எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தால் நடிகர் சூர்யாவுக்கு புது சிக்கல்!

சென்னை (11 மார்ச் 2022): நடிகர் சூர்யாவுக்கு ஜெய்பீம் படத்தில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் நேற்று வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தாலும் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில், பாடலாசிரியர் யுகபாரதி எழுதியுள்ள ‘உள்ளம் உருகுதையா’ பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், தமிழ் கடவுளான முருகனை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இப்பாடலை படத்திலிருந்து நீக்கக் கோரி, அகில இந்திய நேதாஜி கட்சியினர் கோவை…

மேலும்...

விருதுகளை குவிக்கும் ஜெய் பீம் திரைப்படம்!

சென்னை (24 ஜன 2022): ஞானவேல் எழுதி இயக்கி வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தை சூர்யா நடித்ததோடு தனது 2டி எண்டெர்டெயிண்ட் நிறுவனம் மூலம் அவரே தயாரித்திருந்தார். இருளர் சமூகத்தினர் சந்தித்த ஒரு பிரச்சனையை மையமாகக் கொண்டு, அவர்களுக்காக வழக்கறிஞர் சந்துரு என்பவர் எப்படி போராடி நியாயம் பெற்று தந்தார் என்கிற உண்மை சம்பவத்தை திரைக்கதை ஆக்கியிருந்தனர். இப்படம் பலவேறு தரப்பிலும் பாராட்டைப் பெற்றது. ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் என பலரும் இப்படத்தை பாராட்டினர்….

மேலும்...

ஜெய்பீம் சர்ச்சை – வருத்தம் தெரிவித்தார் இயக்குநர்!

சென்னை(19 நவ2021): நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதேபோல், குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் விமர்சனம் எழுந்தது. இதை தொடர்ந்து இந்த காட்சி மாற்றப்பட்டது. இது தொடர்பாக பல மாவட்டங்களில் சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போலீசிலும் நடிகர் சூர்யா மற்றும்…

மேலும்...

நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு – வீட்டிலே இருப்பதே துரை சிங்கம்தான் – நெட்டிசன்கள் கருத்து!

சென்னை (17 நவ 2021): நடிகர் சூர்யா வீட்டுக்கு ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி, ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. இந்தப் படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது. ஜெய்பீம் திரைப்படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினை தவறாக சித்தரிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சிலரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. படத்தில் இடம்பெற்ற காலண்டர் மாற்றப்பட்ட பிறகும் எதிர்ப்பு தொடர்கிறது. இதனிடையே, ஜெய்பீம் படம் குறிப்பிட்ட சமூகத்தை அவமதிப்பதாக்…

மேலும்...

ஜெய்பீம் – (சினிமா விமர்சனம்) பிரமிக்க வைக்கும் சினிமா!

தமிழ் சினிமாவில் ஒரு சில படைப்புகள் தான் காலத்தை தாண்டி நம் மனதின் நீங்கா இடம்பிடித்து நிற்கும். தரமான படமாக நிற்கிறது ஜெய்பீம் 1995ம் ஆண்டு அரசாங்கம் சில பெண்டிங் வழக்குகளை உடனே முடிக்க சொல்லி ஆர்டர் போட, போலிஸார் அதற்கான வேலைகளில் இறங்கின்றனர். அதிலிருந்து தொடங்கும் படம், பழங்குடி இருளர் வாழ்க்கையை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து காட்டுகிறது. எலிக்கறி சாப்பிடுவதிலிருந்து அவர்கள் வாழ்க்கையை நாமே ஏதோ அருகில் பார்த்த உணர்வை இயக்குனர் கடத்துகிறார்….

மேலும்...