வரலாற்றில் எழுதப்படும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான ஷாஹீன் பாக் போராட்டம்!

புதுடெல்லி (13 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிரான டெல்லி ஷாஹீன் பாக் போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதமாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் இந்நிலையில் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு , கடந்த ஒரு மாதமாகத் தொடர்…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் நடந்தது என்ன? – மழுப்பும் காவல்துறை!

மீரட் (13 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் நிலை குறித்து போலீசார் சரியான தகவல் சொல்லவில்லை என கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். மீரட் நகரில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் பலியானவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை, இதுவரை அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் நடந்த போராட்டத்தின்போது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதிலேயே பலர் கொல்லப் பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கூட்டத்தை கலைப்பதற்காக காவலர்கள்…

மேலும்...

குடியுரிமை சட்ட திருத்தம் நாடு முழுவதும் அமுலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவிப்பு!

புதுடெல்லி (11 ஜன 2020): தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் ஜனவரி 10ம் தேதி முதல் நாடுமுழுவதும் அமலுக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது அதில், ஜனவரி 10ம் தேதி முதல் குடியுரிமை திருத்தச் சட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய இஸ்லாமிய சமூகத்தினர் பெரும்பான்மை வகிக்கும் நாடுகளில் இருந்து சிறுபான்மையினராக இருக்கும் இந்து, சீக்கிய…

மேலும்...

தமிழக இஸ்லாமிய அரசியல் கட்சி தலைவர்கள் முதல்வருடன் சந்திப்பு!

சென்னை (10 ஜன 2020): குடியுரிமை சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்று கோரிக்கையுடன் தமிழக இஸ்லாமிய அரசியல் கட்சி பிரமுகர்கள் முதல்வர் எடப்பாடியை சந்தித்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் NRC & NPR போன்றவற்றை மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலையில் இதனை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் தமிழக…

மேலும்...

முஸ்லிமாக மாறத் தயார் – நடிகர் ராதாரவி!

சென்னை (08 ஜன 2020): குடியுரிமை சட்டம் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானதாக இருந்தால் நான் முஸ்லிமாகவே மாற தயாராக உள்ளேன் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். அவ்வப்போது சுயநலத்திற்காக கட்சி தாவும் ராதாரவி, திராவிட பாரம்பர்ய கொள்கையை அடகு வைத்து பாஜகவில் இணைந்துள்ளார். இந்நிலையில் சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவான பிரச்சாரத்தில் பேசிய ராதாரவி , “நான் இவ்வளவு நாட்களாக ஏமாற்று கூட்டத்தில் இருந்தேன், இப்போது அதிலிருந்து விடுதலை பெற்றுள்ளேன். குடியுரிமை சட்டத்தை…

மேலும்...

போராட்டம் எதிரொலி – மோடி அமித் ஷா அசாம் செல்வதை நிராகரித்தனர்!

புதுடெல்லி (08 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களின் எதிரொலியாக மோடி தனது அசாம் பயணத்தை ரத்து செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகிழக்கு மாநிலமான அசாமில் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு ‘கேலோ இந்தியா’ இளைஞர் விளையாட்டு திருவிழா நடைபெறவுள்ளது. இதனை தொடங்கி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விழாவில் பங்கேற்பதை மோடி…

மேலும்...