கடலோர மாவட்டங்களில் கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

சென்னை (16 நவ 2020): கடலோர மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்கிறது. இந்த நிலையில் குமரி கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வட தமிழகம் வரை நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள்…

மேலும்...

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை (20 அக் 2020): தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சேலம், தர்மபுரி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை…

மேலும்...

இவ்வருடம் எப்படி?- வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை (29 செப் 2020): இந்த வருடம் வடகிழக்கு பருவமழை இயல்பை விட சற்று குறைவாக, குறிப்பாக தென் தமிழக மாவட்டங்களில் பதிவாகும் என்று உலக வானிலை மையத்தின் தெற்காசிய கூட்டமைப்பு பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் வெப்பநிலை மாறுபாட்டின்(LA-NINA, IOD) அடிப்படையில் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய…

மேலும்...

பீகாரில் மின்னல் தாக்கியதில் 83 பேர் பலி!

பாட்னா (25 ஜூன் 2020): பீகாரில் மின்னல் தாக்கியதில் 83 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பீகார் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் பீகாரின் பல பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 83 பேர் பலியாகியுள்ளனர். கோபால்கஞ்ச் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 13 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் நவாடா மாவட்டத்தில் 8 பேரும், சிவான் மற்றும் பாகல்பூர் மாவட்டத்தில் தலா 6 பேரும்,தர்பங்கா,…

மேலும்...

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை (20 ஜன 2020): தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் மிதமான பனிமூட்டம் நிலைவும். கடந்த 24 மணிநேரத்தில் திருவாரூர் மாவட்டம், பாண்டவையாறு, நீடாமங்கலம் தலா…

மேலும்...

ஓமன் நாட்டில் பலத்த மழை!

மஸ்கட் (16 ஜன 2020): ஓமன் நாட்டில் பலத்த மழை பெய்துள்ளது. ஓமனில் புதன்கிழமை பெய்த மழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சேத விவரங்கள் குறித்து தகவல் இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் 139 மி.மீ. மழை பெய்துள்ளதாக ஓமன் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ அவசர உதவி துறைகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே வியாழன் அன்றும் மழை தொடரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

மேலும்...