ஆப்கான் ஐ எஸ் ஐ எஸ் தளங்கள் மீது அமெரிக்கா ட்ரோன் தாக்குதல்

காபூல் (28 ஆக 2021): காபூல் விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா . நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஐஎஸ்கே தளத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. வியாழக்கிழமை இரவு காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே இரண்டு தற்கொலை குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன. இந்த இரட்டை குண்டுவெடிப்புகளில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 170 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக,…

மேலும்...

காபூல் விமான நிலையத்தை அதிர வைத்த வெடிகுண்டு தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலி!

காபூல் (27 ஆக 2021): ஆப்கானிஸ்தன் காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 90 உயிரிழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், காபூல் இரண்டு தற்கொலை குண்டுவீச்சாளர்கள் மற்றும் ஆயுததாரிகள் ஆப்கானிஸ்தான் மக்கள் கூட்டத்தைத் தாக்கியதில் குறைந்தது 90 ஆப்கானியர்களும் 13 அமெரிக்க துருப்புக்களும் கொல்லப்பட்டதாகவும் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தததாகவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் வெளியாகியுள்ள தகவல்களின்படி, தலிபான்கள் “குண்டுவெடிப்பைக் கண்டித்துள்ளனர்”,இஸ்லாமிக் ஸ்டேட் குழு அதன் அமாக் செய்தி சேனலில் இந்த…

மேலும்...

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சண்டை!

காபூல் (23 ஆக 2021): காபூல் விமான நிலையத்தின் வடக்கு நுழைவு வாயிலில், ஆப்கன் வீரர்களும் அடையாளம் தெரியாத சிலரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியுள்ளதையடுத்து, அங்குள்ள தங்கள் குடிமக்களை அழைத்து வர பல்வேறு நாடுகள் தொடர் நடவடிக்கை எடுத்துவருகின்றன. இந்தநிலையில், ஆப்கன் வீரர்களுக்கும் அடையாளம் தெரியாத சிலரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, அமெரிக்க மற்றும் ஜெர்மன் இராணுவ வீரர்களும் இணைந்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த…

மேலும்...

ஆப்கானிஸ்தானில் மேலும் பல இந்தியர்கள் சிக்கித் தவிப்பு!

புதுடெல்லி (20 ஆக 2021): ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் மேலும் பல இந்தியர்களை இந்தியா கொண்டு வர சார்ட்டர்ட் விமானங்களை அனுப்ப இந்தியா அமெரிக்காவிடம் அனுமதி கோரியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைபற்றிய நிலையில் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. அங்கு சிக்கிய இந்தியர்கள் பலர் விமானப்படை விமானங்கள் மூலம் இந்தியா திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இதற்கிடையே அங்கு மேலும் சிக்கியிருக்கும் 400 க்கும் அதிகமான இந்தியர்களை இந்தியா கொண்டு வர சார்ட்டர் விமானங்களை அனுப்ப இந்தியா அமெரிக்காவிடம்…

மேலும்...

என்ன நடக்குமோ ஏது நடக்குமோ – பரபரப்பில் காபூல்!

காபூல் (16 ஆக 2021): ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு இருந்த அமெரிக்க படையின் பெரும் பகுதி வெளியேறிவிட்ட நிலையில் 6 ஆயிரம் வீரர்கள் மட்டும் ஆப்கானிஸ்தானில் உள்ளனர். அவர்கள் தற்போது விமான நிலையத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய கட்டுப்பாட்டில் விமான நிலையம் மட்டும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். நேற்று தலைநகரம் காபூலுக்குள் நுழைந்த தலிபான்கள் முக்கிய கட்டிடங்கள் அனைத்தையும் சில மணி நேரத்துக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்….

மேலும்...