இந்தியாவின் எதிர்கால மருத்துவர்கள் தற்கொலை – மக்களவையில் திமுக வாதம்!

புதுடெல்லி (14 செப் 2020): நீட் தேர்வால் இந்தியாவின் எதிர்கால மருத்துவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று மக்களவையில் டி.ஆர்.பாலு தெரிவித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 9 மணிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அப்போது நீட் தேர்வு தற்கொலை குறித்த பிரச்சனையை திமுக எழுப்பியது. அப்போது திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசும்போது, ‘நீட் தேர்வின் காரணமாக 12 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை இந்த…

மேலும்...

பெரியாரின் பேரனோ எனத் தோன்றுகிறது – சூர்யாவை தூக்கி வைத்து கொண்டாடும் மக்கள்!

சென்னை (14 செப் 2020): நீட் தேர்வுக்கு எதிரான நடிகர் சூர்யாவின் அறிக்கை ‘அவரை பெரியாரின் பேரனோ என எண்ணத் தோன்றுகிறது’ என்று சமூக வலைதளங்களில் கொண்டாடுகின்றனர். நீட் தேர்வு தற்கொலைகள் தமிழகத்தில் அதிகரித்தபடி உள்ள நிலையில் நடிகர் சூர்யா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார்…அதில் “சாதாரண குடும்பத்துப் பிள்ளைகளின்‌ மருத்துவர்‌ கனவில்‌ தீ வைக்கற நீட் தேர்வு.. அனைவருக்கும்‌ சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசாங்கம்‌, ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையை சட்டமாகக் கொண்டு…

மேலும்...

நீட் தேர்வு விவகாரம் – நீதிமன்றம் மீது நடிகர் சூர்யா பாய்ச்சல்!

சென்னை (13 செப் 2020): கொரோனா அச்சத்தால் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரணைகளை நடத்தும் நீதிமன்றம், மாணவர்களை நேரடியாக சென்று நீட் தேர்வு எழுத வலியுறுத்துகிறது என்று நடிகர் சூர்யா விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதல பதிவில் கூறியிருப்பதாவது: ‘‘நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்குப் பதிலாக அறுதுல் சொல்வதை போல அவலம் எதுவுமில்லை. கொரோனா தொற்று…

மேலும்...

நள்ளிரவு வரை நன்றாக படித்துக் கொண்டிருந்தாள் – நீட் தேர்வு பயத்தால் மற்றொரு மாணவி தற்கொலை!

மதுரை (12 செப் 2020): நீட் தேர்வு பயத்தால் மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா(19) தற்கொலை செய்துகொண்டுள்ளார். மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா. இவரது தந்தை முருகசுந்தரம் எஸ்.ஐ., ஆக உள்ளார். 6வது சிறப்பு பட்டாலியன் குடியிருப்பில் இவர்களது குடும்பம் வசித்து வந்தது. ஜோதி ஸ்ரீ துர்கா, நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்தார். நள்ளிரவு வரை அவர் படித்துக் கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் நாளை நீட்…

மேலும்...

நீட் தேர்வு பதற்றம் – அரியலூர் மாணவர் தற்கொலை!

அரியலூர் (09 செப் 2020): நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அரியலூர் மாணவர் விக்னேஷ் (19) கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மருத்துவ இளநிலை படிப்புகளுக்காக தேசிய தேர்வு முகாமை நீட் நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. அரசு பள்ளி மாணவர்களின் கனவை சீர்குலைக்கும் இந்த சிபிஎஸ்சி சிலபஸை கொண்ட தேர்வினை நடத்தகூடாதென தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. இருப்பினும், தேசிய தேர்வு முகாமை நீட் தேர்வை நடத்துவதில் இருந்து பின்வாங்காமல்…

மேலும்...

தமிழகத்தில் நீட் தேர்வு எப்போது நடத்தலாம்? – முதல்வர் தகவல்!

சென்னை (27 ஆக 2020): கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கடலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நபர்கள் அச்சப்பட வேண்டாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாதபோதும்…

மேலும்...

நீட் தேர்வு ஒத்தி வைப்பா? – மத்திய அமைச்சகம் பதில்!

புதுடெல்லி (21 ஆக 2020): நீட் மற்றும் ஜே.இ.இ.தேர்வுகளை ஒத்தி வைக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று மத்திய அமைச்சக செயலர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் காலவரையரையின்றி மூடப்பட்டுள்ள நிலையில் கடந்த மே மாதமே நடைபெற இருந்த நீட் தேர்வு கரோனா காரணமாக ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செப்டம்பர் 13 அன்று தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் செப்டம்பர்…

மேலும்...

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் – தொடரும் கைதுகள்!

கிருஷ்ணகிரி (07 பிப் 2020): நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக மேலும் ஒரு மாணவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். நீட் தேர்வு ஆள்மாறாட்டம் குறித்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேனி CBCID அலுவலகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த மாணவர், ஒரு மாணவி என இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, கிருஷ்ணகிரியை சேர்ந்த பவித்ரன் என்பவரும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், சென்னை, தனியார் மருத்துவ…

மேலும்...

நீட் தேர்வு – தீர்ப்பை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி (28 ஜன 2020): நீட் தேர்வை தமிழகத்தில் தடை விதிக்க முடியாதென உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரி, வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் திரு. அருண் மிஸ்ரா தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. நீட் தேர்வு கட்டாயம் என்பதை உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவு படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாள்தோறும் மாற்ற முடியாது என…

மேலும்...