திமுக வேட்பாளர்களை எதிர்த்து நிற்கும் 48 பேர் கட்சியிலிருந்து நீக்கம்!

சென்னை (15 பிப் 2022): நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்களை எதிர்த்து நிற்கும் திமுகவை சேர்ந்த 48 பேரை தற்காலிகமாக நீக்கம் செய்து கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கழக வேட்பாளர்களை எதிர்த்தும், தோழமை கட்சி வேட்பாளர்களை எதிர்த்தும் போட்டியிட்டவர்கள் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார்கள். வேலூர் மாநகரம், 11-வது வட்டத்தைச் சேர்ந்த மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்…

மேலும்...

பாஜகவிலிருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார் கு.க.செல்வம்!

சென்னை (12 பிப் 2022): திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜகவிலிருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார். ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்தவர் கு.க. செல்வம். கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவராகவும், திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களில் முக்கியமானவராகவும் அவர் இருந்து வந்தார். இந்நிலையில், திமுக மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகிய அவர் பாஜகவில் இணைந்தார். சுமார் இரண்டு…

மேலும்...

இது நாகலாந்து அல்ல, தமிழ்நாடு – ஆளுநருக்கு எதிராக கொந்தளித்த திமுக!

சென்னை (30 ஜன 2022): இது தமிழ்நாடு, நாகலாந்து அல்ல என்பதை ஆளுநர் உணர வேண்டும் என்று முரசொலி தமிழக ஆளுநருக்கு எதிராக கட்டுரை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக ஆளுநராக பொறுப்பேற்றிருக்கும் ஆர்.என். ரவி கடந்த 25ம் தேதி குடியரசு தின வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த செய்தியில், “ நம்முடைய பள்ளி மாணவர்களும் பிற இந்திய மொழிகளைப் பயில வேண்டும். பிற இந்திய மொழிகளின் அறிவை நம்முடைய மாணவர்களுக்கு மறுப்பது என்பது அவ்வளவு சரியில்லை”…

மேலும்...

திமுக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

சென்னை (29 ஜன 2022): சென்னை மாநகராட்சி பொறியாளரைத் தாக்கியது தொடர்பாக , சென்னை திருவொற்றியூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த கே.பி.சங்கர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி வருவதால், திருவொற்றியூர் மேற்குப் பகுதி கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். அதையடுத்து, திமுக எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் மீது காவல்நிலையத்தில் சென்னை மாநகராட்சி புகார் அளித்துள்ளது. அந்த மனுவில்,…

மேலும்...

சிறுபான்மையினரை வாக்களிக்க விடாமல் தடுக்கும் முயற்சி – திருமாவளவன் குற்றச்சாட்டு!

திருச்சி (19 டிச 2021): தேர்தல் சீர்திருத்த மசோதாவிற்கு திமுக உள்ளிட்ட காட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள கலையரங்கம் வளாகத்தில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ், லேண்ட் டெவலப்பர்ஸ், நிலத் தரகர்கள் நல சங்கத்தின் சார்பில் மாநாடு நடைபெற்றது, இதில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசும்போது… மக்களவையில்…

மேலும்...

பாஜகவுக்கு திமுக எம்பிக்கள் ஆதரவு?

புதுடெல்லி (28 நவ 2021): நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் திமுக காங்கிரசிடமிருந்து விலகி இருக்க விரும்புவதாக கூறப்படுகிறது. நாளை நடக்க உள்ள தி.மு.க. எம்.பி.,க்கள் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்றுநடக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்திலும் தி.மு.க. பங்கேற்க உள்ளது. நாளை தொடங்கும் குளிர்கால கூட்டத் தொடரில் விவசாய சட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை முன்வைத்து, முந்தைய கூட்டத் தொடர்களைப் போலவே இந்தக் கூட்ட தொடரையும் முடக்குவதற்கு காங்கிரஸ்…

மேலும்...
Durai Murugan

அமைச்சர் துரை முருகனுக்கு எதிராக பஸ் ஊழியர்கள் போராட்டம்!

தஞ்சாவூர் (02 அக் 2021):மூத்த அமைச்சரான துரைமுருகன், வேலுார் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர், ‘நகர பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவித்துள்ளோம். பெண்கள் பஸ்சில் ஏறியதும், அப்படிப் போய் உட்காரு என கண்டக்டர்கள் கூறுகின்றனர். ‘அப்படிப்பட்டவர்களை, பெண்கள் முறத்தால் அடிக்க வேண்டும். அரசு பஸ் என்ன அவங்க அப்பன் வீட்டு சொத்தா… பெண்களை தரக்குறைவாக நடத்துவோர் யாராக இருந்தாலும், அவர்களை வேலையை விட்டு அனுப்பி விடுவோம்’…

மேலும்...

நிதியமைச்சர் பழனிவேல்ராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விமான நிலைய பாதுகாப்பு துறை அதிகாரிகள்!

சென்னை (30 செப் 2021): தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 லேப்டாப்களை எடுத்து வந்ததால் மத்திய தொழில் பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இரண்டு லேப்டாப்களை எடுத்துச் செல்லக் கூடாது என்ற எந்த கட்டுப்பாடும் பயணிகளுக்கு இல்லை என அமைச்சர் கூறியுள்ளார். அதற்குள் இவ்விஷயம் மூத்த அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். அமைச்சரை…

மேலும்...

கோர விபத்து – திமுக எம்.எல்.ஏ.மகன் உட்பட 7 பேர் பலி!

பெங்களூரு (31 ஆக 2021): கர்நாடகாவில் ஏற்பட்ட கார் விபத்தில் ஓசூர் திமுக எம்.எல்.ஏ மகன் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கோரமங்களா பகுதியில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று நள்ளிரவில் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த, சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் ஒருவர் ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. பிரகாஷின் மகன் கருணாசாகர் என தெரிய வந்துள்ளது. இதுதவிர, கேரளாவை சேர்ந்த…

மேலும்...

சட்டசபையில் தன்னைதானே நொந்துகொண்ட ஓ.பி.எஸ்!

சென்னை (28 ஆக 2021): சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தன்னை தானே நொந்து கொண்டார். ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது திமுக அரசு. இந்த தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பி.எஸ்., வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பு மத்திய அரசிடம் தமிழக அரசு விவாதித்ததா? என்ற கேள்வியை எழுப்பினார். அப்போது எழுந்த…

மேலும்...