மது போதையில் தகராறு – போலீசுக்கு பொதுமக்கள் சரமாரி அடி உதை!

திண்டுக்கல் (14 பிப் 2020): திண்டுக்கல் அருகே போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட காவலரை பொதுமக்கள் நன்றாக கவனித்து அனுப்பினர். திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல்நிலையத்தில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர் பாண்டியராஜன். இவர் மது போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது ஒருவர் மீது மோதியுள்ளார். யார் மீது மோதினாரோ அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார் பாண்டியராஜன். மேலும் தகாத வார்த்தைகளை உபயோகப்படுத்தி பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த அருகில் இருந்த பொதுமக்கள் பாண்டியராஜனை நன்றாக…

மேலும்...

முஸ்லிம் சிறுவர்கள் மீது போலீஸ் கொடூர சித்ரவதை – உண்மை கண்டறியும் குழு அறிக்கை!

லக்னோ (13 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியதாக பொய் கூறி உபி சிறுவர்கள் மீது போலீஸ் கொடூர சித்ரவதைகளை அரங்கேற்றியுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் அமைதி வழியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் உத்திர பிரதேசத்தில் நடந்தபோது, போலீசார் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி பலரை கொன்று குவித்தனர். பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் போலீசார் முதலில் அதனை மறுத்தனர் பின்பு ஒத்துக் கொண்டனர். இந்நிலையில் உண்மையில்…

மேலும்...

அரசை கேள்வி கேட்க யாரும் இல்லையா? டெல்லி அரச அடக்குமுறைக்கு எதிராக குமுறும் மாணவர்கள்!

புதுடெல்லி (10 பிப் 2020): “எங்கள் மீது அத்துமீறும் போலீசையும் அரசையும் கேள்வி கேட்க நாட்டில் யாரும் இல்லையா?” என்று கொந்தளிக்கின்றனர். டெல்லி மாணவர்கள். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அமைதி வழியில் போராடும் மாணவர்களை போலீஸார் கொடூரமாக தாக்கும் படலம் தொடர்கிறது. டெல்லியில் அமைதி வழியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது ஜாமியா மாணவிகள் மீது போலீசார் இன்றும் கொடூர தாக்குதலை மேற்கொண்டனர்.. ஜாமிய மில்லியா மாணவர்கள் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியாக பேரணி மேற்கொண்டனர். அப்போது…

மேலும்...

டெல்லி போலீஸ் இன்றும் அட்டூழியம் – ஜாமியா மாணவிகள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்!

புதுடெல்லி (10 பிப் 2020): டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது ஜாமியா மாணவிகள் மீது போலீசார் இன்றும் கொடூர தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். ஜாமிய மில்லியா மாணவர்கள் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி மேற்கொண்டனர். அப்போது போலீசார் மேற்கொண்ட கொடூர தாக்குதலில் மாணவிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். குறிப்பாக 10 மாணவிகள் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதுகுறித்து ஒரு மாணவி தெரிவிக்கையில், போலீசார் பெண்களின் மறைவிடங்களை குறி வைத்து தாக்கியதாக தெரிவித்துள்ளார். இதில் 10…

மேலும்...

டெல்லி பெண் போலீஸ் படுகொலையில் திடுக்கிடும் தகவல்!

புதுடெல்லி (08 பிப் 2020): டெல்லியில் பெண் போலீஸ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரை சக அதிகாரியே கொலை செய்ததோடு அவரும் தற்கொலை செய்து கொண்ட திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியின் பத்பர்கன்ஞ் தொழிற்பேட்டை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார் ப்ரீத்தி (28). நேற்று இரவு ரோஹினி பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்….

மேலும்...

போலீசா? பாஜக செய்தி தொடர்பாளரா? – டெல்லி போலீசை விளாசும் ஆம் ஆத்மி!

புதுடில்லி (05 பிப் 2020): டெல்லி போலீசார் பா.ஜ.கவின் செய்திதொடர்பாளரை போல் பேசுவதாக ஆம்ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் குற்றம்சாட்டி உள்ளார். டெல்லியில் ஷாஹின் பாக் பகுதியில் சிஏஏ.,வுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது சமீபத்தில் பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தினான், அவனை கைது செய்து விசாரித்து வந்த டெல்லி போலீசார், தற்போது அவர் ஆம்ஆத்மி கட்சியின் உறுப்பினர் எனக் கூறி, அதற்கு ஆதாரமாக போட்டோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அது தாக்குதல் நடத்திய கபில் குஜ்ஜார்,…

மேலும்...

லண்டனில் மர்ம நபர் போலீசாரால் சுட்டுக் கொலை!

லண்டன் (02 பிப் 2020): மர்ம நபர் ஒருவனை லண்டன் போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். லண்டன் ஸ்ட்ரெட்ஹாம் பகுதியில் பொதுமக்களை கத்தியால் தாக்கிய ஒருவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இந்தத் தாக்குதலில், அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அவனுடன் தொடர்புடையவர்கள் வேறு யாரும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். இன்று, ஞாயிறு பிற்பகல் 2 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது. இதில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மேலும்...

சென்னையில் போராட்டம் நடத்த தடை!

சென்னை (28 ஜன 2020): சென்னையில் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப் பட்டுள்ளது. குடியுரிமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத சட்டங்கள், கொள்கைகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை நகரில் இன்று முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. போராட்டங்கள், உண்ணாவிரதம், மனிதசங்கிலி, பொதுக்கூட்டம் நடத்துவதற்கு சென்னை காவல் ஆணையர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும்...

குரூப் 4 தேர்வு முறைகேட்டை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி!

சென்னை (25 ஜன 2020): கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பிஎஸ்.சி குரூப் -4 தேர்வில் முறைகேடு நடந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அடுத்த அதிர்ச்சியாக, இந்தாண்டு காவலர் உதவி ஆய்வாளர்களுக்காக தேர்விலும் முறைகேடு நடந்தாக தகவல் வெளியாகியுள்ளது தமிழகம் முழுவதும் காலியாக உள்ள தாலுக்கா உதவி ஆய்வாளர், ஆயுதப்படை உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு காவல் படை உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 1905 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டது தமிழ்நாடு சீருடை தேர்வு வாரியத்தின் சார்பில்…

மேலும்...

சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துக்களை பதிவிட்டவர்கள் யார் யார்? – நீதிமன்றம் உத்தரவு!

சென்னை (22 ஜன 2020): “சமூக வலைதளங்களில் ஆபாசக் கருத்துக்களை பதிவு செய்த 10 பேரின் பெயர் பட்டியலை இன்றே அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்!” என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக கருத்துகளை ஒருவர் பதிவிட்டிருந்தார். இவ் விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். இதையடுத்து அவர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று…

மேலும்...