கேரளாவில் எஸ்டிபிஐ மற்றும் பாஜக தலைவர்கள் படுகொலை – 50 பேர் கைது!

ஆலப்புழா (19 டிச 2021): கேரளாவில் எஸ்டிபிஐ மற்றும் பாஜக பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டது விவகாரத்தில் இரு கொலை தொடர்பிலும் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில் ஆலப்புழாவில் நேற்று இரவு எஸ்டிபிஐ தலைவர் கே.எஸ்.ஷான் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் இருப்பதாக எஸ்டிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் இன்று காலை பாஜகவின் மாநில நிர்வாகி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். இதற்கிடையே பாஜக பிரமுகர் கொலையில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்…

மேலும்...

சவுதியில் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு!

ஜித்தா (03 ஏப் 2021): சவுதி அரேபியா அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், எஸ் டி பி ஜ மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பாக பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக சவுதி அரேபியா ஒருங்கினைப்பாளர் பொறியியாளர் VKMM காஜா மைதீன் தலைமையில் நடைபெற்றது. இந்தியன் சோசியல் ஃபோரம் ஜெத்தா மாகான தலைவர் பொறியியாளர் அல் அமான் அவர்கள் வரவேற்பு உரை நிகழ்த்தினார். இந்தியன் சோசியல் ஃபோரம் சவூதி அரேபியா ஒருங்கினைப்பாளர் அஷ்ரப் முறையூர்,…

மேலும்...

கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் எஸ்டிபிஐ 200 க்கும் அதிகமான இடங்களை வென்று சாதனை!

பெங்களூரு (31 டிச 2020): கர்நாடகாவில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ 200 க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, எஸ்.டி.பி.ஐ இதுவரை 223 இடங்களை வென்றுள்ளது. மங்களூர் மாவட்டத்தில் எஸ்டிபிஐ அதிக இடங்களை கைபற்றியுள்ளது. மடிகேரி (குடக்) – 10, உத்தரா கன்னடம் – 5, குல்பர்கா – 5, உடுப்பி – 14, பல்லாரி – 2, ஹாசன் – 4 மாவட்டங்கள். சாமராஜநகர், யாத்கீர், ரைச்சூர்…

மேலும்...

நடிகர் விஜய் சேதுபதியுடன் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் திடீர் சந்திப்பு!

சென்னை (25 டிச 2020): திரைப்பட நடிகர் விஜய் சேதுபதியை எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் சந்தித்துப் பேசியுள்ளனர். வியாழன் அன்று நடந்த இந்த சந்திப்பின்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கொரோனா காலத்தில் மேற்கொண்ட பணிகள் அடங்கிய சிறப்பு கையேட்டினை வழங்கினர். எஸ்.டி.பி.ஐ கட்சியின் ராயபுரம் தொகுதி தலைவர் கோல்ட் ரஃபி, தொகுதி செயலாளர் ஆரிஃபுல்லா, துணைத்தலைவர் பஷீர் உள்ளிட்ட நிர்வாகிகள் இச்சந்திப்பின்போது உடனிருந்தனர்.

மேலும்...

கேரளாவில் எஸ்டிபிஐ 102 இடங்களில் வெற்றி – 200க்கும் மேற்பட்ட இடங்களில் இரண்டாமிடம்!

திருவனந்தபுரம்: உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் எஸ்.டி.பி.ஐ தனியாக போட்டியிட்டு 102 இடங்களை கைப்பற்றியுள்ளது. கேரள உள்ளாட்சித் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ , 102 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில் கடந்த தேர்தலில் 47 இடங்களை மட்டுமே வென்றிருந்தது இது மிகப்பெரிய முன்னேற்றமாகும். அதுமட்டுமல்லாமல் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் வந்த பல வார்டுகளில், ஒற்றை இலக்க வாக்குகளின் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. திருவனந்தபுரம் (10), கொல்லம் (10), பதனம்திட்டா (6), ஆலப்புழா (13),…

மேலும்...

கேரள தேர்தலில் எஸ்டிபிஐ தனித்துப் போட்டியிட்டு 74 இடங்களில் வெற்றி!

திருவனந்தபுரம் (16 டிச 2020): கேரளா உள்ளாட்சித் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி வேட்பாளர்கள் மாநிலத்தில் 74 இடங்களில் வென்றுள்ளனர். மூன்று முனை போட்டியில் தனியாக போட்டியிடுவதின் மூலம் எஸ்.டி.பி.ஐ பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது என்று மாநில செயலாளர் முஸ்தபா கொமேரி தெரிவித்தார். எஸ்டிபிஐ வெற்றி பெற்ற இடங்கள்: காசராகோடு – 7 கண்ணூர் – 9 கோழிக்கோடு – 3 வயநாடு – 0 மலப்புரம் – 3 பாலக்காடு – 5 திருச்சூர் – 4…

மேலும்...

தப்லீக் ஜமாஅத்தினரின் கைது இந்தியாவின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் – எஸ்டிபிஐ!

புதுடெல்லி (20 மே 2020): வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினரின் கைது நடவடிக்கை உலகளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத் துணைத்தலைவர் வழக்கறிஞர் ஷர்புத்தீன் அஹ்மத் கூறியுள்ளதாவது: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திடீரென்று அறிவிக்கப்பட்ட தேசம் தழுவிய ஊரடங்கால், அயல்நாட்டு தப்லீக் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தம் தாய்நாட்டிற்கு திரும்பச் செல்லமுடியாமல் ஆங்காங்கே சிக்கித் தவிக்கிறார்கள் என்பது அறிந்ததே. மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் சுரேஷ் சர்மா…

மேலும்...

அர்ஜுன் சம்பத் மீது எஸ்டிபிஐ போலீசில் புகார்!

கோவை (05 மார்ச் 2020): அவதூறு பரப்பி கலவரத்தை தூண்ட முயல்வதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது எஸ்டிபிஐ கட்சியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மாவட்ட செயலாளர் உசேன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். இதனை சீர்குலைக்க சிலர் முயற்சி செய்து வருகிறார்கள்….

மேலும்...

ஜனநாயக ரீதியான போராட்டங்களை சீர்குலைக்கும் காவல்துறை: எஸ்டிபிஐ கண்டனம்!

சென்னை (14 பிப் 2020): சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ஜனநாயக வழியில் போராடும் மக்கள் மீது காவல்துறை நடத்திய அராஜகம் கண்டிக்கத்தக்கது என்று எஸ்டிபிஐ தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், சி.ஏ.ஏ., என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி-க்கு எதிராகவும், தமிழக அரசு அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்த போராட்டத்தை சீர்குலைக்கும்…

மேலும்...