ராமர் கோவிலுக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கும் முடிச்சு போடும் யோகி ஆதித்யநாத்!

லக்னோ (18 டிச 2020): அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது பிடிக்காதவர்களே விவசாயிகள் போராட்டத்தை பின்னின்று இயக்குகிறார்கள் என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். விவசாய சட்டத்திற்கு ஆதரவான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள யோகி ஆதித்யநாத், இதுகுறித்து கூறுகையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை பிடிக்காதவர்கள் விவசாயிகளை உசுப்பேற்றி நாட்டை ஸ்திரமின்மைக்கு உட்படுத்த முயற்சிப்பதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். ‘இந்தியா ஒரு சிறந்த இந்தியாவாக இருக்க விரும்பாத மக்கள் போராட்டத்தின் பின்னால் உள்ளனர். ஆதரவு…

மேலும்...
Supreme court of India

விவசாயிகள் போராட முழு உரிமை உண்டு – உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!

புதுடெல்லி (17 டிச 2020): விவசாயிகள் போராட்டம் நடத்த முழு உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் வேலைநிறுத்தம் தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இவ்வாறு தெரிவித்தது. மேலும் மறு விசாரணையை ஜனவரி வரை ஒத்திவைத்துள்ளது. மேலும் விவசாய சட்டங்களின் சட்டப்பூர்வ செல்லுபடியாகும் தன்மை இப்போது ஆராயப்படாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. விவசாயிகளின் நிலை குறித்து நீதிமன்றம் கவலை தெரிவித்த அதே நேரத்தில், விவசாயிகளுக்கு போராடும் உரிமை உண்டு, அதில் நீதிமன்றம் தலையிட…

மேலும்...

விவசாயிகளுக்காக தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட மதகுரு!

புதுடெல்லி (17 டிச 2020): விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் டெல்லியில் உள்ள சிங்கு எல்லையில் ஒரு சீக்கிய மதகுரு பாபா ராம்சிங் தற்கொலை செய்து கொண்டுள்ளார். விவசாயிகளின் அவலத்தால் விரக்திடைந்த அறுபத்தைந்து வயது பாபா ராம்சிங் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு முன்பு எழுதியுள்ள கடிதம் விவசாயிகளுக்கு இழைக்கப்படும் கொடுமையை தெளிவுபடுத்துகிறது. “உரிமைகளுக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் போராடிவரும் விவசாயிகளின் நிலைமை என்னைப் பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அரசு அவர்களுக்கு நீதி வழங்கவில்லை..விவசாயிகளின்…

மேலும்...

அம்பானி வீட்டை முற்றுகையிட விவசாயிகள் முடிவு!

புதுடெல்லி (17 டிச 2020): விவசாயிகளின் போராட்டத்தின் அடுத்த கட்டமாக, அம்பானி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் செய்ய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தீவிரமாக போராடி வருகின்றனர். இந்த சட்டங்கள் விவசாயத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைய வழிவகை செய்யும் என கூறப்படுகிறது. இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் நிலையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மும்பையில்…

மேலும்...

சங் பரிவாருக்கு விடை கொடுத்த மோச்சி – இன்று டெல்லியில் விவசாயிகளுடன் போராட்டம்!

புதுடெல்லி (16 டிச 2020): அன்று சங் பரிவருக்காக கொடியை ஏந்தி குஜராத் கலவரத்தில் ஈடுபட்ட அசோக் மோச்சி, இன்று சிவப்பு கொடியுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் குஜராத் இனப்படுகொலையின் முக்கிய நபராக அசோக் மோச்சியை சங் பரிவார் பயன்படுத்திக் கொண்டது. தன்னை இனப்படுகொலையின் ஒரு பகுதியாக ஆக்குவது உட்பட சங்க பரிவாரின் அனைத்து அட்டூழியங்களையும் அசோக் மோச்சி பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். பாஜகவிடமிருந்து விடை பெற்ற அசோக் மோச்சி,பல இடங்களில் சங்க பரிவருக்கு எதிரான போராட்டங்களில் கலந்து…

மேலும்...

மத்திய அரசு தொடர்ந்து பிடிவாதம் – மேலும் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்!

புதுடெல்லி (16 டிச 2020): விவசாய சட்டங்களுக்கு எதிராக நடந்துவரும் விவசாயிகளின் போராட்டம், மேலும் தீவிரமடைந்து வருகிறது. போராட்டம் துவங்கி, இன்றோடு 21 நாட்களாகின்றன. டெல்லி-நொய்டா எல்லையில் உள்ள விவசாயிகள், இன்று அப்பகுதியை முற்றிலுமாக சுற்றி வளைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். பெண்கள் உட்பட உழவர் குழுக்கள் ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து தொடர்ந்து வருகின்றனர். இதனால் போராட்டம் மேலும் தீவிரமடைந்து வருகிறது. அதே சமயம், “இந்தச் சட்டம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டதாகவும், உண்மையான…

மேலும்...

தொடரும் போராட்டம் – விவசாய சட்டத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு!

புதுடெல்லி (15 டிச 2020): நியாயமற்ற வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் நடத்திவரும் வேலைநிறுத்தம், இருபதாம் நாளிலும் தொடர்கிறது. இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவிருக்கும் கூட்டத்தில், எதிர்கால வேலைநிறுத்த திட்டங்கள் குறித்து விவசாயிகள் அமைப்புகள் முடிவு செய்யும். இதற்கிடையில், மூன்று புதிய சட்டங்களின் பெயர்களை மாற்றும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. “சட்டத்தை முழுமையாக ரத்து செய்யாமல் வேலைநிறுத்தம் நிறுத்தப்படாது!” என்று விவசாயிகள் அமைப்பினர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இதற்கிடையில் சட்டத்தின் பெயரை…

மேலும்...

டெல்லியில் தொடரும் பரபரப்பு – விவசாயிகளுக்கு ஆதரவாக டிஐஜி பதவி விலகல்!

புதுடெல்லி (14 டிச 2020): மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுக்கு ஆதரவாக பஞ்சாப் சிறை டி.ஐ.ஜி லக்மிந்தர் சிங் ஜாகர் பதவி விலகியுள்ளார். டி.ஐ.ஜி லக்மிந்தர் சிங் தனது ராஜினாமாவை உள்துறை துறை முதன்மை செயலாளருக்கு அனுப்பியுள்ளதாக கூறினார். டெல்லியில் உள்ள போராட்ட காலத்திற்கு விரைவில் வருகை தருவதாக அவர் கூறினார். மேலும் அவரது ராஜினாமா குறித்து அவர் கூறுகையில் “நான் அடிப்படையில் ஒரு விவசாயி, பின்னர்தான் நான் ஒரு போலீஸ்காரராக இருக்க…

மேலும்...
Supreme court of India

விவசாய சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்கிழமை விசாரணை!

புதுடெல்லி (13 டிச 2020): விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் அமைப்புகள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்கவுள்ளது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுவதில் மெத்தனம் காட்டி வரும் நிலையில் விவசாய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளன. இதற்கிடையே போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஆக்ரா அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். போராட்டத்தை மேலும் வலுப்பெறும் நோக்கத்தில் இதன்…

மேலும்...

டெல்லி போராட்டத்தில் 11 விவசாயிகள் பலி – மோடி அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (12 டிச 2020): மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வருகிற போராட்டம் இன்று 17–வது நாளை எட்டியுள்ளது. இந்த போராட்டத்தில் இதுவரை 11 விவசாயிகள் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான பத்திரிகை செய்தியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று இணைத்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ‘‘வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வைப்பதற்காக இன்னும் எத்தனை…

மேலும்...