வன்முறையாக மாறிய ஹிஜாப் தடை விவகாரம் – கல் வீச்சு, காவல்துறை தடியடி!

பெங்களூரு (08 பிப் 2022): கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் தடை விவகாரம் வன்முறையாக மாறியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கல்லூரி வரும் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப் பட்டதை அடுத்து ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நாடெங்கும் எதிர்ப்பு வலுத்துள்ளது. இந்நிலையில் செவ்வாயன்று கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் உள்ள ரபகவிபனஹட்டியில் உள்ள அரசுப் பல்கலைக் கழக கல்லூரியில் இரு பிரிவினர் ஒருவர் மீது ஒருவர் கல் வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை…

மேலும்...

ஹிஜாப் சர்ச்சை – முஸ்லீம் மாணவிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய தலித் மாணவர்கள்!

உடுப்பி (07 பிப் 2022): கர்நாடகாவில் முஸ்லீம் மாணவிகளுக்கு ஆதரவாக தலித் மாணவர்கள் ஊதா துண்டு அணிந்து கொண்டு கல்லூரி வளாகத்திற்குள் வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் பாஜக அரசை பல தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஹிஜாபுக்கு எதிராக ஆர் எஸ் எஸ், பாஜக மாணவர் அமைப்பினர் காவி துண்டு அணிந்து கல்லூரிக்குள் நுழைந்தனர். இதனை கண்டிக்கும் வகையிலும் முஸ்லீம் மாணவிகளுக்கு…

மேலும்...

கர்நாடகா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வர மாணவிகளுக்கு அனுமதி!

உடுப்பி (07 பிப் 2022): பல நாள் போராட்டத்துக்குப் பிறகு, கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தபுரா பகுதியில் உள்ள அரசு கல்லூரி வளாகத்திற்குள் திங்கள்கிழமை ஹிஜாப் அணிந்த மாணவியர் நுழைய அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், அவர்கள் தனி வகுப்பறைகளில் அமர வைக்கப்படுவார்கள் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. குந்தபுராவில் நிலைமை கட்டுக்குள் உள்ளது, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு இல்லை என்று உடுப்பி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.டி.சித்தலிங்கப்பா தெரிவித்தார். வெள்ளிக்கிழமை அரசு பியு கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து நுழைய…

மேலும்...

எந்த சூழலிலும் ஹிஜாபை கைவிடமாட்டோம் – மாணவிகள் திட்டவட்டம்!

பெங்களூரு (05 பிப் 2022): எந்தச் சூழலிலும் ஹிஜாபை கைவிடமாட்டோம் என்று கர்நாடக கல்லூரி மாணவிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள பல கல்லூரிகளில் மாணவிகள் வகுப்புக்கு ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இது ஒருபுறமிருக்க முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது, இல்லையென்றால் நாங்கள் காவித் துண்டு அணிந்து வருவோம் என்று ஆர் எஸ் எஸ் அமைப்பு மாணவர்கள் காவித் துண்டுகளுடன் கல்லூரிகளுக்குள் நுழைந்து போராட்டம்…

மேலும்...

தடையை மீறி ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு செல்லும் மாணவிகள்!

உடுப்பி (01 பிப் 2022): கர்நாடகா மாநில அரசுக் கல்லூரியில் தடையை மீறி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்குச் செல்ல முடிவு செய்திருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மாநில கல்லூரியில் மாணவிகள் வகுப்பு ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பிப்ரவரி 1ம் தேதி (செவ்வாய்கிழமை) உலக ஹிஜாப் தினமாக கொண்டாடப்படுவதால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாணவர்கள் தரப்பில்…

மேலும்...

ஹிஜாப் அணிவதையே விரும்புகிறேன் – மாடல் உலகிலிருந்து விலகுவதாக பிரபல மாடல் திடீர் அறிவிப்பு!

நியூயார்க் (27 நவ 2020): இஸ்லாமிய வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றும் விதமாக மாடல் உலகிலிருந்து விலகுவதாக பிரபல அமெரிக்க மாடல் ஹலீமா ஏடன் அறிவித்துள்ளார். ஃபேஷன் உலகில் கொடி கட்டிப் பறந்தவர் 23 வயதான அமெரிக்க மாடலான ஹலீமா ஏடன். இவர் ஹிஜாப் அணிந்து, கன்யே வெஸ்டின் யீஸி உள்ளிட்ட முக்கிய பேஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் தற்போது ஹிஜாப் அணிந்து மாடல் உலகில் தொடர்வது நெருக்கடியை ஏற்படுத்துவதாகக் கூறி, மாடல் உலகிலிருந்து விலகுவதாக அவர்…

மேலும்...

பீகார் கல்லூரியில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை!

பாட்னா (25 ஜன 2020): பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு கல்லூரியில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது திரும்ப பெறப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் ஜே.டி பெண்கள் கல்லூரி உள்ளது. அங்கு சமீபத்தில் சர்ச்சைக்குரிய ஒரு அறிவிப்பு வெளியானதால், மாணவர்களும் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அறிவிப்பில், “முஸ்லிம் பெண்கள் கல்லூரி வளாகத்திற்குள் புர்கா அணியக் கூடாது!” என்றும் “மீறினால் ரூ.250 அபராதம் விதிக்கப்படும்!” எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த…

மேலும்...