பயாலாஜிக்கல் – இ கோவிட் தடுப்பூசி 90 சதவீத பாதுகாப்பு!

புதுடில்லி (17 ஜூன் 2021): : இந்தியாவில் தற்போது மருத்துவ பரிசோதனையில் உள்ள பயாலிஜிக்கல் – இ நிறுவனத்தின் தடுப்பூசி, கோவிட்டிற்கு எதிராக 90 சதவீதம் திறனுடையது எனவும், இந்த தொற்றை பரவலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என, மத்திய அரசின் ஆலோசனை குழு டாக்டர் தெரிவித்து உள்ளார். 90 சதவீத திறன் பெற்ற இந்த மருந்து தற்போது 3வது கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது என்றும் வரும் அக்டோபர் மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும் என்றும்…

மேலும்...

கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட முதல் மரணம் – உறுதி செய்தது அரசு!

புதுடெல்லி (15 ஜூன் 2021): இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை எடுத்த ஒருவர் உயிரிழந்ததை அரசு உறுதி செய்துள்ளது. இதனை தடுப்பூசி பக்க விளைவுகளைப் பற்றி ஆய்வு செய்த குழு உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 8 ஆம் தேதி  கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்த 68 வயதான ஒருவர் அனாபிலாக்ஸிஸ் காரணமாக இறந்தார் என்று இதுகுறித்த அறிக்கை காட்டுகிறது. “நாங்கள் கண்ட முதல் மரணம் இதுதான், விசாரணையின் பின்னர் இறந்ததற்கான காரணம் தடுப்பூசிக்குப் பிறகு அனாபிலாக்ஸிஸ்…

மேலும்...

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டலே அதிக பாதுகாப்பு!

புதுடெல்லி (15 ஜூன் 2021): தொற்றில் இருந்து மீண்டவர்கள் ஒரு டோஸ் போட்டுக்கொண்டாலே அதிக பாதுகாப்புடன் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதற்கு முன்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம், நடத்திய ஆய்வில், அவர்களுக்கு, ஒரு டோஸ் தடுப்பூசி கொடுக்கப்பட்டதிலேயே, நிறைய ஆன்டிபாடிகள் உடலில் உற்பத்தி செய்யப்பட்டன என்று ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தின. அதேசமயம் தொற்று ஏற்படாதவர்களில், ஆன்டிபாடிகள் குறைவாகவே இருந்தன. கோவிட்டால் பாதிக்கப்படுகையில், உடல் அதை எதிர்த்துப் போராடுவதற்கு ஆன்டிபாடி என்னும் நோய் எதிர்ப்பு சக்தியை…

மேலும்...

இதிலும் கேரளாதான் முதலிடம்!

புதுடெல்லி (10 ஜூன் 2021): கேரளாவும், மேற்கு வங்கமும் கோவிட் தடுப்பூசி மருந்துகளை வீணடிக்காமல் முழுவதுமாக பயன்படுத்தி உள்ளன. கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதுதான் ஒரே ஒரு தீர்வு. ஆனால் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறையால், தடுப்பூசி திட்டம் தொய்வடைந்து உள்ளது. இந்த நிலையில், மாநில அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டது மற்றும் வீணடிக்கப்பட்ட அளவு குறித்த புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன் படி, கடந்த மே மாதத்தில் கேரளாவும், மேற்கு வங்கமும் தடுப்பூசி மருந்துகளை…

மேலும்...

உச்ச நீதிமன்ற அழுத்தத்திற்கு பிறகு மோடியின் அறிவிப்பில் திடீர் மாற்றம்!

புதுடெல்லி (07 ஜூன் 2021): மாநில அரசுகள் தனியாக தடுப்பூசி கொள்முதல் செய்ய தேவையில்லை, தடுப்பூசி விநியோகம் குறித்து ஒன்றிய அரசே முடிவெடுக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று இதுகுறித்து அவர் ஆற்றிய உரையில் கூறி உள்ளதாவது: இந்தியாவில் மேலும் 2 தடுப்பூசிகளை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசி தயாரிக்கும் பணியில் இந்தியாவில் 7 நிறுனங்கள் ஈடுபட்டு உள்ளன. உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. வெளிநாடுகளில்…

மேலும்...

கொரோனா தடுப்பூசி போட்ட பின்னர் கோவிட் பாதித்தவர்கள் நிலை – மருத்துவ நிபுணர்கள் முக்கிய தகவல்!

புதுடெல்லி (06 ஜூன் 2021): கொரோனா தடுப்பூசி போட்ட பின்னர் கோவிட் பாதிப்பு ஏற்படுகிறதா என்பது குறித்தும் மரணம் ஏற்படுகின்றதா? என்பது குறித்தும் எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். அதன்படி, இதுதொடர்பாக எய்ம்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ஆய்வில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு கொரோனா வந்த 36 நோயாளிகளும், ஒரு டோஸ் போட்டு தொற்று பாதிப்புக்குள்ளான 27 பேரும் என 63 பேர் உட்படுத்தப்பட்டனர். இதில் 10 பேர் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும்…

மேலும்...

மோடி படத்தை தூக்கிவிட்டு மம்தா பானர்ஜியின் படம் – பரபரப்பில் ஒன்றிய அரசு!

கொல்கத்தா (05 ஜூன் 2021): மேற்குவங்கத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுகொள்வோருக்கு சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் தூக்கப்பட்டு முதலமைச்சர் மம்தா பானர்ஜி படம் பதிக்கப்பட்ட சான்றிதழ் விநியோகிக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாநில அரசு சார்பில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் படம் பதித்த சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடி படம் இடம்பெற்றுள்ளதற்கு தொடக்கத்தில் இருந்தே மேற்குவங்க மாநில முதல் வர் மம்தா பானர்ஜி…

மேலும்...

இந்தியாவிற்கு பைசர் தடுப்பூசிகள் கிடைப்பதில் சிக்கல்!

புதுடெல்லி (25 மே 2021): உலகில் கொரோன தடுப்பூசிகளில் அதிக வீரியம் கொண்ட பைசர் தடுப்பு மருந்துக்கு அதிக டிமாண்ட் நிலவுவதால் இந்தியாவிற்கு பைசர் தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மற்றும் டெல்லி அரசுகள் பைசர் மாடர்னா தடுப்பு மருந்துகளை நேரடியாக கொள்முதல் செய்ய முயன்ற நிலையில் பைசர் மாடர்னா, தடுப்பூசிகளை நேரடியாக விற்பனை செய்ய முடியாது. மத்திய அரசுடன் மட்டுமே நேரடியாக தடுப்பூசி விற்பனையை செய்ய முடியும்’ என, மாடர்னா மற்றும் பைசர் நிறுவனங்கள்…

மேலும்...

மாநில அரசுகளுக்கு தடுப்பூசி தர தடுப்பூசி நிறுவனம் மறுப்பு!

புதுடெல்லி (24 மே 2021): மாடர்னா கொரோனா தடுப்பூசிகளை நேரடியாக பஞ்சாப் அரசுக்கு தர மாடர்னா தடுப்பூசி மறுத்துவிட்டது, அதேவேளை , இந்திய அரசுடன் மட்டுமே நிறுவனம் ஒப்பந்தம் போட முடியும் என கூறிவிட்டது. வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசிகளை நேரடியாக இறக்குமதி செய்ய பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் திட்டமிட்டார். இதற்காக உலகளாவிய டெண்டர்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஸ்பூட்னிக் வி, பைசர், ஜான்சன் மற்றும் ஜான்சன் போன்ற தடுப்பூசியை பெறுவதற்கு பலவகை வழிகளை ஆராய்ந்து வருகின்றனர். அதில் மாடர்னா…

மேலும்...

கொரோனா விவகாரம் – சவூதியில் நடைமுறைக்கு வந்த புதிய விதிமுறைகள்!

ரியாத் (15 மே 2021): சவூதியில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் COVID-19 தடுப்பூசி போட வேண்டும் அல்லது வாராந்திர பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற முடிவை சவூதி அதிகாரிகள் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர். நகராட்சி மற்றும் ஊரக விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் அறிமுகப்படுத்திய இந்த நடவடிக்கைகளின்படி, முடிதிருத்தும் கடைகள் மற்றும் பெண்களின் அழகு நிலையங்களில் பணிபுரிபவர்கள், உணவகங்கள், கஃபேக்கள், உணவு விற்பனை நிலையங்களில் உள்ள அனைவரும் கொரோன தடுப்பூசி செலுத்தியவர்களாக இருக்க வேண்டும் இல்லையேல்…

மேலும்...