கொரோனா கொடூரம் – பலி எண்ணிக்கை 800 ஐ தாண்டியது!

பீஜிங் (09 பிப் 2020): கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 811 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 811ஆக ஞாயிற்றுக்கிழமை அதிகரித்துள்ளது. இதன்மூலம் சார்ஸ் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட இதன் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புதிய வகை கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளுடன் 37,198 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுவரை சுமார் 1,540 பேர் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு…

மேலும்...

வன்புணர வந்தவனிடமிருந்து பெண் தப்பிக்க உபயோகித்த ஆயுதம் எது தெரியுமா? -அசந்து போவீர்கள்!

பீஜிங் (08 பிப் 2020): சீனாவில் பெண் ஒருவரை வன்புணர வந்தவனிடம் தப்பிக்க பெண் பயன்படுத்திய ஆயுதம் கொரோனா வைரஸ். சீனாவில் கடந்த வாரம் 25 வயது இளம்பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது கொள்ளையடிப்பதற்காக அவரது வீட்டிற்குள் ஒருவன் நுழைந்தான், மேலும் அப்பெண் தனியாக இருப்பதை அறிந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான், அவனிடமிருந்து தப்பிப்பதற்காக அந்த பெண் சாதுர்யமாக யோசித்து பலமாக இருமினார். அத்துடன், வுகான் நகரில் இருந்து வந்திருப்பதாகவும், கொரோனா…

மேலும்...

அசுர வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை!

பீஜிங் (07 பிப் 2020): சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 636ஆக வெள்ளிக்கிழமை அதிகரித்துள்ளது. சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. ‘சாா்ஸ்’ வைரஸின் 70 சதவீதத் தன்மையைக் கொண்ட அந்த வைரஸ் ‘கரோனா’ வகையைச் சோ்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்தனா். இந்த…

மேலும்...

கொரோனா நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மரணம்!

பீஜிங் (06 பிப் 2020): சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரசால் இதுவரை, 563 பேர் உயிரிழந்துள்ளனர்; 28 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளனர் இந்ந்நிலையில் வுஹான் நகரில் உள்ள மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 10 நாட்களாக, ஓய்வுறக்கமின்றி நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த, சாங்…

மேலும்...

கொரோனா பயங்கரம் – பலி எண்ணிக்கை 563 ஆக உயர்வு!

பீஜிங் (06 பிப் 2020):கொரோனா வைரஸ் நோய் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 563 ஆக அதிகரித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோயால் சீனா தனிமைப் படுத்தப் பட்டுள்ளது. அங்கு சுமார் 28,000-பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வூஹான் நகர மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வரும் நிலையில், 2 புதிய தற்காலிக மருத்துவமனைகளும் கட்டப்பட்டுள்ளன. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில்,…

மேலும்...

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனாவுக்கு கத்தார் செய்த உதவி!

தோஹா (05 பிப் 2020): சீனாவிற்கு மருந்துவ உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளதாக கத்தாருக்கான சீன தூதுவர் Zhou Jian அவர்கள் தெரிவித்துள்ளார். சீனாவில் வூஹான் கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், கத்தாரிலிருந்து சீனாவிற்கு மருத்துவ உதவி பொருட்கள் அனுப்பப் பட்டுள்ளன. அதில் முகமூடிகள், கையுறைகள் உட்பட மருந்துப் பொருட்கள் உள்ளடங்கியுள்ளதாக Zhou Jian தெரிவித்துள்ளார். மேலும், கத்தார் நாடும் சீனாவும் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளதாகவும் அவர்களின் ஆரோயக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் கத்தார்…

மேலும்...

கொரோனா வைரஸ்: 400 ஐ தொட்ட பலி எண்ணிக்கை – உதவியை நாடும் சீனா!

பீஜிங் (04 பிப் 2020): சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலி எண்ணிக்கை 425 ஐ தொட்டுள்ளது. சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. ‘சாா்ஸ்’ வைரஸின் 70 சதவீதத் தன்மையைக் கொண்ட அந்த வைரஸ் ‘கரோனா’ வகையைச் சோ்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்தனா். இந்த புதிய ‘கரோனா’ வைரஸ்…

மேலும்...

கொரோனா பாதித்த மாநில பேரிடராக கேரளா அறிவிப்பு!

திருவனந்தபுரம் (03 பிப் 2020): கொரோனா வைரஸ் தாக்குதலை மாநில பேரிடராக மாநில கேரளா அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் உருவானது. அந்த வைரஸ் சீனா மட்டுமின்றி, 27 நாடுகளுக்கு வேகமாகப் பரவியுள்ளது. இதுவரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை, 361 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் தாக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை, கேரளாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது….

மேலும்...

கேரள மக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி – மூன்றாவது நபருக்கு கொரோனா வைரஸ்!

திருவனந்தபுரம் (03 பிப் 2020): கேரளாவில் மூன்றாவது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தற்போது சீனாவை தொடர்ந்து ஆசியாவின் பிற நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. அது இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் குறிப்பாக கேரளாவில் மூன்று பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப் பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் கேரளாவில் திருச்சூரை சேர்ந்த மாணவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது.இவர் கொரோனா வைரஸ் உருவான வுஹன்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐந்தாவது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

அபுதாபி (03 பிப் 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டிருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. சீனாவின் வுஹானிலிருந்து வந்த சீன நாட்டினை சேர்ந்தவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப் படுவதாக ஐக்கிய அரபு அமீரக மருத்துவ துறை அதிகாரி டாக்டர் ஹுசைன் அல் ரான்ட் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்கனவே நான்கு சீன நாட்டினருக்கு…

மேலும்...