சென்னையில் போராட்டத்தின்போது உயிரிழந்தவர் உடலுடன் பொதுமக்கள் போராட்டம்!

சென்னை (15 பிப் 2020): சென்னை வண்ணாரப் பேட்டையில் போராட்டத்தின்போது உயிரிழந்தவர் உடலுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று அமைதி வழியில் தொடர் போராட்டத்தை பெண்கள் முன்னெடுத்த நிலையில் அவர்கள் மீது காவல்துறை கொடூரமானத் தாக்குதலை நடத்தியுள்ளது. சென்னை மாநகர காவல்துறையின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதாக உள்ளது என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. மேலும் நேற்று போலீசார் தடியடி நடத்தியபோது முதியவர்…

மேலும்...

தமிழகம் முழுவதும் இரண்டாவது நாளாக பொதுமக்கள் தொடர் போராட்டம்!

சென்னை (15 பிப் 2020): சிஏஏ வை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டை, மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் இரண்டாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், பெண்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதை கண்டித்து இரவில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியை போல் சென்னையில் ஷஹீன் பாக் என்ற பெயரில் பெண்கள் வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட போது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேபோல…

மேலும்...

பிப்ரவரி 14 ஐ கறுப்பு இரவாக்கிய காவல்துறை மீது நடவடிக்கை தேவை – ஸ்டாலின் கண்டனம்!

சென்னை (15 பிப் 2020): குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டக் காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய அத்துமீறலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்ல் இது தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மத்திய பா.ஜ.க அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு கடும் தாக்குதல் நடத்திய எடப்பாடி அரசின் காவல்துறைக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு; கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு அவர்கள் மீதான…

மேலும்...

சென்னை போலீஸ் தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நள்ளிரவில் ஆர்ப்பாட்டம்!

சென்னை (14 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதை கண்டித்து, மக்கள் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். வண்ணாரப்பேட்டையில் தொடர் போராட்டத்தை பெண்கள் முன்னெடுத்த நிலையில் அவர்கள் மீது காவல்துறை கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது. சென்னை மாநகர காவல்துறையின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதாக உள்ளது. இந்நிலையில் சென்னையில் போலீஸ் நடத்திய தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும்...

பெண்களிடம் கண்ணியமற்ற முறையில் நடந்த காவல்துறைக்கு ஜமாத்துல் உலமா சபை கடும் கண்டனம்!

சென்னை (14 பிப் 2020): சென்னை வண்ணாரப் பேட்டையில் காவல்துறை நடத்திய அராஜக வெறியாட்டத்திற்கு ஜமாத்துல் உலமா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த உலமா சபையின் அறிக்கையில் , “அமைதி வழியில் போராடிய பெண்கள் மீது காவல்துறை கண்ணியமற்ற முறையில் நடந்தது கடும் கண்டனத்துக்குரியது. மேலும் தடியடி நடத்திய காவல்துறை மீது அரசு துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் கருப்புச் சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.” என்று…

மேலும்...

ஜனநாயக ரீதியான போராட்டங்களை சீர்குலைக்கும் காவல்துறை: எஸ்டிபிஐ கண்டனம்!

சென்னை (14 பிப் 2020): சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ஜனநாயக வழியில் போராடும் மக்கள் மீது காவல்துறை நடத்திய அராஜகம் கண்டிக்கத்தக்கது என்று எஸ்டிபிஐ தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், சி.ஏ.ஏ., என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி-க்கு எதிராகவும், தமிழக அரசு அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்த போராட்டத்தை சீர்குலைக்கும்…

மேலும்...

சென்னை வண்ணாரபேட்டையில் நடந்தது என்ன? – ஜவாஹிருல்லா அறிக்கை!

சென்னை (14 பிப் 2020): சென்னை வண்ணாரப் பேட்டையில் போராடியவர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதற்கு ம.ம.க. தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று வடசென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆருக்கு எதிராக அமைதியான முறையில் போராடியவர்கள்மீது காவல்துறை கொடூரமான கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் சாஹின் பாக் பாணியில் 167 இடங்களில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு…

மேலும்...