மூன்று கிலோமீட்டர் ஓடிச்சென்று அவசர அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்!

பெங்களூரு (12 செப் 2022): சில மருத்துவர்களின் செயல்கள் மிகவும் மெச்சத்தகுந்ததாக இருக்கும் அப்படி ஒரு மருத்துவர் சாலையில் ஓடிச்சென்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டுள்ளார். டாக்டர். கோவிந்த் சர்ஜாபுரா சாலை மணிப்பால் மருத்துவமனையில் காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் ஆக உள்ளார். இந்நிலையில் பித்தப்பை நோயால் கடுமையான வலியால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு அவசர அறுவை சிகிச்சை திட்டமிடப்பட்டது. அதன்படி மருத்துவர் கோவிந்த் மருத்துவமனையை நோக்கி அவரசமாக காரில் சென்றார். மருத்துவரின் கார் சர்ஜாபுரா-மரத்தஹள்ளி சாலையில் வந்தபோது போக்குவரத்தில் சிக்கியது. ஆனால் போக்குவரத்து…

மேலும்...

முஸ்லிம்கள் மீது விஷக்கருத்தை பரப்பிய – மருத்துவர் ஆர்த்தி லால்சந்தானியின் உரிமைத்தை ரத்து செய்ய கோரிக்கை!

கான்பூர் (02 ஜூன் 2020): முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றும் கொரோனாவை பரப்பியவர்கள் அவர்கள்தான் என்றும் விஷக்கருத்தை பரப்பிய டாக்டர் ஆர்த்தி லால்சந்தானியின் மருத்துவர் உரிமத்தை ரத்து செய்ய கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்தியாவில் கொரோனா பரவ முஸ்லிம்களே காரணம் என்பதாக இந்துத்வாவினராலும் ஊடகங்களாலும் அவதூறு பரப்பட்டன. இந்நிலையில் முஸ்லிம் கொரோனா நோயாளிகளுக்கு எதிராக ஒரு மருத்துவரே பேசியுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் தப்லீக் ஜமாத்தினர் குறித்து ஆர்த்தி லால்சந்தானி கூறுகையில் “முஸ்லிம் கொரோனா நோயாளிகள்…

மேலும்...

முஸ்லிம் கொரோனா நோயாளிகளுக்கு எதிராக மருத்துவரின் வெறுப்பூட்டும் பேச்சு -அதிர்ச்சி வீடியோ!

கான்பூர் (01 ஜூன் 2020): முஸ்லிம் கொரோனா நோயாளிகளுக்கு எதிராக கான்பூர் மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவர் ஆர்த்தி லால்சந்தானி பேசிய பரபரப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவ முஸ்லிம்களே காரணம் என்பதாக இந்துத்வாவினராலும் ஊடகங்களாலும் அவதூறு பரப்பட்டன. இந்நிலையில் முஸ்லிம் கொரோனா நோயாளிகளுக்கு எதிராக ஒரு மருத்துவரே பேசியுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் தப்லீக் ஜமாத்தினர் குறித்து ஆர்த்தி லால்சந்தானி கூறுகையில் “முஸ்லிம் கொரோனா நோயாளிகள் வைரஸ் பரப்ப…

மேலும்...

கும்பகோணம் அருகே துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சிக்கிய டாக்டர்!

கும்பகோணம் (21 மார்ச் 2020): கும்பகோணம் அருகே டாக்டர் ஒருவர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் பகுதியில், அதிகளவில் துப்பாக்கிகள் புழக்கம் இருப்பதாகவும், இதனால் துப்பாக்கி பயன்படுத்துவது அதிகமாகியிருப்பதாகவும் குற்ற தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் எங்கு, எப்படி துப்பாக்கி கைக்கு வருகிறது; இதை யார் விற்பனை செய்கிறார்கள் என கண்டுபிடிக்க முடிவு செய்தனர். இதையடுத்து, கும்பகோணம் அடுத்த விளந்தகண்டம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர்…

மேலும்...

கொரோனா நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மரணம்!

பீஜிங் (06 பிப் 2020): சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரசால் இதுவரை, 563 பேர் உயிரிழந்துள்ளனர்; 28 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளனர் இந்ந்நிலையில் வுஹான் நகரில் உள்ள மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 10 நாட்களாக, ஓய்வுறக்கமின்றி நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த, சாங்…

மேலும்...

மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவர் மயக்க ஊசி போட்டு தற்கொலை!

திருச்சி (30 ஜன 2020): திருச்சியில் மருத்துவர் ஒருவர் தனக்குத் தானே விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் தென்னூர் பகுதியில் மிகப் பிரபலமான மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக இருப்பவர் சரவணன். கடந்த 26 ஆம் தேதி சரவணன் மருத்துவமனையில் இரவு பணியில் இருந்தார். அப்போது மருத்துவமனையின் நான்காவது தளத்தில் உள்ள அறைக்குச் சென்று அவர் திடீரென தனது இடது கையில் மயக்க ஊசி அதிக அளவில் போட்டுக்கொண்டார்….

மேலும்...

கின்னஸ் சாதனை விருது பெற்ற கோவை மருத்துவர்!

கோவை (14 ஜன 2020): கோவை மருத்துவர் அரவிந்த் சங்கருக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டது. குழந்தையின்மை சிகிச்சையில் பெரும்பாலும் பெண்களே பங்கேற்கும் நிலையில், முதன்முறையாக குழந்தையின்மை சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஆண்களுக்கும் ஏற்படுத்தும் வகையில், “குழந்தையின்மையில் ஆண்களின் பங்கு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு கோவை ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையம் சார்பில் நடத்தப்பட்டது. இதில் அதிக அளவிலான ஆண்களைப் பங்கேற்க வைத்ததன் அடிப்படையில் ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையத்தின் முதன்மை மருத்துவர் அரவிந்த் சந்தருக்கு கின்னஸ் சாதனைக்கான விருது…

மேலும்...

குடிசை வீட்டிலிருந்தபடியே மருத்துவம் பயிலும் ஏழை மாணவி!

குடிசை வாழ்க்கை, தந்தையின் தொழிலில் கிடைக்கும் குறைந்த வருமானம், மிகக் கடுமையான வறுமை, ஆகியவற்றையெல்லாம் எதிர்கொண்டு, அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர (உயர்தரம்) தேர்வில் விஞ்ஞானப் பிரிவில் திருகோணமலை மாவட்டத்திலே முதலிடத்தைப் பெற்றுள்ளார் மீரசா பாத்திமா முஸாதிகா எனும் மாணவி. இலங்கையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மருத்துவக் கல்விக்கான ஒதுக்கீடு உண்டு என்பதால், திருகோணமலை மாவட்டத்திலேயே முதலிடம் பெற்றுள்ள முஸாதிகா இலங்கையில் உள்ள எந்த முன்னணி பல்கலைக்கழகத்திலும் எம்.பி.பி.எஸ் படிக்க முடியும். கடந்த வருடம் உயர்தர பரீட்சையில்…

மேலும்...