திமுக எம்.எல்.ஏ ஜே. அன்பழகன் உடல் நிலை குறித்து மருத்துவமனை பரபரப்பு அறிக்கை!

சென்னை (04 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜே. அன்பழகன் 80 சதவீதம் வெண்டிலேஷன் உதவியிலேயே சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. திமுக-வின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் , ஜூன் 2 ஆம் தேதி இரவு சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூச்சுத் திணறலோடு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா டெஸ்ட்…

மேலும்...

சென்னை திருச்சி விமான நிலையங்களில் வந்திறங்கும் வெளிநாட்டு தமிழர்கள் தொடர்பு கொள்ள தமுமுக உதவி எண் அறிவிப்பு!

சென்னை (04 ஜூன் 2020) வெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவும் முகமாக தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையம் வருபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: தாம்பரம் எம்.யாக்கூப் 9710217545 துணைப் பொதுச் செயலாளர், மமக எஸ்.கே.ஜாகிர் உசேன் 9884444350 மாவட்ட தலைவர், செங்கல்பட்டு வடக்கு, தமுமுக-மமக திருச்சி விமான நிலையம் வருபவர்கள் தொடர்பு கொள்ளக்கூடிய எண்கள்: உதுமான் அலி 98944 44772 மாவட்ட…

மேலும்...

ஒரே நாளில் 260 பேர் பலி – இந்தியாவை அதிர வைக்கும் கொரோனா வைரஸ்!

புதுடெல்லி (045 ஜூன் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2 லட்சத்து 16 ஆயிரத்தை தாண்டியது. ஒரே நாளில் 260 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,16,919 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 9304 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 260 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை…

மேலும்...

தப்லீக் ஜமாஅத்தினரை உடனடியாக விடுதலை செய்க – அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அலகாபாத் (03 ஜூன் 2020): தப்லீக் ஜமாஅத்தின் உறுப்பினர்களையும், தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்த மற்றவர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஷாத் அன்வர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்ற நீதிபதி சஷிகாந்த் குப்தா மற்றும் நீதிபதி சவுராப் ஷியாம் ஷம்ஷேரி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் திங்களன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றம் தனது உத்தரவில், இந்திய அரசியலமைப்பின் 21 வது…

மேலும்...

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (03 ஜூன் 2020): திமுக-வின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில்,1,286 பேருக்கு தமிழகத்தில் கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 11 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கையும் 208 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் திமுக-வின்…

மேலும்...

குவாரண்டீன் மையத்தில் பிறந்த குழந்தைக்கு குவாரண்டீனோ என பெயரிட்ட தம்பதிகள்!

இம்பால் (03 ஜூன் 2020): தனிமைப்படுத்தல் மையத்தில் பிறந்த குழந்தைக்கு குவாரண்டீனோ என்று பெயரிட்டு மகிழந்துள்ளனர் அந்த குழந்தையின் தம்பதிகள். மே 27 அன்று கோவாவிலிருந்து சிறப்பு ரயிலில் மணிப்பூர் வந்த பயணிகள் இமானுவேல் என்ற பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டனர் . அவர்களில் ஒரு பெண் கர்ப்பமாக இருந்தார். கர்ப்பமாக இருந்த பெண் மீது மருத்துவர்களால் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. இந்நிலையில் “அந்தப் பெண் ஞாயிற்றுக்கிழமை சிக்கல்கள் இல்லாமல் ஆண் குழந்தையை பிரசவித்தார். தாயும் குழந்தையும் நன்றாக இருக்கிறார்கள்”…

மேலும்...

கட்சி நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் கண்டிப்பு!

சென்னை (03 ஜூன் 2020): கொரானா நோய் தொற்றோடு வாழப் பழகச் சொல்லி மத்திய, மாநில அரசுகள் தங்களின் பொறுப்புகளை தட்டிக் கழித்து வரும் வேளையில் மக்கள் நலனில் அக்கறை கொண்டு மக்களின் உடல்நலத்திலும், பாதுகாப்பிற்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் அதிக முக்கியத்துவம் அளித்து மிகுந்த கவனம் செலுத்திட வேண்டும் என கமல்ஹாசன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். தலைவரின் கண்டிப்பான அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் மற்ற அரசியல் கட்சிகளுக்கெல்லாம் முன்மாதிரியாக, தமிழகத்திலேயே முன்னோடியாக மக்கள் அதிகம் வருகை…

மேலும்...

பத்தாம் வகுப்பு தேர்வு வரும் ஜூன் 15 முதல் தொடக்கம் – ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு!

சென்னை (03 ஜூன் 2020): பத்தாம் வகுப்பு தேர்வு வரும் ஜுன் 15 ஆம் தேதி தொடங்க இருப்பதல் ஆசிரியர்கள் வரும் 8ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 8ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் 24ம் தேதியுடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த நிலையில் பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 26ம் தேதி முடிய இருந்தன. ஆனால், கொரோனா வைரஸ்…

மேலும்...

கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பு – ராணுவ வீரர்களுக்கு முதல்கட்ட சோதனை!

மாஸ்கோ (03 ஜூன் 2020): ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கபட்டுள்ளதாகவும், அதற்கான ஆரம்ப கட்ட சோதனை முறையாக ராணுவ வீரர்களுக்கு அந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரசை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றால் அதற்கு முதலில் தடுப்பூசி கண்டுபிடித்தாக வேண்டும். அதற்கான ஆராய்ச்சியில் உலக விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதில் கடும் போட்டியும் நிலவி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி ஆரம்ப கட்ட…

மேலும்...

பைக்கில் இருவர் பயணித்தால் அபராதம் – எச்சரிக்கை!

சென்னை (03 ஜூன் 2020): கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பைக்கில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தினசரி 500 முதல் 950 வரை நோய் தொற்று உயர்ந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியே கடைபிடிக்க வேண்டும்…

மேலும்...