ஜெயலலிதா மரண விவகாரத்தில் எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார் – சசிகலா!

சென்னை (19 அக் 2022): ஜெயலலிதா சிகிச்சையில் குளறுபடி செய்யப்படவில்லை, எந்த விசாரணையையும் சந்திக்க தயார் என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் இதற்கு சசிகலாவே முழு பொறுப்பு என்றும் ஆறுமுகசாமி கமிஷன் நேற்று அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வி.கே.சசிகலா ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கையை நிராகரித்தார். ஜெயலலிதாவின் சிகிச்சையில் தான் உட்பட 3 பேர் தலையிடவில்லை என்றும், எந்த விசாரணையையும் சந்திக்க தயார் என்றும்…

மேலும்...

ஓபிஎஸ் சசிகலா இணைந்து அதிமுகவை வழி நடத்த தேவர் சமூகம் கடிதம்!

சென்னை (30 ஜூலை 2022): தேவர் சமூகம் ஒன்று கூடி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வி.கே.சசிகலா இணைந்து அதிமுகவை வழி நடத்திட வேண்டும் என தேவர் அமைப்பினர் கடிதம் எழுதியுள்ளனர். சுமார் 100 தேவர் அமைப்பினர் கைகோர்த்து ஓபிஎஸ், சசிகலா ஆகிய இருவருக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், பாரம்பரியமாக தேவர் சமூகம் ஆதரித்து வந்த அதிமுகவை சசிகலா அணியுடன் மீட்டெடுக்க வேண்டும். அ.தி.மு.க.வுக்கு உயிர் கொடுத்ததே தேவர் சமுதாயம் என்றும், தலைவர்கள் ஒன்றிணைந்து, சிதைந்து போகாமல் கட்சியைக் கைப்பற்ற…

மேலும்...

தலைமையேற்கிறாரா சசிகலா? – பரபரக்கும் அதிமுக!

தேனி (03 மார்ச் 2022): சசிகலாவை அதிமுகவிற்கு தலைமையேற்க வைக்க வேண்டும் என்று நிர்வாகிகள் தரப்பில் அழுத்தம் வருவதால் அதிமுக தலைமை பரபரப்பில் உள்ளது. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ் நேற்று தன்னுடைய பண்ணை வீட்டில் தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. அடைந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது இந்தக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரனை மீண்டும்…

மேலும்...

ரஜினியை சந்தித்த சசிகலா – காரணம் இதுதான்!

சென்னை (08 டிச 2021): நடிகர் ரஜினியை வி.கே.சசிகலா சந்தித்துப் பேசியுள்ளார். நேற்று மாலை ரஜினி வீட்டுக்குச் சென்று பார்த்தார் சசிகலா. தாதா சாகிப் பால்கே விருது பெற்ற சூப்பர் ஸ்டாருக்கு சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார் என்று சசிகலா அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலாவை ரஜினி மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் வரவேற்றனர். சசிகலா வருகையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓய்வில் இருந்த ரஜினிகாந்த் அடுத்த…

மேலும்...

சசிகலா எச்சரிக்கை!

சென்னை (05 டிச 2021): அதிமுக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்துவதை இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாகவும் ஏழை எளிய மக்களுக்கான ஒரு இயக்கமாகவும் இரும்பெரும் தலைவர்களின் தலைமையில் செயல்பட்டு வந்தது. நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் பார்த்து பொறாமைபடும் அளவுக்கு ஒளிர்ந்த நம் இயக்கத்தின் இன்றைய நிகழ்வுகளைப் பார்க்கும்போது ஒவ்வொரு தொண்டனும்…

மேலும்...

ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது? – பீதியை கிளப்பும் நத்தம் விஸ்வநாதன்!

சென்னை (19 ஜூன் 2021): ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது பற்றி சசிகலாவுக்கு மட்டுமே தெரியும் என்று நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த கடந்த 2017ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா உறவினர்கள், சசிகலா, அமைச்சர்கள் என 150க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியது. அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த…

மேலும்...

அந்த ஒருமணி நேர ஆடியோ – ஓபிஎஸ்சுக்கும் ஆப்பு? – பரபரப்பில் அதிமுக!

சென்னை (15 ஜூன் 2021): சசிகலாவுடன் அதிமுக நிர்வாகிகள் பேசும் ஆடியோ வெளியாகிவரும் நிலையில் அதிமுகவில் சசிகலாவுடன் பேசியவர்களை கட்சியை விட்டு நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. . சசிகலாஅதிமுக நிர்வாகிகளுடன் பேசி ஆடியோக்களை வெளியிட்டு எப்போது வேண்டுமானாலும் கட்சியைக் கைப்பற்றுவேன் என சொல்லாமல் சொல்லி வருகிறார். ஏற்கனவே இரட்டை தலைமையில் இருக்கும் கட்சிக்கு இது பெரிய தலைவலியை ஏற்ப்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வந்த புகழேந்தி பாமகவுக்கு எதிராக கருத்து சொல்லவும்…

மேலும்...

சசிகலா வருகை – அதிமுகவில் நடப்பது என்ன?

சென்னை (31 மே 2021): சசிகலா மீண்டும் அதிமுகவை கையில் எடுக்கப்போகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ள நிலையில்,திமுக தொண்டர்களை திசை திருப்பி தொண்டர்களை குழப்ப முயல்கிறார் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி தெரிவித்துள்ளார். கட்சியை சரி செய்ய விரைவில் வருகிறேன். கவலைப்படாமல் இருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என சசிகலா கூறியுள்ளார். அது போல் கட்சியில் அவர்கள் சண்டையிட்டு கொள்வது வேதனையை அளிப்பதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார். இதிலிருந்து கட்சியில் இரு தலைமைக்கு இடையே…

மேலும்...

அதிமுகவுக்குள் மீண்டும் நுழையும் சசிகலா?- தமிழக அரசியலில் பரபரப்பு!

சென்னை (30 மே 2021): சசிகலா அதிமுகவிற்கு மீண்டும் பொறுப்பேற்கலாம் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சிறை தண்டனை பெற்று 4 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த சசிகலா கடந்த பிப்ரவரி மாதம் சிறையிலிருந்து வெளிவந்த நிலையில், அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகுவதாக அவர் கடந்த மார்ச் 3 ஆம் தேதி அறிவித்தது அவரது தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ”கட்சியை சரிசெய்து விடலாம். சீக்கிரம் வந்து விடுவேன், நீங்கள்…

மேலும்...

சசிகலா தலைமையில் மீண்டும் அதிமுக – பச்சை கொடி காட்டும் ஓபிஎஸ்!

சென்னை (24 மார்ச் 2021): தேர்தலுக்குப் பிறகு சசிகலா தலைமையில் அதிமுக இயங்க வாய்ப்பு உள்ளதாக நடக்கும் நிகழ்வுகள் காட்டுகின்றன. தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளும் எண்ணமே இல்லை என்று முதல்வர் எடப்பாடி தெரிவித்திருந்தார். ஆனால் அவர் மீண்டும் அரசியலுக்கு வந்தால் கட்சியில் இணைக்கப்படுவாரா என்ற கேள்விக்குப் பதில் அளித்த ஓ.பி.எஸ்., “என்னை பொருத்தவரையில், மனிதாபிமானம் அடிப்படையில் பார்த்தால் அவர் நான்கு ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்துவிட்டார். ஒரு தனிப்பட்ட நபருக்காகவோ,…

மேலும்...