ஹெல்மெட் அணியாயததை கண்டித்த போலீஸ்காரருக்கு பளார் விட்ட பெண்!

மும்பை (24 அக் 2020): ஏன் ஹெல்மெட் அணியவில்லை? என்று கேள்வி எழுப்பிய போக்குவரத்து போலீஸ்காரரை பெண் ஒருவர் அடித்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மும்பை கல்பாதேவியில் உள்ள சூர்த்தி ஹோட்டல் அருகே போக்குவரத்து போலீஸ் கடமையில் இருந்தபோது சங்ரிகா திவாரி, 29, என்ற பெண் அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றுகொண்டிருந்தார். அவருடன் இன்னொருவரும் இருந்துள்ளார். . இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. இதற்காக அந்த போலீஸ்காரர் அபராதம் விதித்துள்ளார்….

மேலும்...

ரூ 57 கோடி வங்கி மோசடி – பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்கு பதிவு!

மும்பை (17 ஜூன் 2020): ரூ 57 கோடி வங்கி மோசடியில் ஈடுபட்ட மும்பை பாஜக தலைவர் மோகித் கம்போஜ் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. அவியான் ஓவர்ஸீஸ் பிரைவேட் லிமிடட் நிறுவன நிர்வாக இயக்குநர் மோகித் பேங்க் ஆஃப் இந்தியாவில் பெற்ற கடனை திருப்பி அடைக்காமல் அந்த தொகையில் மோகித் நிறுவன நிர்வாக இயக்குநர் பெயரில் பிளாட் ஒன்று வாங்கியிருப்பது வங்கி நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. முன்னதாக இந்த தொகையை வராக்கடன் பட்டியலில்…

மேலும்...

இந்தியா கொண்டு வரப்பட்டார் விஜய் மல்லையா – ஆர்தர் ரோடு சிறையில் அடைப்பு!

மும்பை (04 ஜூன் 2020): இந்தியா கொண்டுவரப்பட்ட விஜய் மல்லையா மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் உள்ள 17 வங்கிகளில் 9,000 கோடி கடன் வாங்கி தொழிலதிபர் விஜய் மல்லையா, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று லண்டனில் தஞ்சம் புகுந்தார். அவருக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஏஜென்சிகள் மோசடி வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. லண்டனில் தஞ்சம் புகுந்த விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வர சி.பி.ஐ. தீவிர…

மேலும்...

கொரோனாவால் அலறும் மும்பை – 13,564 பேர் பாதிப்பு 508 பேர் பலி!

மும்பை (11 மே 2020): மும்பையில் மட்டும் கொரோனாவால் 13 ஆயிரத்து 564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 508 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்‍கப்பட்ட மாநிலங்களில் மஹாராஷ்ட்ரா முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் 22 ஆயிரத்து 171 பேருக்‍கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தலைநகர் மும்பையில் மட்டும் வைரஸ் தொற்றால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 13 ஆயிரத்து 564-ஆக உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 508-ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே மும்பை ஆர்தர் சாலை சிறையில், காவலர்கள்,…

மேலும்...

இத்தனை பேரை கொரோனா பாதிக்குமா? மும்பைக்கு மத்திய குழு கடும் எச்சரிக்கை!

புதுடெல்லி (23 ஏப் 2020): மும்பையில் வரும் மே 15-ம் தேதிக்‍குள் 6 லட்சத்து 50 ஆயிரம் மக்‍கள் கொரோனாவால் பாதிக்‍கப்படும் அபாயம் இருப்பதாக மத்தியக் குழு எச்சரித்துள்ளது. மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் மும்பை மற்றும் புனே நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமான நிலையை எட்டியிருப்பதாக அண்மையில் மத்திய அரசு எச்சரித்திருந்தது. நிலைமையை நேரில் ஆய்வு செய்து மாநில அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, தலா 5 பேர் அடங்கிய 2 குழுக்‍களையும் மத்திய அரசு அமைத்தது….

மேலும்...

மும்பையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு!

மும்பை (06 ஏப் 2020): மும்பையில் தனியார் மருத்துவமனை ஒன்றின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 40 பேருக்கு கொரோனா பாதித்ததால் அப்பகுதி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக கொரோனா பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு நேற்று வரை 748 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று 33 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் எண்ணிக்கை 781-ஆக அதிகரித்துள்ளது. புனேவில் 19 பேர், மும்பையில் 11 பேர், சதரா, அகமெத்நகர் மற்றும் பல்கர் மாவட்டத்தில் தலா ஒருவர் என…

மேலும்...

மும்பையிலும் டெல்லி கலவரம் போல் நடத்த பாஜக விருப்பம் – சிவசேனா குற்றச்சாட்டு!

மும்பை (11 மார்ச் 2020): மும்பையிலும் டெல்லியைப் போல் கலவரம் நடத்த பாஜக விரும்பியதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. உத்தவ் தாக்கரே அயோத்தி பயணம் மேற்கொண்டதையும், ராமர் கோவில் கட்ட ரூ 1 கோடி நன்கொடை வழங்கியதையும் பாஜக விமர்சித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிவசேனாவின் பத்திரிகையான சாம்னா பதிலளித்துள்ளது. இதுகுறித்து அதில் கூறப்பட்டிருப்பதாவது: உத்தவ் தாக்கரே அயோத்தி சென்றதற்கு பா.ஜனதாவினர் மகிழ்ச்சி தான் அடைந்திருக்க வேண்டும். ஆனால் பா.ஜனதாவினரால் உத்தவ் தாக்கரே அயோத்தி…

மேலும்...

பயணி என்ன பேசினால் உனக்கென்ன? – ஊபர் (UBER) டிரைவர் மீது அதிரடி நடவடிக்கை!

மும்பை (10 பிப் 2020): ஊபரில் பயணித்த பயணி சிஏஏ குறித்து போனில் பேசிய நிலையில் அவரை போலீசில் ஒப்படைத்ததால், ஊபர் டிரைவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது ஊபர் நிறுவனம். ராஜஸ்தானை சேர்ந்த கவிஞர் பாப்பாடித்யா சர்க்கார். இவர் முபையில் ஊபரில் பயணித்தபோது, சிஏஏ குறித்தும் நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்தும் போனில் அவரது நண்பருடன் பேசியபடி வந்துள்ளார். இதனை தனது போனில் பதிவு செய்த ஊபர் டிரைவர் ரோஹித் சிங், அந்த கவிஞரை…

மேலும்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு!

மும்பை (24 ஜன 2020): இந்தியாவில் இருவர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற சீன நகரங்களில் மட்டுமின்றி அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. இந்நிலையில் சீனாவிலிருந்து இந்தியா வந்த இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு சளி மற்றும் இருமல் இருந்ததால், அவர்கள் இங்கு வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால்…

மேலும்...

ஆஸ்திரேலியாவிடம் பணிந்தது இந்தியா!

மும்பை (14 ஜன 2020): ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் பிசிசிஐ படுதோல்வி அடைந்துள்ளது ஆஸ்திரேலியா – இந்தியாவின் பிசிசிஐ அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் மும்பையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கை தோ்வு செய்தது. துணை கேப்டன் ரோஹித் சா்மா-ஷிகா் தவன் இருவரும் தொடக்க வரிசை வீரா்களாக களமிறங்கிய நிலையில், 2 பவுண்டரியுடன் 10 ரன்களை எடுத்திருந்த ரோஹித், ஸ்டாா்க் பந்துவீச்சில் வாா்னரிடம் கேட்ச்…

மேலும்...