திமுக எம்.எல்.ஏ மரணம் – ஜவாஹிருல்லா இரங்கல்!

சென்னை (10 ஜூன் 2020): கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுமார் 13 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க.வின் தென்சென்னை மாவட்டச் செயலாளராக சீரிய முறையில் பணியாற்றிய திருவல்லிக்கேணி – சேப்பாக்கம்…

மேலும்...

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவால் காலமானார்!

சென்னை (10 ஜுன் 2020): கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதும் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரான ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 2ம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜெ.அன்பழகனுக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது….

மேலும்...

திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்!

சென்னை (08 ஜூன் 2020): திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜெ.அன்பழகன்,61 இவருக்கு, சில நாட்களுக்கு முன் , மூச்சு திணறல் ஏற்பட்டதால், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. கடந்த, 4ம்தேதி, வென்டிலேட்டர் வாயிலாக, 80 சதவீதம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. பின்னர் ஆக்சிஜன் அளவு குறைக்கப்பட்டதால் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது’ என,…

மேலும்...

திமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல் நிலை எப்படி உள்ளது? – மருத்துவமனை தகவல்!

சென்னை (06 ஜூன் 2020): திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உடல் நிலையில் முன்னேற்றம் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து மருத்துவமனை மருத்துவர்…

மேலும்...

திமுக எம்.எல்.ஏ ஜே. அன்பழகன் உடல் நிலை குறித்து மருத்துவமனை பரபரப்பு அறிக்கை!

சென்னை (04 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜே. அன்பழகன் 80 சதவீதம் வெண்டிலேஷன் உதவியிலேயே சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. திமுக-வின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் , ஜூன் 2 ஆம் தேதி இரவு சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூச்சுத் திணறலோடு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா டெஸ்ட்…

மேலும்...

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (03 ஜூன் 2020): திமுக-வின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில்,1,286 பேருக்கு தமிழகத்தில் கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 11 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கையும் 208 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் திமுக-வின்…

மேலும்...

ஆளுநர் உரை கிழிக்கிற உரைதான் – கொந்தளித்த ஜெ.அன்பழகன்!

சென்னை (07 ஜன 2020): சட்டமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்.எல்.ஏ.ஜெ.அன்பழகன் கலந்துகொள்ள தடை விதித்திருக்கிறார் சபாநாயகர் தனபால். இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெ. அன்பழகன்,” சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தில் திமுக சார்பில் நான் கலந்து கொண்டேன். நான் பேசும்போது திட்டமிட்டு என்னை பேசவிடாமல் அமைச்சர் பெருமக்கள், சபாநாயகர் அத்துனை பேரும் குறுக்கீடு செய்தனர். நான் பேசக்கூடாது எனது கருத்து இந்த அவையிலே இடம்பெறக்கூடாது என்பதில் அனைவரும் அக்கறையோடு இருந்தார்கள். உள்ளாட்சித்…

மேலும்...