உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயை வேட்பாளராக நிறுத்தும் காங்கிரஸ்!

உன்னாவ் (13 ஜன 2022): உ.பி., சட்டசபை தேர்தலில், உன்னாவ் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயை, காங்கிரஸ் வேட்பாளராக நியமித்துள்ளது. இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உன்னாவ் மகளுக்கு பாஜக அநீதி இழைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். “இப்போது, [வன்புணர்வு செய்யப்பட்டவரின் தாயார்] நீதியின் முகமாக இருப்பார்,” என்று அவர் ட்வீட் செய்துள்ளார். பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் 2017 ஆம் ஆண்டு உன்னாவ் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்…

மேலும்...

பாஜகவுக்கு எதிரான அலை – காங்கிரஸ், திரிணாமூல் கூட்டணிக்கு வாய்ப்பு!

கோவா (13 ஜன 2022): கோவா சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிரான அலை தோன்றியுள்ளது. கோவாவில் பாஜக தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும், வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், ஊழல் என பல பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. ஆனால் அதை முறியடிக்கும் சக்தி எதிர்க்கட்சிகளுக்கு இல்லை என்பதே உண்மை. ஆட்சிக்கு எதிரான கருத்து சாதகமாக இருக்கும் என காங்கிரஸ் எதிர்பார்த்திருந்த நிலையில், ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸும் ஆட்சிக்கு எதிரான வாக்குகளை பிரிக்க…

மேலும்...

திரிணாமுல் காங்கிரசின் நிலைப்பாடு பஜகவுக்கே சாதகம் – சிவசேனா!

புதுடெல்லி (10 ஜன 2022): கோவா சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசின் நிலைப்பாடு பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று சிவசேனா விமர்சித்துள்ளது. “கோவா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து நம்பிக்கையற்ற தலைவர்களை தன் பக்கம் இழுத்துள்ளது. இது ஏற்புடையதல்ல” என்று சிவசேனாவின் முகப்புத்தகமான சாம்னாவில் சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார். சட்டசபைத் தேர்தலுக்காக கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் அதிக அளவில் செலவு செய்வதாகவும், அக்கட்சி செலவழித்த நிதி எங்கிருந்து வந்தது என்றும்…

மேலும்...

அரசியலை விட்டே விலகுவேன் – சித்து உறுதி!

புதுடெல்லி (03 ஜன ஞ2022): பஞ்சாபில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் என்றும் சித்து கூறினார். பக்வாரா எம்எல்ஏ பல்விந்தர் சிங் தலிவால் ஏற்பாடு செய்திருந்த பேரணியில் அவர் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார். அப்போது பேசிய சித்து “காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு 5 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்காவிட்டால் அரசியலை விட்டு…

மேலும்...

கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் பாஜக, காங்கிரஸ் படுதோல்வி!

கொல்கத்தா (22 டிச 2021): மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 144 வார்டுகளில் 134 இடங்களில் அக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மீதமுள்ள 10 வார்டுகளில் பாரதிய ஜனதா 3, காங்கிரஸ் 2, இடதுசாரிகள் 2 மற்றும் சுயேச்சைகள் 3 பேர் வெற்றிமுகத்தில் இருந்தனர். இப்படியாக தனது எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒற்றை இலக்கத்தில் நிற்கவைத்து, மூன்றிலக்க எண்ணில் முன்னணி வகித்து வெற்றி பெற்றுள்ளார்…

மேலும்...

காங்கிரஸ் இந்துக்கள் கட்சி – ராகுல் காந்தி உரை!

ஜெய்ப்பூர் (13 டிச 2021): காங்கிரஸ் கட்சியின் பிரம்மாண்ட மாநாடு ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ராகுல்காந்தி, இந்து மற்றும் இந்துத்துவா என்பதற்கு வித்தியாசம் இருப்பதாக தெரிவித்தார். இரண்டும் வெவ்வேறானவை எனக்கூறிய அவர், ‘ நான் ஒரு இந்து, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்துத்துவவாதிகள்’ என கடுமையாக விமர்சித்தார். உண்மையை நேசிப்பவர்கள் இந்துக்கள் எனக் கூறிய ராகுல்காந்தி, மகாத்மா காந்தி உண்மையைத் தேடியவர் எனத் தெரிவித்தார். ஆனால், நாதுராம் கோட்சே இந்துத்துவவாதி,…

மேலும்...

பாஜகவில் இணையும் பஞ்சாப் முன்னாள் முதல்வர்?

புதுடில்லி (29 செப் 2021): பஞ்சாப் அரசியலில் திடீர் திருப்பமாக ,முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங், இன்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை திடீரென சந்தித்து பேசினார். பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அமரீந்தர் சிங்குக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கினர். இதையடுத்து செப்.18-ல் அமரீந்தர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி நியமிக்கப்பட்டார். புதிய அமைச்சரவையில் 18 பேர் அமைச்சர்கள் பொறுப்பேற்ற நிலையில் திடீர் திருப்பமாக, மாநில காங்.,…

மேலும்...

காங்கிரஸ் கட்சியிலிருந்து மேலும் ஒரு தலைவர் விலகல்!

புதுடெல்லி (16 ஆக 2021): காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணித் தலைவி சுஷ்மிதா தேவ், அக்கட்சியிலிருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அசாமின் பராக் பள்ளத்தாக்கு பகுதியில் சுஷ்மிதா தேவ் மிக முக்கியமான தலைவர் ஆவார். முன்னதாக அவர், தனது பதவி விலகல் கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பியிருந்தார். ஆனால், அந்த கடிதத்தில் பதவி விலக்கலுக்கான எந்தக் காரணத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. இருப்பினும், கடந்த சில மாதங்களாக அவர் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்தாகக்…

மேலும்...

மோடி இந்த முறையாவது தொகையை மாற்றி கூறியிருக்கலாம் – எதிர் கட்சிகள் விமர்சனம்!

புதுடெல்லி (16 ஆக 2021): பிரதமர் நரேந்திர மோடி ஏழு ஆண்டுகளாக ஒரே உரையை நிகழ்த்தி வருவதாகவும், திட்டங்களை அறிவிப்பதைத் தவிர அதை செயல்படுத்தவில்லை என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கட்கே தெரிவிக்கையில், “மோடி திட்டங்களை அறிவிக்கிறாரே தவிர பாதிக்கப்பட்ட விவசாயிகள் உட்பட யாருக்கும் எதுவும் செய்யவிலை.மோடி நிறைய விஷயங்களைச் சொல்கிறார். ஆனால் எதுவும் உறுதியாக நிற்கவில்லை” என்று கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவிக்கையில், ” பிரதமரால் அறிவிக்கப்பட்ட…

மேலும்...

காங்கிரசில் இணைகிறாரா பிரசாந்த் கிஷோர்?

புதுடெல்லி (29 ஜூலை 2021): தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்கிராசில் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் பிரசாந்த் கிஷோர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். இந்நிலையில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. ஜூலை 22 ஆம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த சந்திப்பு நடைபெற்றது, மூத்த தலைவர்களான கமல்நாத், மல்லிகார்ஜூன் கார்கே, ஏ.கே. ஆண்டனி, அஜய் மேக்கன், ஆனந்த் சர்மா, ஹரிஷ் ராவத், அம்பிகா சோனி…

மேலும்...