இந்திய இங்கிலாந்து விமான சேவை ரத்து!

புதுடெல்லி (21 டிச 2020): இந்திய இங்கிலாந்து விமான சேவையை ரத்து செய்வதாக இந்திய விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், அந்நாட்டில் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் புதியவகை கொரோனா பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை பல நாடுகள் தடை…

மேலும்...

இங்கிலாந்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா- மூன்றடுக்கு ஊரடங்கு உத்தரவு!

லண்டன் (14 அக் 2020): இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் மூன்றடுக்கு ஊரடங்கிற்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். இங்கிலாந்தின் வடக்கில் கொரோனா தொற்று பரவல் மிகவேகமாக பரவி வருகின்றது. வரவிருக்கும் வாரங்களில் இறப்புக்கள் அதிகரிக்கும் என்றும், கடந்த மாத தொடக்கத்திலிருந்து தொற்று பரவல் வேகம் அதிகரித்து வருகின்றது என்றும், துணை தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் ஜொனாதன் வான்-டாம் சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய புள்ளிவிவரங்கள் இளையவர்களிடையே வைரஸ் விரைவாக…

மேலும்...

விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டது உண்மையா?

புதுடெல்லி (04 ஜூன் 2020): மோசடி மன்னன் விஜய் மல்லையா இந்தியா அனுப்பப்பட்டதாக வெளியான தகவலை இங்கிலாந்து மறுத்துள்ளது. வங்கி மோசடி செய்துவிட்டு லண்டனில் வசித்து வரும் விஜய் மல்லையா, நேற்றிரவு மும்பை கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் பரவின. அங்குள்ள ஆர்தர் சாலை சிறையில் அவர் அடைக்கப்பட்டதாகவும் செய்திகள் உலா வந்தன. ஆனால், இதனை மல்லையாவின் வழக்கறிஞர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகளில் ரூ.9,961 கோடி கடன் ஏய்ப்பு செய்துவிட்டு லண்டனுக்கு…

மேலும்...

கொரோனாவை வைத்து வியாபாரம் – பள்ளி சிறுவன் சஸ்பெண்டு!

லண்டன் (14 மார்ச் 2020): இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவலை வைத்து வியாபாரம் செய்த பள்ளிச் சிறுவனை பள்ளி நிர்வாகம் இடைநீக்கம்  செய்துள்ளது. இங்கிலாந்தின் லீட்ஸ் நகரைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஆலிவர் கூப்பர். அந்த நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். தினமும் காலையில் பள்ளிக்குக் கிளம்பும் முன் ரேடியோ கேட்பதை வழக்கமாக கொண்டிருக்கும் இந்த மாணவன், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு செய்தியை ரேடியாவில் கேட்டுள்ளான். உடனே, மெடிக்கல்…

மேலும்...

சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

லண்டன் (11 மார்ச் 2020): இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிசும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி கொரோனா வைரஸ் தோன்றியது. இந்த 3 மாத காலத்தில் அந்த வைரஸ் 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி விட்டது. சீனாவில் அதன் தாக்கம் சற்றே குறைந்து வந்தாலும் இத்தாலி, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் ஆதிக்கம் வலுத்து வருகிறது. வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவற்றையும் கொரோனா…

மேலும்...