மாணவர்களை நேரடியாக சந்திக்க தைரியம் உண்டா? – மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!

புதுடெல்லி (13 ஜன 2020): மாணவர்களை சந்திக்க மோடி பயப்படுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ராகுல்காந்தி, குலாம் நபி ஆசாத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட 20 கட்சிகளை சேர்ந்த…

மேலும்...

மோடி என்னிடம் பேரம் பேசினார் – ஜாகிர் நாயக் பரபரப்பு தகவல்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரது நேரடி உத்தரவின் பேரில் இந்திய அரசின் பிரதிநிதி ஒருவர் தம்மை சந்தித்துப் பேசியதாகத் இஸ்லாமிய மத போதகர் ஜகிர் நாயக் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், தாம் தகுந்த பாதுகாப்புடன் இந்தியா திரும்ப வழிவகை செய்யப்படும் என அந்தப் பிரதிநிதி தம்மிடம் உறுதியளித்ததாகவும் ஜாகிர் நாயக் குறிப்பிட்டுள்ளார். ஜாகிர் நாயக்கின் கூற்று…

மேலும்...

தமிழகம் செய்ததை பின்பற்றிய மேற்கு வங்கத்தினர்!

சென்னை (11 ஜன 2020): கோபேக் மோடி தமிழகத்தில்தான் பிரபலம். ஆனால் இபோது மோடி செல்லும் பல மாநிலங்களிலும் பிரபலம். பிரதமர் மோடி இருநாள் பயணமாக மேற்கு வங்காளம் மாநில தலைநகரம் கொல்கத்தாவுக்கு இன்று மாலை வருகை தந்தார். அவர் கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டுவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவுக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம்…

மேலும்...

எங்கே நிதியமைச்சர்? – சர்ச்சையாகும் மோடியின் நிதி தொடர்பான கூட்டம்

புதுடெல்லி (09 ஜன 2020): நிதி தொடர்பாக ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளாதது விவாத பொருளாகியுள்ளது. இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தலைமையில் இன்று (வியாழக்கிழமை) பொருளாதார வல்லுனர்களுடன் இரண்டு மணி நேர சந்திப்பு நடைபெற்றது. ஆனால் இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) பங்கேற்கவில்லை. அது ட்விட்டரில் பெரும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.

மேலும்...

போராட்டம் எதிரொலி – மோடி அமித் ஷா அசாம் செல்வதை நிராகரித்தனர்!

புதுடெல்லி (08 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களின் எதிரொலியாக மோடி தனது அசாம் பயணத்தை ரத்து செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகிழக்கு மாநிலமான அசாமில் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு ‘கேலோ இந்தியா’ இளைஞர் விளையாட்டு திருவிழா நடைபெறவுள்ளது. இதனை தொடங்கி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விழாவில் பங்கேற்பதை மோடி…

மேலும்...

மோடி அமித் ஷா விருப்பம் நிறைவேறுகிறது – சிவசேனா குற்றச்சாட்டு

மும்பை (08 ஜன 2020) மாணவர்கள் மீதான வன்முறை சம்பவத்தில் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் விரும்பியது நடந்து கொண்டு இருக்கிறது என்று சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்தது. மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை நினைவுபடுத்துகிறது என அக்கட்சியின் தலைவரும், மராட்டிய முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே தெரிவித்தார். இந்தநிலையில், இந்த சம்பவத்தில் பிரதமர்…

மேலும்...