

மேலும்...

சென்னை மக்களுக்கு குளு குளு செய்தி!

சென்னை (10 ஜன 2020): சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், சாதாரண மக்களும் பயணிக்கின்ற வகையில் குளிர்சாதனப் பேருந்துகள் இன்று (10.01.2020) முதல் இயக்கப்படுகின்றது. குளிர் சாதனப் பேருந்தினை நேற்று (09.01.2020) தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பார்வையிட்டனர். நவீன முறையில், நல்ல தரத்தில் இருக்கைகள் வடிவமைக்கப்பட்டு, 40 பயணிகள் அமர்ந்த நிலையிலும், 20 பயணிகள் நின்ற நிலையிலும் பயணம் செய்யலாம். மேலும், பயணிகள் அடுத்த…

மேலும்...
போலீசுடன் மனைவிக்கு கள்ளத் தொடர்பு - பரிதவிக்கும் துபாய் கணவன்!

போலீசுடன் மனைவிக்கு கள்ளத் தொடர்பு – பரிதவிக்கும் துபாய் கணவன்!

சென்னை (09 ஜன 2020): சென்னையில் போலீசுடன் மனைவிக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாகவும் இருவரும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கணவர் புகார் அளித்துள்ளார். சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் ஜனார்த்தன். இவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி நர்மதா சென்னையில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் நர்மதாவுக்கும் போலீஸ் அதிகாரிக்கும் கள்ளத் தொடர்பு இருப்பது ஜனார்த்தனனுக்கு தெரிய வந்தது. இதனை தட்டிக் கேட்ட ஜனார்த்தனுக்கு இருவரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும், இரண்டு பிள்ளைகளுக்காக…

மேலும்...
சென்னை புத்தக கண்காட்சி - பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சர்ப்ரைஸ்!

சென்னை புத்தக கண்காட்சி – பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சர்ப்ரைஸ்!

சென்னை (09 ஜன 2020): சென்னை புத்தக கண்காட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ”புரட்சி பாதையில் கைத்துப்பாக்கிகளை விட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே” என்று லெனின் கூறியிருக்கிறார். “உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ, அதுபோல மனதுக்கு பயிற்சி புத்தக வாசிப்பு” என்று சிக்மண்ட் ஃப்ராய்ட் சொல்லியிருக்கிறார். அத்தகைய சிறப்பு வாய்ந்த புத்தகங்களை அதுவும் லட்சக்கணக்கில் ஒரே இடத்தில் பார்த்தால் எவ்வளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதுவும் வெறும் காட்சிக்கு மட்டுமல்ல விலைக்கு வாங்கிச்…

மேலும்...