டெல்லியில் தொடரும் வன்முறை காரணமாக 9 பேர் பலி!

புதுடெல்லி (25 பிப் 2020): டெல்லியில் தொடரும் வன்முறை காரணமாக இதுவரை 9 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகவே பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள் அன்று ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸ் தலைமை காவலர் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டுள்ளது. இந்நிலையில் இந்த…

மேலும்...

கொரோனா வைரஸ் பாதிப்பால் இரானில் 6 பேர் பலி!

தெஹ்ரான் (23 பிப் 2020): இரானில் கொவைட்-19 (கொரோனா வைரஸ்) பாதிப்பால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹூபே மாகாணத்தில் மட்டும் கொவைட்-19 வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,442ஆக ஞாயிற்றுக்கிழமை உயா்ந்துள்ளது. இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் சீனா முழுவதும் கொவைட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 76,936க்கும் அதிகமாக உயா்ந்துள்ளது. இந்த நிலையில், தென் கொரியாவில் தற்போது கொவைட்-19 பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 123 பேருக்கு…

மேலும்...

கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது!

பீஜிங் (19 பிப் 2020): சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத்துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன. இந்நிலையில், சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின்…

மேலும்...

பிரபல தமிழ் நடிகர் இயக்குநர் ராஜ்கபூரின் மகன் மெக்காவில் மரணம்!

மெக்கா (17 பிப் 2020): பிரபல நடிகர் இயக்குநர் மகன் ஷாருக் கபூர் (23) மெக்காவில் உடல் நலக்குறைவால் மரணம். நடிகர் பிரபு கனகா நடித்த தாலாட்டு கேக்குதம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்கபூர். நடிகர் அஜித் நடித்த அவள் வருவாளா, ஆனந்தப் பூங்காற்றே ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார் இயக்குநர் மட்டுமின்றி நடிகராகவும் உள்ளார் ராஜ் கபூர். ஆனந்த பூங்காற்றே, தாஜ்மகால், ஏழையின் சிரிப்பில், மாயி, வாஞ்சினாதன், தென்னவன், விசில், அய்யா, ஆறு, அரண்மனை 2,…

மேலும்...

கொரோனா கொடூரம் – பலி எண்ணிக்கை 800 ஐ தாண்டியது!

பீஜிங் (09 பிப் 2020): கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 811 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 811ஆக ஞாயிற்றுக்கிழமை அதிகரித்துள்ளது. இதன்மூலம் சார்ஸ் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட இதன் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புதிய வகை கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளுடன் 37,198 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுவரை சுமார் 1,540 பேர் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு…

மேலும்...

அசுர வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை!

பீஜிங் (07 பிப் 2020): சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 636ஆக வெள்ளிக்கிழமை அதிகரித்துள்ளது. சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. ‘சாா்ஸ்’ வைரஸின் 70 சதவீதத் தன்மையைக் கொண்ட அந்த வைரஸ் ‘கரோனா’ வகையைச் சோ்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்தனா். இந்த…

மேலும்...

கொரோனா பயங்கரம் – பலி எண்ணிக்கை 563 ஆக உயர்வு!

பீஜிங் (06 பிப் 2020):கொரோனா வைரஸ் நோய் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 563 ஆக அதிகரித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோயால் சீனா தனிமைப் படுத்தப் பட்டுள்ளது. அங்கு சுமார் 28,000-பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வூஹான் நகர மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வரும் நிலையில், 2 புதிய தற்காலிக மருத்துவமனைகளும் கட்டப்பட்டுள்ளன. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில்,…

மேலும்...

கொரோனா வைரஸால் சீனாவுக்கு வெளியே நடந்த முதல் மரணம்!

மணிலா (02 பிப் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பாப் சீனாவை சேர்ந்த ஒருவர் பிலிப்பைன்ஸில் பலியாகியுள்ளார். சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. ‘சாா்ஸ்’ வைரஸின் 70 சதவீதத் தன்மையைக் கொண்ட அந்த வைரஸ் ‘கரோனா’ வகையைச் சோ்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்தனா். இந்த புதிய ‘கரோனா’ வைரஸ் தனது…

மேலும்...

சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 259 ஆக உயர்வு!

பீஜிங் (01 பிப் 2020): சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டவர்களின் பலி எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. ‘சாா்ஸ்’ வைரஸின் 70 சதவீதத் தன்மையைக் கொண்ட அந்த வைரஸ் ‘கரோனா’ வகையைச் சோ்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்தனா். இந்த புதிய ‘கரோனா’…

மேலும்...

கொரோனா வைரஸின் பலி எண்ணிக்கை 170 ஆனது – மேலும் அதிகரிக்கும் அபாயம்!

பீஜிங் (30 ஜன 2020): சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆனது. சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற சீன நகரங்களில் மட்டுமின்றி அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 170ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 7,700 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும்…

மேலும்...