ஓமானில் தண்டனை இல்லாமல் நாடுகளுக்கு திரும்பி செல்ல கால அளவு நீட்டிப்பு!

மஸ்கட் (06 ஜன 2021): போதுமான ஆவணங்கள் இல்லாமல் ஓமானில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களை திருப்பி அனுப்பும் திட்டம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, ஓமானின் தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில், அமுறையான ஆவணங்கள் இல்லாமல் ஓமானில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களை ஆபராதம் அல்லது தண்டனை இல்லாமல் திருப்பி அனுப்பும் திட்டம் டிசம்பர் 31 வரை அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஓமானிய தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது….

மேலும்...

காசா மீதான இஸ்ரேல் வான் தாக்குதலில் சிறுமி உட்பட இருவர் படுகாயம்!

காசா(26 டிச 2020): காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் சிறுமி உட்பட இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் உள்ள ஹமாஸ் தளங்களை நோக்கியே இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப் பட்டதாக கூறப்படுகிறது இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா பகுதியின் கிழக்கு, வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் நடத்திய இந்த தாக்குதலில் ஆறு வயது சிறுமியும் 20 வயது இளைஞரும் காயமடைந்ததாக பாலஸ்தீன அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான வாஃபா தெரிவித்துள்ளது. வான்வழித் தாக்குதல்கள் நாட்டின் கிழக்குப்…

மேலும்...

ஒமானில் சுற்றுலா பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் முறை ரத்து!

மஸ்கட் (17 டிச 2020): ஓமானில் சுற்றுலாப் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பயணிகள் வருவதற்கு முன்பு அவர்களுக்கு கோவிட் ஆய்வு தேவையில்லை என்று பாரம்பரிய மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் கோவிட் ஆய்வுக்கு உட்படுத்தப் படுவார்கள். அங்கு கோவிட் சோதனைக்குப் பிறகு பிறகு குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் தனிமைப்படுத்தல் இருக்காது. இந்தியா உட்பட மொத்தம் 103 நாட்டினர் விசா இல்லாமல் ஓமானுக்குள் நுழைந்து 10 நாட்கள் வரை…

மேலும்...

வளைகுடா நாடுகளுடனான உறவு மிக முக்கியமானது: மத்திய அமைச்சர்!

புதுடெல்லி (28 நவ 2020): பொருளாதார மந்த நிலை உள்ள நிலையில் வளைகுடா நாடுகளுடனான உறவு மிகவும் முக்கியமானது என்று மத்திய அரசு விரும்புகிறது. இதன் அடிப்படையில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வளைகுடா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். சவூதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அங்கு பல்வேறு துறைகளில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். இருதரப்பு பேச்சுவார்த்தைகள் வளைகுடாவுடனான உறவை மேலும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. . தற்போதைய பொருளாதார மந்தநிலை ஒரு பெரிய…

மேலும்...

ஈரானில் 3500 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – 107 பேர் பலி!

தெஹ்ரான் (06 மார்ச் 2020): ஈரனில் கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை 107 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஹுபேய் மாகாண தலைநகர் வுகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கு அதிக பாதிப்பு ஏற்பட்டதுடன் தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் வளைகுடா நாடான…

மேலும்...

கத்தார் தேசிய விளையாட்டு தினம்!

தோஹா (11 பிப் 2020): கத்தார் நாட்டில் ஒன்பதாவது தேசிய விளையாட்டு தினம் பிப் 11 செவ்வயன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, காலை, கத்தார் விளையாட்டு கழகத்தில் உள்ள சுஹைம் பின் ஹமத் அரங்கத்தில் கத்தார் போலீஸ் விளையாட்டுக் கூட்டமைப்பு (QPSF) சார்பில், மூத்த அதிகாரிகள் முன்னிலையில் பல விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சியில், கத்தார் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஷேக் காலித் பின் கலிஃபா பின் அப்துல் அஜிஸ் அல்-தாணி (Sheikh Khalid…

மேலும்...

கத்தார் நாட்டில் துவங்கியது தேசிய முகவரிச் சட்ட கணக்கெடுப்பு!

தோஹா (27 ஜன 2020): வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தர் நாட்டில் வரும் திங்கள் கிழமை (இன்று) முதல் தேசிய முகவரிச் சட்ட கணக்கெடுப்பு துவங்குகிறது. தேசிய முகவரிச் சட்டம் (National Address Law) என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள இந்தப் பதிவேடு மூலம், கத்தர் நாட்டுப் பிரஜைகள் மற்றும் கத்தரில் தங்கியுள்ள வெளிநாட்டவர் அனைவரும் இன்றுமுதல் ஆறு மாதங்களுக்குள் பதிவு செய்தாக வேண்டும். இதனை உள்துறை அமைச்சகம் (Ministry of Interior) அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று பதிவு…

மேலும்...

BREAKING NEWS :துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இஸ்தான்பூல் (25 ஜன 2020): துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியின் மேற்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை இரவு 08:55 ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஈரான் லெபனான் மற்றும் சிரியாவிலும் உணரப்பட்டுள்ளது.

மேலும்...
உக்ரைன் விமான விபத்து

உக்ரைன் விமானத் தாக்குதல் பற்றி ஈரான் கூடுதல் தகவல்!

ஈராக் (21 ஜன 2020): உக்ரைன் பயணிகள் விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புக் கொண்ட நிலையில், இரண்டு ஏவுகணைகள் விமானத்தை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஈரானின் போக்குவரத்துத் துறை, முதற்கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது. 176 பயணிகளின் உயிா்களை பலி வாங்கிய இந்த விமான விபத்துக்கு இயந்திரக் கோளாறுதான் காரணம் என்று விபத்து நடந்தபோது கூறி வந்தது ஈரான். மூன்று நாட்கள் கடந்த…

மேலும்...

அபுதாபியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஆறு பேர் பலி!

அபுதாபி (16 ஜன2020): ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஆறுபேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வியாழன் காலை அல் ரஹானா கடற்கரை சாலையில் பெரிய ட்ரக்கும், லாரியும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்து போக்குவரத்து காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப் பட்டவர்களை அவசர ஊர்திகள் மூலம் மருத்துவமனைகளூக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களில் ஐந்து பேர்…

மேலும்...