கொரோனா தடுப்பூசி பக்க விளைவால் மரணம் – ரூ 1000 கோடி நஷ்ட ஈடு கோரி வழக்கு!

கோவிட் தடுப்பூசியின் பக்கவிளைவுகளால் தனது மகள் இறந்ததற்கு 1,000 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி மகாராஷ்டிரா உயர் நீதிமன்றத்தில் தந்தை ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். அவுரங்காபாத்தைச் சேர்ந்த திலீப் லுனாவத் என்பவர் மகாராஷ்டிரா அரசு மற்றும் சிரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிடம் இழப்பீடு கோரி மும்பாய் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். மனுதாரர் திலீப் லுனாவத், நாசிக்கில் பயின்று வந்த மருத்துவ மாணவியான தனது மகள் சினேகல் இரண்டு டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்டதாகவும் ஜனவரி 28,…

மேலும்...

கோவிட் தடுப்பூசி மூன்றாவது டோஸுக்கான இடைவெளி எத்தனை மாதங்கள்?

புதுடெல்லி (26 டிச 2021): கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸுக்கும் மூன்றாவது டோஸுக்கும் இடையிலான இடைவெளி ஒன்பது முதல் 12 மாதங்கள் வரை இருக்கலாம் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளன. தற்போது இந்தியாவின் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த தடுப்பூசிகளில் உள்ள இடைவெளிகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும், இது குறித்த இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும் மருத்துவதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை இரவு…

மேலும்...

பூஸ்டர் தடுப்பூசி – இன்று ஆலோசனை!

புதுடெல்லி (06 டிச 2021): இந்தியாவில் கொரோனாவிற்கான பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது. இந்தியாவில் கொரோனா ரைவஸ் தொற்றுக்கு எதிராக இரண்டு டோஸ்கள் கொண்ட கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவை எதிர்த்து போராட இரண்டு டோஸ்கள் போதுமானது என்று வல்லுனர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் இரண்டாவது அலையில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டதால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளன. ஆனால், இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி…

மேலும்...

இந்தியாவில் இரண்டு கோவிட் தடுப்பூசி போட்டவர்கள் சவூதியில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளலாம்!

ரியாத் (04 டிச 2021): இந்தியாவில் இருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டு சவுதி அரேபியாவுக்கு வந்தவர்களுக்கு சவூதி அரேபியாவில் பூஸ்டர் டோஸ் போடப்பட்டு வருகிறது. சவூதியில் தடுப்பூசியைப் பெற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு, பூஸ்டர் டோஸ் இப்போது பெற்றுக் கொள்ளலாம். இதற்கு செஹாத்தி செயலி மூலம் முன்பதிவு செய்யலாம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல இந்தியாவிலிருந்து இரண்டு டோஸ் கோவ்ஷீல்டுகளைப் பெற்று தடுப்பூசி சான்றிதழுக்காக சவுதி சுகாதார அமைச்சகத்தில் பதிவு செய்துள்ள அனைவரும் செஹாத்தி செயலி…

மேலும்...

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர் திடீர் மரணம்!

மதுரை (04 ஜூலை 2021): மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர், திடீரென மரணமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை புது விளாங்குடியை சேர்ந்தவர் ஆண்ட்ரூ சைமன். மென்பொருள் பொறியாளரான இவர், நேற்று முன்தினம் தனது மனைவியுடன் சென்று சமயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிஷீல்டு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். தடுப்பூசி செலுத்திக் கொண்டு கண்காணிப்பில் இருந்தபோது எந்த உடல் உபாதைகளும் ஏற்படாததால், ஆண்ட்ரூ சைமன் வீடு திரும்பியுள்ளார். அதன் பின்னர்,…

மேலும்...

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் எண்ணை இணைப்பது எப்படி?

புதுடெல்லி (27 ஜூன் 2021): இந்தியாவில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் சர்வதேச விமான போக்குவரத்து ஜூன் 30- ஆம் தேதிக்கு பிறகு தொடங்கவிருப்பதாகவும், அதற்கான பணிகளில் விமான போக்குவரத்து ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு கரோனா தடுப்பூசிப் போடுவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு கரோனா தடுப்பூசி சான்றிதழில் தங்களது…

மேலும்...

சவுதியில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் போடப்படும் 2 வது டோஸ் கொரோனா தடுப்பூசி!

ரியாத் (24 ஜூன் 2021): சவுதி அரேபியாவில், 70 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுள்ள நிலையில், இன்று முதல் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. சவூதி அரேபியாவில் 587 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. இதுவரை , 70 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளர். இந்த நிலையில் இன்று முதல் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசிகள் கிடைப்பதைப்…

மேலும்...

கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள் – பிலிப்பைன்ஸ் அதிபர் மிரட்டல்!

மணிலா (23 ஜூன் 2021): “பிலிப்பைன்ஸில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள்!” என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் அந்நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், “மக்கள் என்னைத் தவறாக எண்ண வேண்டாம். நம் நாட்டில் கொரோனா பரவலால் நெருக்கடி நிலவுகிறது. நாம் ஏற்கனவே கொரோனாவால் கஷ்டப்படுகிறோம். மேலும் நாட்டை கஷ்டப்படுத்தாதீர்கள். நீங்கள் தடுப்பூசி போட விரும்பவில்லை என்றால், கைது செய்யப்படுவீர்கள்” “அதுமட்டுமல்ல நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால், பிலிப்பைன்ஸை விட்டு…

மேலும்...

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கோவிட் மரணத்தை தவிர்க்கலாம்!

புதுடெல்லி (23 ஜூன் 2021): கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் போட்டுக்கொண்டவர்கள் 95 சதவீதமும் கோவிட் இறப்புகளை தவிர்க்கலாம் என்று ஐசிஎம்ஆர்) வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின்படி முதல் டோஸ் 82 சதவீதமும், இரண்டாவது டோஸ் 95 சதவீதமும் கோவிட் உயிரிழப்புகளை தடுப்பதில் பயனுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரியவந்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (என்ஐஇ) இணைந்து, ‛தமிழகத்தில் அதிக ஆபத்துள்ள குழுக்களிடையே…

மேலும்...

சவூதியில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பெற ஜூலை மாதம் முதல் பதிவு செய்யலாம்!

ரியாத் (18 ஜுன் 2021): கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசுக்கான முன்பதிவு அடுத்த மாதம் முதல் தொடங்கப்படும் என்று சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்தில் உலகளாவிய பற்றாக்குறை காரணமாக இரண்டாவது டோஸ் நியமனங்களை ஒத்திவைப்பதாக சவூதி சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்தது. மேலும் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு, குறிப்பாக அதிக ஆபத்துள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் அளவை வழங்குவதற்காகவும் இரண்டாவது டோஸ் முன்பதிவு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே தற்போது…

மேலும்...