முதல்வரை எதிர்க்கும் வேட்பாளர் தேர்வில் திமுகவினர் படு அப்செட்!

சென்னை (15 மார்ச் 2021): முதல்வர் எட்டப்பாடியை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் தேர்வில் திமுகவினர் அப்செட்டாக உள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் எட்டப்பாடியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சம பலமுள்ள வேட்பாளரை திமுக களமிறக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக சம்பத்குமார் என்பவர் அறிவிக்கப்பட்டு உள்ளார். பட்டதாரி இளைஞரான சம்பத்குமார் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். சேலம் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளராக இருக்கிறார். எனினும், தொகுதியில்…

மேலும்...

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் – ஸ்டாலின் அதிரடி அறிக்கை!

சென்னை (14 மார்ச் 2021): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் போன்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து 2021 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் சில திருத்தங்கள்” எனக் குறிப்பிட்டு தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: 2021 தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் உள்ள – வாக்குறுதி 43-ல், “விவசாயிகளுக்கு எதிரான சென்னை – சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது” என்பதையும்;…

மேலும்...

திமுக அதிருப்தியாளர்களை அலேக்காக தூக்க பாஜக அதிரடி பிளான்!

சென்னை (14 மார்ச் 2021): சீட் கிடைக்காத திமுக பிரமுகர்களை பாஜக பக்கம் இழுக்க அமித்ஷா திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவாக இருக்கும் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பாஜக பக்கம் தாவுவது வழக்கமாகி வருகிறது. பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி கவிழ இதுவே காரணமாக அமைந்தது. இதனை தமிழகத்திலும் நிறைவேற்ற பாஜக முயன்று வருகிறது. இதற்கு வலுவாக இருக்கும் திமுகவை குறி வைத்து அமித் ஷா காய் நகர்த்தி வருகிறார். திமுகவில் அறிவிக்கப்பட்ட…

மேலும்...

பாஜகவுக்கு தாவி ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த திமுக எம்.எல்.ஏ!

சென்னை .(14 மார்ச் 2021): தமிழகத்தில் தேர்தல் பிடித்துள்ள நிலையில் நேற்று முன்தினம் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருந்தது. அதேபோல் நேற்று திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகி இருந்தது. இதில் திமுக எம்.எல்.ஏ சரவணனுக்கு தொகுதி ஒதுக்கப்படாததால் அதிருப்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். 2019 திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் மருத்துவர் சரவணன். 2021 சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

மேலும்...

திமுக வேட்பாளர் மீது போட்டி திமுகவினர் கல் வீச்சு!

விருகம்பாக்கம் (12 மார்ச் 2021) : விருகம்பாக்கம் திமுக வேட்பாளர் மீது போட்டி திமுகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பரபரப்புகளுக்கிடையே இன்று (12.03.2021) திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. திமுகவில் 70 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 20 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்நிலையில் விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளராக விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர் ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆதரவு கேட்டு சென்றபோது திமுக நிர்வாகி தனசேகரனின் ஆதரவாளர்கள் பிரபாகர் ராஜா மீது கற்கள்…

மேலும்...

தமிமுன் அன்சாரி எம்எல்ஏ திமுகவுக்கு ஆதரவு!

சென்னை (11 மார்ச் 2021): மனித நேய ஜனநாயக கட்சி திமுகவுக்கு ஆதவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்குத் தலா 6 சட்டமன்றத் தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும், ஆதி தமிழர்…

மேலும்...

மக்கள் நீதி மய்யத்துடன் இணையும் காங்கிரஸ்?

சென்னை (04 பிப் 2021): திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில் காங்கிரஸ் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மெகா கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரசுக்கு 20 இடங்கள் வழங்கப்படலாம் என்ற நிலையில் காங்கிரஸ் அதற்கு சம்மதிக்கவில்லை. விசிக 6 இடங்களை பெற்றுள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்…

மேலும்...

உடைகிறதா திமுக காங்கிரஸ் கூட்டணி?

சென்னை (03 மார்ச் 2021): தமிழக அரசியல் களம் பரபரப்பான நிலையில் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா என கருத்து கேட்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு குறைவான இடங்களே ஒதுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் ராகுல் காந்தி அதிருப்தியில் உள்ளார். மேலும் க்கள் நீதி மய்யத்துடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது ஆகியவை ராகுலை டென்ஷனாக்கியுள்ளது. மேலும் “கடந்த முறை போட்டியிட்ட 41 தொகுதிகளுக்குக் குறைவாக போட்டியிட…

மேலும்...

புதுச்சேரி காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது – நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி!

புதுச்சேரி (22 பிப் 2021): புதுவை சட்டசபையில் காங்கிரஸ்- திமுக தலைமையிலான அரசு கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதையடுத்து ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது. புதுச்சேரியில் ஆளும் காங்., அரசு இன்று (பிப்.,22) பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. மொத்தம் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் முதல்வர் நாராயணசாமியின் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என எதிர்க்கட்சிகள் துணை நிலை ஆளுநர் தமிழிசையிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து…

மேலும்...

ஒரே நாளில் காங்கிரஸ் திமுக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா!

புதுச்சேரி (21 பிப் 2021): புதுச்சேரியில் நாளை மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில் . காங்கிரஸ் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் இருவர் இன்று ராஜினாமா செய்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நன்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளார். ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான லட்சுமி நாராயணன் சபாநாயகர் சிவக்கொழுந்துவின் வீட்டிற்கு சென்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். இதன்மூலம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின்…

மேலும்...