இவ்வருட பொங்கலுக்கு செம்ம பிஸினஸ் – எதில் தெரியுமா?

சென்னை (19 ஜன 2020): இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் மது விற்பனை சுமார் 606 கோடி ரூபாய் விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுவது வழக்கம். இந்தமுறையும் சுமார் ரூ.500 கோடி வரை இலக்கு வைத்து விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இலக்கை விட அதிக அளவில் மது விற்பனை ஆகியுள்ளது. அதாவது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாகியுள்ளது….

மேலும்...

தமிழகம் முழுவதும் பொங்கல் உற்சாக கொண்டாட்டம்!

சென்னை (15 ஜன 2020): தமிழர் திருநாளாம் தை முதல் நாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் புதன்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்பாடு, கலாச்சாரம் மற்றும் விவசாயத்தை போற்றும் வகையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல்நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வீடுகளில் புது வண்ணம் பூசியும், அலங்காரத் தோரணங்களைக் கட்டியும், வண்ணக் கோலமிட்டும் கோலாகலமாகவும், உற்சாகமாகவும் உறவினர்கள், நண்பர்கள் சூழ இணைந்து கொண்டாடுகின்றனர்.

மேலும்...

ரஜினிக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்!

சென்னை (15 ஜன 2020): ரஜினியின் துக்ளக் விழா பேச்சுக்கு பதிலடி கொடுத்த உதயநிதி பொங்கல் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். துக்ளக் இதழின் 50ஆவது ஆண்டு விழா நேற்று நடைபெற்றபோது அதில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியபோது ’முரசொலி வைத்திருந்தால் அவன் திமுக காரன், துக்ளக் வைத்திருந்தால் அவன் அறிவாளி என்று அந்த காலத்தில் பேசுவார்கள். அந்த வகையில் துக்ளக் எல்லோரும் படியுங்கள்’ என்று கூறினார். முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித்…

மேலும்...

தொண்டர்கள் மத்தியில் விஜய்காந்த் உருக்கமான பேச்சு!

தமக்காக பிரார்த்திக்கும் தொண்டர்களே தமது முதல் கடவுள் என்று தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் உருக்கமாக பேசியுள்ளார். சென்னை கொரட்டூரில் தே.மு.தி.க சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. 101 பானைகளில் பொதுமக்களுடன் இணைந்து தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் பொங்கல் விழாவைக் கொண்டாடி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினர். பிறகு மேடையில் இந்தியாவில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதரத்துவத்துடன் வாழ்வதாகக் கூறினார். இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் தீவிரவாத செயல்களில்…

மேலும்...

சரவணா ஸ்டோர்ஸில் நடந்த பரபரப்பு சம்பவம்!

சென்னை (07 ஜன 2020): சென்னை சரவணா ஸ்டோர்ஸ் எஸ்குலேட்டரில் சிறுவன் சிக்கி படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பொங்கல் பண்டிகைக்கு தாயுடன் துணி எடுக்கச் சென்ற போது சிறுவன் ரனில்பாபு எஸ்கலேட்டரில் சிக்கி படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும்...