இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கான பயணத்திற்கு சவூதி அரேபியா தற்காலிக தடை!

ரியாத் (12 மார்ச் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக சவூதி அரேபிய இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கான பயணத்திற்கு தற்காலிக தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நிலையில், சவூதி அரேபியாவிலும் கொரோனா வைரஸ் 21 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் நிவாரணம் பெற்றுள்ளார். இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 28 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள சவூதி அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. ஏற்கனவே உம்ரா, மற்றும் சுற்றுலா விசாவில்…

மேலும்...

சவூதியில் உள்ள அனைத்து கல்விக் கூடங்களும் மூடல்!

ரியாத் (09 மார்ச் 2020): சவூதியில் உள்ள அனைத்து கல்விக் கூடங்களும் இன்று (திங்கள் கிழமை) முதல் அடுத்த அறிவிப்பு வரும்வரை மூடப்படுகின்றன. சீனாவிலிருந்து பரவி, உலகையே அச்சறுத்தும் கொரோனா வைரஸ் எந்த நாட்டையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் பல நாடுகள் இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் சவூதியில் ஏற்கனவே உம்ரா, சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களுக்கு தற்காலிக தடை, விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது, சவூதியில் உள்ள அனைத்து…

மேலும்...

கொரோனா வைரஸ் எதிரொலி – வெளிநாட்டு உம்ரா யாத்ரீகர்கள் சவூதிக்கு வருகை புரிய தற்காலிக தடை!

மக்கா (27 பிப் 2020): உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் எதிரொலியாக சவூதி அரேபியாவிற்கு வரும் உம்ரா யாத்ரீகர்களுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது சவூதி அரசு. இதுகுறித்து சவூதி வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உம்ரா மற்றும் சுற்றுலா விசாவில் சவூதி வருபவர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையே இந்தியாவிலிருந்து வரும் தகவல்படி, பல உம்ரா யாத்ரீகர்கள் இந்திய…

மேலும்...

சவூதியில் வாகனம் ஓட்டுபவர்களே எச்சரிக்கை!

ரியாத் (13 பிப் 2020): சாலைகளில் ஆங்காங்கே கேமராக்கள் பொறுத்தி சவூதி போக்குவரத்து கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சவூதியில் விபத்துக்களை குறைக்கும் வகையில் பல சாலைகளில் புதிய கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படவோ, அல்லது உரிமம் ரத்துச் செய்யப்படவோ வாய்ப்பு உள்ளது. மேலும் தான் செல்லும் ட்ராக்கை அவசியமில்லாமல் விதிகளை மீறி மாறினாலும் கேமரா கண்டுபிடித்து எச்சரித்துவிடும். இதனால் வாகனம் ஓட்டுபவர்கள் அதிக அபராதங்கள் செலுத்த வாய்ப்பு உள்ளது. எனவே வாகனம்…

மேலும்...