ஷர்ஜீல் இமாம் சிறையில் தொலைத்த நாட்களை யார் திருப்பி கொடுப்பார்? – ப.சிதம்பரம் கேள்வி!

புதுடெல்லி (05 பிப் 2023): ஷர்ஜீல் இமாம் மற்றும் அவரது நண்பர்கள் சிறையில் இழந்த நாட்களை யார் திருப்பி கொடுப்பார்? என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அருகே வெடித்த வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர் ஷர்ஜீல் இமாம் மற்றும் 10 பேர் தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் இது தொடர்பான…

மேலும்...

தேச துரோக வழக்கில் சிறையில் உள்ள ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (30 செப் 2022): சிஏஏ வழக்கில் 2019 முதல் சிறையில் உள்ள ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவர் மீது வேறு வழக்குகள் உள்ளதால் தொடர்ந்து அவர் காவலில் இருக்க நேர்ந்துள்ளது. கடந்த. 2019 ஆம் ஆண்டு ஜாமியா நகர் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பேசிய உரைக்காக ஷர்ஜீல் இமாம் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். ஷர்ஜீல் இமாம் மீது பல வழக்குகள்…

மேலும்...

ஜே.என்.யூ மாணவர் ஷார்ஜில் இமாம் கைது!

பாட்னா (28 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ஜே.என்.யு மாணவர் ஷர்ஜில் இமாம் கைது செய்யப்பட்டுள்ளார். வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவிலிருந்து பிரித்துவிடலாம் என்று பேசியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஷர்ஜில் இமாம் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் உபி.யில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக உத்தரபிரதேச போலீசாரும் இவர் மீது வழக்கு…

மேலும்...