எந்த புதுமண தம்பதிக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது!

சேலம் (26 மே 2020): புதுமணப்பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதியானதால் திருமணம் முடிந்த உடனே தம்பதிகள் இருவரும் தனிமைப் படுத்தப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த பெண்ணுக்கும், திருப்பூரில் வேலை பார்த்து வந்த பையனுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம், சேலம் மாவட்டம் கெங்கவல்லியில், நேற்று முன் தினம் ( மே 24) நடக்க இருந்தது. இருவரும், கெங்கவல்லி வந்து சேர்ந்தனர். கொரோனா…

மேலும்...

ஆஸ்ரமத்தில் அதிர்ச்சி – 20 பேருக்கு கொரோனா!

சென்னை (26 மே 2020): நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்திவரும் ஆதரவற்றோர் ஆஸ்ரமத்தில் 20 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் சென்னை அசோக் நகரில் ஆதரவற்றோர் ஆஸ்ரமம் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது சென்னை லயோலா கல்லூரியில் சிகிச்சைக்காக…

மேலும்...

உற்சாகம் இழந்த பெருநாள் – நாகூர் தர்காவில் கூட்டு பிரார்த்தனை!

நாகூர் (26 மே 2020): லாக்டவுனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினார்கள். இவ்வருட ரம்ஜான் பண்டிகை உற்சாகம் இழந்ததாகவே காணப்பட்டது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வார்கள். நோன்பு நிறைவடைந்த பிறகு, ரமலான் மாத இறுதி நாளில் பிறை தெரியும். பிறை தென்பட்ட மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். இந்நிலையில், தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை…

மேலும்...

100 கிலோ மீட்டர் நடந்த புலம்பெயர்ந்த கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்பட்ட சோகம்!

லூதியானா (26 மே 2020): 100 கிலோமீட்டர் நடந்து சென்ற கர்ப்பிணி பெண்ணிற்கு பிறந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் பிந்தியா மற்றும் அவருடைய கணவர் ஜதின் ராம் ஆகியோர் வேலை செய்துவந்துள்ளனர். 20 வயதைக் கடந்திருக்கும் அவர்கள் இருவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கொரோனா ஊரடங்கின் காரணமாக 50 நாள்களுகும் மேலாக வேலையின்றி தவித்த அவர்கள், சொந்த ஊர் செல்வதற்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் நடக்கத் தொடங்கினர். 9 மாத கர்ப்பிணி…

மேலும்...

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பரிசோதனையை நிறுத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவு!

புதுடெல்லி (26 மே 2020): ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பரிசோதனையை நிறுத்த உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாத்திரை தயாரிப்பில் இந்தியா முன்னணி வகிக்கிறது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை அங்கே கொரோனா சிகிச்சைக்கு பலன் தரும் என சொல்லப்பட்டது. ஏப்ரல் மாதம் பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் மருந்துகள் கொரோனா வைரஸ் எண்ணிக்கையை குறைப்பதாக கண்டறியப்பட்டது. இதனால் உலக…

மேலும்...

கொரோனா வைரஸும் அது பரவும் தன்மையும்!

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் பரவிவிட்டது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரை உலகளவில் 42 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் உடலை எப்படி தாக்குகிறது? இதற்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது? என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை. இது வைரஸ் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான காலம். உங்கள் உடலின் செல்களில் நுழையும் வைரஸ்கள், அவற்றை முதலில் ஆக்கிரமித்துக் கொண்டு, தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்….

மேலும்...

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு!

சென்னை (25 மே 2020): தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில்…

மேலும்...

CBSE பள்ளிகளில் ஆன்லைன் பயிற்சி – பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு!

புதுடெல்லி (25 மே 2020): CBSE பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கான பாதுகாப்பு நெறிமுறைகளை CBSE நிர்வாகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், CBSE பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இணையத்தில் வரம்புமீறிய செயல்கள் நடைபெறுவதாக எழுந்த புகாரையடுத்து ஆன்லைனில் செயல்பாடுகள் குறித்த வழிகாட்டு முறையை CBSE வெளியிட்டுள்ளது. பிறருக்கு பகிரும் புகைப்படங்கள், வீடியோக்களில்…

மேலும்...

கொரோனா வைரஸ் தொற்றில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்த இந்தியா!

புதுடெல்லி (25 மே 2020): உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா பத்தாவது இடத்தில் உள்ளது. கொரோனா பரவல் உலகை பெருமளவில் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட, கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இந்தியா நேற்றுவரை 11-வது இடத்தில் இருந்தது. இந்த நிலையில், இந்தியாவில் இன்று ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக…

மேலும்...

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

புதுடெல்லி (25 மே 2020): வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் தாயகத்திற்கு அழைத்து வரும்போது, விமானத்தின் நடு இருக்கைகள் காலியாக விடப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கடந்த வாரம் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்திப் சிங் புரி, விமான சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், நடு இருக்கைகள் காலியாக இருக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். ஏர் இந்தியா விமானியான தேவேன் யோகேஷ் கனானி என்பவர், மும்பை உயர் நீதிமன்றத்தில்‘பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம், மார்ச்…

மேலும்...