தலித் வாலிபர் சுட்டுக் கொலை – உயர் ஜாதி இளைஞர்களின் வெறிச்செயல்!

லக்னோ (08 ஜூன் 2020): உத்தரபிரதேசத்தின் அம்ரோஹாவில் சனிக்கிழமை தலித் வாலிபரை சில இளைஞர்கள் சுட்டுக் கொன்றனர். டோம்கேடா கிராமத்தில் நான்கு இளைஞர்கள் இரவு 17 வயது விகாஸ் ஜாதவின் வீட்டிற்கு வந்து தூங்கிக் கொண்டிருந்தபோது அவரை சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்ட வாலிபரின் தந்தை பிரகாஷ் ஜாதவ் கூற்றுப்படி, “அவர் (மார்ச் 31 அன்று இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு) ஒரு கோவிலில் பிரார்த்தனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உயர் சாதி கிராம இளைஞர்களுடன் வாக்குவாதத்தில்…

மேலும்...

தலித் இளைஞர்களின் மர்ம உறுப்பில் ஆயுதங்களை செலுத்தி சித்ரவதை!

ஜெய்ப்பூர் (20 பிப் 2020): ராஜஸ்தானில் திருடியதாக கூறி தலித் இளைஞர்கள் இருவரின் மர்ம உறுப்பில் பெட்ரோல் ஊற்றி, ஸ்குரூ டிரைவரை செலுத்தி, சித்ரவதை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நகவ்ர் மாவட்டத்தில் இரண்டு தலித் இளைஞர்கள், இருசக்கர வாகன ஷோரூமில் பணம் திருடியதாக ஷோரூம் ஊழியர்கள் குற்றம் சாட்டினர். மேலும் அவர்கள் இருவரையும் கட்டி வைத்து மர்ம உருப்பில் பெட்ரோல் ஊற்றி, ஸ்க்ரூ டிரைவரை செலுத்தி சித்ரவதை படுத்தியுள்ளனர். இந்த வீடியோவும்…

மேலும்...

விழுப்புரம் அருகே பயங்கரம் – தலித் இளைஞர் அடித்துக் கொலை!

விழுப்புரம் (16 பிப் 2020): விழுப்புரம் அருகே தலித் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் பகுதி நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் தலித் சமூகத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டிற்கும், பெட்ரோல் பங்கிற்கும் இடையிலான தொலைவு அதிகம் என்பதால், இருசக்கர வாகனத்தில் சென்று வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவுப்பணிக்கு சென்ற அவர், புதன்கிழமை காலை வீட்டிற்கு வந்து படுத்துள்ளார். சிறிதுநேரத்தில், சக ஊழியரிடமிருந்து…

மேலும்...

தலித் பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரத்தின் உச்சம்!

அஹமதாபாத் (13 ஜன 2020): குஜராத்தில் தலித் பெண் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளார். குஜராத்தின் ஹிம்மன்த்நகரில் உள்ள மோடசா கிராமத்தில் 19 வயது தலித் பெண் ஒருவர், வண்புணர்வு செய்யப்பட்டதோடு, அப்பெண் கோயில் மரத்தில் தூக்கிலிடப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இளம் பெண் ஜனவரி 1ம் தேதி முதல் காணவில்லை. காணாமல் போன பெண்ணை தேடி கண்டுபிடிப்பதில் காவல் துறையினர் அலட்சியம் காட்டியதாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்….

மேலும்...