மசூதி மற்றும் வீடுகள் இடிப்பு – மாணவர்கள் அமைப்பு போராட்டம்!

புதுடெல்லி (21 ஏப் 2022): டெல்லி ஜஹாங்கிர்புரியில் உள்ள முஸ்லிம்களின் சொத்துக்கள் மற்றும் மசூதியை வலுக்கட்டாயமாக இடித்ததற்கு எதிராக மாணவர்கள் அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன. டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் நடந்த இந்த போராட்டத்தில் சுமார் 150 மாணவர்கள் பங்கேற்றனர். இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO), சகோதரத்துவ இயக்கம், இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI), அகில இந்திய மாணவர் சங்கம் (AISA), அகில இந்திய புரட்சிகர மாணவர் அமைப்பு (AIRSO), Campus Front of India…

மேலும்...

டெல்லி ஜஹாங்கிர்புரி முஸ்லீம்களின் கட்டிடங்களை இடிக்க மறு உத்தரவு வரும்வரை உச்ச நீதிமன்றம் தடை!

புதுடெல்லி (21 ஏப் 2022): வடக்கு டெல்லி ஜஹாங்கிர்புரியில் முனிசிபல் கார்ப்பரேஷன் (என்.டி.எம்.சி) மேற்கொண்ட இடிப்பு நடவடிக்கை தொடர்பான தற்போதைய உத்தரவை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜஹாங்கிர்புரியில் நடத்தப்பட்ட இடிப்பு நடவடிக்கைக்கு எதிராக ஜமியத் உலமா-ஐ-ஹிந்த் மற்றும் பலர் தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ் மற்றும் பி.ஆர். காவாய் ஆகியோர் இந்த இடிப்பு குறித்து தீவிரமாக விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்….

மேலும்...

வீடுகளை இடித்த அரசை எதிர்த்து நீதிமன்றத்தை நாட முஸ்லிம்கள் முடிவு!

போபால் (16 ஏப் 2022): மத்திய பிரதேசத்தில் பாஜக அரசு முஸ்லிம்களின் வீடுகளை இடித்த நிலையில் இதற்கு எதிராக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உயர்நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேசம் கார்கோன் நகரில் ராமநவமி ஊர்வலத்தின்போது வன்முறை வெடித்தது. இதில் வன்முறையில் ஈடுபட்டதாக முஸ்லிம்களின் வீடுகளை மட்டும் அரசு இடித்து தள்ளியுள்ளது. இதனால் பலர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். “அரசின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாட உள்ளோம்” என்று போபால் ஷஹர் காசி…

மேலும்...