மீண்டும் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்!

புதுடெல்லி (27 நவ 2022): நாட்டில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் நேற்று ராஜ்பவனுக்கு விவசாயிகள் பேரணியாக செல்கின்றனர். ஆதரவு விலை உள்ளிட்ட விவகாரங்களில் அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு மீறுவதாக வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் அடுத்த கட்ட போராட்டத்தின் தொடக்கமாக நேற்றைய போராட்டமாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கடன் தள்ளுபடி, லக்கிம்பூர் விவசாயிகளின் மரணத்துக்கு காரணமான அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்து…

மேலும்...

வேளாண் சட்டம் ரத்து – மோடியின் வாக்குறுதியை விவசாயிகள் நம்பத் தயாரில்லை – ராகுல் காந்தி!

புதுடெல்லி (21 நவ 2021): பிரதமரின் வார்த்தைகளை விவசாயிகள் நம்பத் தயாராக இல்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். விவசாய சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று ஐக்கிய கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) அறிவித்ததை அடுத்து ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கடந்த கால அனுபவங்கள் விவசாயிகளை வேலைநிறுத்தத்தைத் தொடரத் தூண்டியுள்ளன. நரேந்திர மோடி முன்பு பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளார். மக்கள் இன்னும் அவரின் பொய்யான…

மேலும்...

நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன் விவசாயிகள் பிரச்சனையை தீர்க்க ஒன்றிய அரசு முடிவு!

புதுடெல்லி (21 நவ 2021): விவசாயிகள் போராட்டத்தை, பார்லிமென்ட் கூட்டத்தொடருக்கு முன் தீர்த்து வைக்க, ஒன்றிய அரசு முயற்சியில் உள்ளது. அடுத்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், விவசாய சட்டத்தை ரத்து செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம். நாளைக்குள் மசோதா தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், சர்ச்சைக்குரிய விவசாயச் சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு, கூட்டு கிசான் மோர்ச்சாவின் முக்கியமான கூட்டம் இன்று நடைபெறுகிறது. பிரதமரின் அறிவிப்பு மற்றும் போராட்ட வழிமுறைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும். நாடாளுமன்றத்தில் சட்டத்தை…

மேலும்...

நாடாளுமன்றத்தில் வாபஸ் பெறாமல் போராட்டம் வாபஸ் இல்லை – விவசாயிகள் அறிவிப்பு!

புதுடெல்லி(21 நவ 2021): வேளாண் சட்டம் திரும்பப் பெற்றபோதிலும், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றாமல் போராட்டம் வாபஸ் இல்லை என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். விவசாயச் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து வேலைநிறுத்தத்தின் எதிர்காலம் குறித்து முடிவு செய்வதற்காக கூட்டு கிசான் மோர்ச்சா (ஜேகேஎம்) இன்று சிங்கில் கூடுகிறது. முன்னதாக நேற்று விவசாயிகள் அமைப்புகளின் கோர் கமிட்டி கூடி டெல்லி எல்லையில் போராட்டம் தொடரும் என அறிவித்தது. லக்னோவில் இன்று நடைபெறும் மகா பஞ்சாயத்து…

மேலும்...

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன் தள்ளுபடி – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!

சென்னை (05 பிப் 2021):கூட்டுறவு வங்கிகளில் 16,43 லட்சம் விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்- அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் முதல் -அமைச்சர் அறிவித்துள்ளார். விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில், கடந்த 2016-ஆம் ஆண்டில் தமிழக அரசு பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது….

மேலும்...

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்!

திருவனந்தபுரம் (31 டிச 2020): மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள், தங்கள் நலனுக்கு எதிரானவை என்று கருதி அவற்றுக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு வட மாநிலங்களை, குறிப்பாக பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு பல்வேறு மாநில அரசுகளும்…

மேலும்...

மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி – போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு!

புதுடெல்லி (01 நவ 2020): மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் 32 விவசாயிகள் பிரதிநிதிகள் மற்றும் மூன்று பேர் உட்பட முப்பத்தைந்து பேர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னதாக, மையம் அழைத்த கூட்டத்தில், விவசாயிகளின் பிரதிநிதிகள் 32 பேரை மட்டுமே கலந்து கொள்வார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது…

மேலும்...

விவசாயிகள் மீதான கொடூர தாக்குதலில் 110 பேர் படுகொலை!

நைஜீரியா (30 நவ 2020): நைஜீரியாவில் விவசாயிகள் மீதான கொடூர தாக்குதலில் 110 பேர் கொல்லப்பட் டுள்ளனர். நைஜீரியாவில் வயலில் அறுவடை செய்யும் விவசாயிகள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதமேந்திய குழு ஒன்று துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த தாக்குதலில் 110 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. நைஜீரிய ஜனாதிபதி முகமது புஹாரி இந்த தாக்குதலை கண்டித்துள்ளார். ஆனால் விவசாயிகள் மீதான வெகுஜன தாக்குதல்கள் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக்கு பேராபத்து என்பதாக…

மேலும்...

நாட்டின் அனைத்து விவசாயிகளுக்கும் போராட்டத்திற்கு அழைப்பு – திணறும் டெல்லி!

புதுடெல்லி (30 நவ 2020): வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் ஒட்டு மொத்த இந்திய விவசாயிகளுக்கான போராட்டம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர். டெல்லி அரியானா எல்லையில் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடங்கி நான்கு நாட்கள் ஆகின்றன. கிளர்ச்சி தீவிரமடைந்து வருகிறது, மத்திய அரசு போராட்டத்தை நிபந்தனைகளுடன் முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர். “இந்த விவசாய…

மேலும்...

அமித்ஷாவின் கோரிக்கையை ஏற்க விவசாயிகள் மறுப்பு!

புதுடெல்லி (29 நவ 2020): வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மூன்று சட்டங்களையும் திரும்பப் பெரும் வரை போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். டெல்லியில் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகளின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் டிசம்பர் 3 ம் தேதி விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்பு தெரிவித்திருந்தார். புராடியில் உள்ள சமரவேதிக்கு போராட்ட இடத்தை மாற்ற வேண்டும் எனவும் மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால்…

மேலும்...