குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக மாணவர்களை தவறாக வழிநடத்தும் பள்ளி!

அஹமதாபாத் (09 ஜன 2020): குஜராத்தில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பிரதமருக்கு கடிதம் எழுத வேண்டும் என மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். அஹமதாபாத் லிட்டில் ஸ்டார் பள்ளியில் 6 முதல் 10 வகுப்பு மாணவர்கள் போஸ்ட் கார்டில் பிரதமருக்கு குடியுரிமை சட்டத்தை ஆதரித்து கடிதம் எழுத கட்டாயப் படுத்தப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களிடமும் போஸ்ட் கார்டை கொடுத்து அவர்கள் போர்டில் எழுதும் வாக்கியத்தை மாணவர்கள் அனைவரும் எழுத வேண்டும் என்றும் இது பயிற்சிதான் என்பதாகவும் பொய்யான வகையில் மாணவர்களை…

மேலும்...

குஜராத்தில் ஏபிவிபி குண்டர்களின் அட்டூழியம் – மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்!

அஹமதாபாத் (07 ஜன 2020): அஹமதாபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பினர் கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்‍கழக மாணவர்கள் மீதான தாக்‍குதலுக்‍கு எதிர்ப்பு தெரிவித்து, குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஏபிவிபி அலுவலகம் முன்பு SUCI எனப்படும் தேசிய மாணவர் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. அப்போது . ABVP அமைப்பினர் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது நடத்திய பயங்கர தாக்‍குதலில் மாணவர்கள் சிலர் காயமடைந்தனர்….

மேலும்...

ஒரே மாதத்தில் 219 குழந்தைகள் மரணம் – பதிலளிக்காமல் மழுப்பும் முதல்வர்!

அஹமதாபாத் (06 ஜன 2020): குஜராத்தில் ஒரே மாதத்தில் 219 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் அரசு மருத்துவமனையில் 134 பச்சிளம் குழந்தைகளும், அகமதாபாத் அரசு மருத்துவமனையில் 85 பச்சிளம் குழந்தைகளும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜ்கோட் மருத்துவ மனையில் 2019 ஆம் ஆண்டில் மட்டும் 1,235 குழந்தைகள் பலியானதாகக் கூறப்படுகிறது. இது குறித்து முதலமைச்சர் விஜய் ரூபானியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். ஆனால் அவர் பதிலளிக்காமல் நழுவிச் சென்றார். ராஜஸ்தான் மாநிலம்…

மேலும்...