மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி எடுத்துச் செல்ல தடை!

கொழும்பு (11 டிச 2022): இலங்கையில் மாட்டிறைச்சி எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குளிர் காலத்தில் மாடுகள் மற்றும் ஆடுகள் பலியாவதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும்...

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

கொழும்பு (02 ஏப் 2022): இலங்கையில் அவசரநிலை பிரகடனத்தை அதிபர் கோத்பய ராஜபக்சே அறிவித்தார். இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிறது. அந்த நாட்டில் அன்னியச்செலாவணி கையிருப்பு கரைந்துபோனதால் இறக்குமதி பாதித்துள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை விஷம் போல ஏறி வருகிறது. எரிப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ெபட்ேரால் நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி ேநரம் காத்துக்கிடக்கின்றனர். தினமும் 13 மணி நேரம் வரையில் மின்வெட்டு உள்ளது….

மேலும்...

இலங்கையில் அதிபர் மாளிகை முற்றுகை; ஊரடங்கு அமல்..!

கொழும்பு (01 ஏப் 2022): இலங்கையில் இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரம் இன்னும் மேம்படவில்லை. இதனால் இலங்கையில் உணவு பற்றாக்குறை எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவையும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் பல்வேறு காரணங்களால் இலங்கை நாட்டின் அந்நிய செலாவணி மிக மோசமாக உள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களைக் கூட…

மேலும்...

மீண்டும் கும்பல் கும்பலாக தமிழகத்திற்கு அகதிகளாக வரும் இலங்கையர்கள்!

சென்னை (24 மார்ச் 2022): இலங்கையில் விடுதலைப்புலிகள் உடனான போரின் போது, தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்ததைப் போல, சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு பொருளாதார நெருக்கடி காரணங்களால், தமிழகத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். மன்னார் பகுதியில் இருந்து கைக்குழந்தையுடன் 6 பேர் தனுஷ்கோடிக்கு வந்த நிலையில், வவுனியா பகுதியிலிருந்து மேலும் 10 பேர் வந்துள்ளனர். இந்நிலையில், இலங்கைக்கு அருகாமையில் உள்ள ராமேஸ்வரம் அடுத்த, மண்டபம் அகதிகள் முகாமில் இலங்கையில் இருந்து வரும் அகதிகளை தங்க வைப்பதற்காக தற்காலிக…

மேலும்...

கப்பல் தீ விபத்தால் இலங்கைக்கு ஆபத்து!

கொழும்பு (04 செப் 2020): சரக்கு கப்பலில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் இலங்கைக்க்கு பேராபத்து காத்திருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குவைத்தின் மினா அல் அஹ்மாதி துறைமுகத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி புறப்பட்ட சரக்கு கப்பல், இந்தியாவின் பாரதீப் துறைமுகத்தை செப்டம்பர் 5 ஆம் தேதி அடையும் இலக்குடன் பயணம் மேற்கொண்டிருந்தது. இலங்கையின் கிழக்கு கடல் பகுதியில் இருந்து 38 கடல் மைல் தொலைவில் கப்பல் வந்து கொண்டிருந்தபோது அதில் தீ பற்றி…

மேலும்...

சூதாட்டத்தின் மூலமே இந்தியா உலகக் கோப்பையை வென்றது- இலங்கை முன்னாள் அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு!

கொழும்பு (18 ஜூன் 2020): 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியா (பிசிசிஐ) சூதட்டம் மூலமே இலங்கையை வென்றது என்று இலங்கையின் முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே தெரிவித்துள்ளார். மும்பையில், 2011ல் நடந்த ஐ.சி.சி., உலக கோப்பை பைனலில் இந்திய அணி இலங்கை அணியை வென்று கோப்பையை கைபற்றியது. இந்நிலையில் இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கையின் முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே, 2011…

மேலும்...

இலங்கை தமிழர்களுக்கு பேரிழப்பு – ஆறுமுகன் தொண்டமான் மரணம்!

கொழும்பு (26 மே 2020): இலங்கையின் தமிழ் அரசியல்வாதிகளில் மிக முக்கியமானவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் (55) இன்று காலமானார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆறுமுகன் தொண்டமான். 1990ல் இருந்து இவர் அந்த கட்சியில் இருக்கிறார். அந்நாட்டு தொழிற்சங்கத் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் மற்றும் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக முன்னேற்ற அமைச்சராகவும் அவர் இருந்தார். இந்நிலையில் வீட்டில் மயங்கி விழுந்த ஆறுமுகன் தொண்டமானை மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். ஆனால்…

மேலும்...

இலங்கை அரசுக்கு எஸ்டிபிஐ தலைவர் தெஹ்லான் பாக்கவி கடிதம்!

சென்னை (14 மே 2020): கொரோனாவால் உயிரிழந்த இலங்கை வாழ் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் எஸ்.டி.பி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி இலங்கை அரசுக்கு இமெயில் மூலம் கடிதம் எழுதியுள்ளார். சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு இமெயில் மூலம் விடுத்துள்ள மனுவில் கூறியதாவது: கொரோனா வைரஸ் காரணமாக பரவிவரும் கோவிட்-19 பரவல் ஒட்டுமொத்த உலகையே பெரும் ஆட்டம் காண வைத்துள்ளது. சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளில்…

மேலும்...

சமூக வலைதள அவதூறு பதிவுகளுக்கு எதிராக புதிய சட்டம்!

கொழும்பு (24 ஜன 2020): சமூக வலைதள பதிவுகளை கண்காணிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இணையத்தில் மேற்கொள்ளப்படும் அவதூறு பிரச்சாரங்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுக்களை தடுப்பதற்காக இலங்கை கணினி Sri Lanka Computer Emergency Readiness Team என்ற பிரிவு Cyber security act என்ற சட்ட வரைபு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான கூட்டம் ஒன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அதிகாரிகளுக்கு இடையில் நடைபெற்றதுடன் தயாரிக்கப்பட்டுள்ள…

மேலும்...

சர்வதேச பொறியியல் போட்டியில் தங்கம் வென்ற ஃபாத்திமா ஷெரீன்!

கொழும்பு (21 ஜன 2020): இந்தோனேசியாவில் நடைபெற்ற சர்வதேச பொறியியல் போட்டியில் இலங்கை மாணவி ஃபாத்திமா ஷெரீன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் சர்வதேச போட்டி ஜனவரி 13ஆம் தேதியிலிருந்து 16ஆம் தேதி வரை இந்தோனேசியாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பாத்திமா ஷெரீன் என்ற மாணவி முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர் இலங்கை திரும்பியபோது விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.

மேலும்...