ஞாயிறு ஊரடங்கு ரத்தாகுமா? முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

சென்னை (27 ஜன 2022): தமிழகத்தில் அடுத்த கட்ட ஊரடங்கு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு முப்பதாயிரத்துக்கு மேல் பதிவாகி வந்த நிலையில் நேற்றைய தினம் சற்று குறைந்து 29,976 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.அதிகபட்சமாக சென்னையில் 5973 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக கோவையில் 3740, செங்கல்பட்டில் 1883 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போதுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 31ஆம்…

மேலும்...

முதல்வர் ஸ்டாலினிடம் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் திடீர் கோரிக்கை!

சென்னை (17 ஜன 2022): சென்ற ஆண்டைப்போல இந்த வருடமும் 12ஆம் வகுப்புத் தேர்வு நடத்தாமல் தேர்ச்சி அளிக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மாணவர்கள் நேரடியாக கோரிக்கை வைத்துள்ளனர். 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனாவுக்கு தற்போது வரை முடிவு காலம் வரவில்லை. கொரோனாவைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. கொரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் வாழ்க்கை முறையில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு கல்வி முறையில் பெரும் மாற்றங்கள் நடந்துள்ளன. கடந்த இரண்டு வருடத்தில்…

மேலும்...

விபத்துக்கான 48 மணி நேர இலவச சிகிச்சை – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

சென்னை 919 டிச 2021): தமிழகத்தின் எந்த பகுதியில் சாலை விபத்து நடந்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் என 609 மருத்துவமனைகளில் 48 மணி நேரத்துக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டமான ‘இன்னுயிர் காப்போம் திட்டத்தை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில், சாலை விபத்தில் படுகாயம் அடைபவர்களுக்கு அருகில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனையில் 48 மணி நேரம் இலவச சிகிச்சை அளிக்கும் வகையில், “இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48’’ என்ற…

மேலும்...

ரஜினியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார் ஸ்டாலின்!

சென்னை (31 அக் 2021): நடிகர் ரஜினி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார். திடீர் உடல்நலக்குறைவால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை குணமடைந்து வருவதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று ரஜினியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் டாக்டர்களிடம் விசாரித்தார். ரஜினி…

மேலும்...

பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!

சென்னை (14 ஜூன் 2021): பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் முழு ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்தபப்டும் என்று தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், “தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் சங்கிலித் தொடரை உடைக்க மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கை மக்கள் முழுமையாக கடைபிடித்ததால் தான் இந்தளவிற்கு கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. எனவே விதிமுறைகளை…

மேலும்...

முதல்வர் ஸ்டாலினின் கொரோனா கால அடுத்த அதிரடி!

சென்னை (08 ஜூன் 2021): சமீபத்தில், அத்தியாவசியப் பொருட்கள் விலை நிர்ணயச் சட்டம் (1986)-ன் கீழ் கொரோனா மருத்துவப் பொருள்களின் விலையை, கேரள முதல்வர் பினராயி விஜயன் நிர்ணயம் செய்திருந்தார். அதன்படி, பிபிஇ கிட் – ரூ. 273, என்95 முகக் கவசம் – ரூ.22, மூன்று அடுக்கு முகக் கவசம் – ரூ.3.90, சானிடைசர் 100 மி.லி. ரூ.55 என்ற அளவுக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் தமிழ் நாட்டு அரசின் அறிவிப்பின்படி இப்போது இருப்பதிலேயே,…

மேலும்...

நீட் தேர்வு ரத்து – குழு அமைத்து ஸ்டாலின் உத்தரவு!

சென்னை (05 ஜூன் 2021):: தமிழ்நாட்டில் நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலை குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்கள், தமிழ்வழி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்….

மேலும்...

உதயநிதியின் ஆயுதத்தை கையில் எடுத்த ஸ்டாலின்!

சென்னை (05 ஜூன் 2021): எய்ம்ஸ் மருத்துவ மனையின் ஒற்றை செங்கல்லை வைத்து கடந்த தேர்தலில் பிரச்சாரத்தில் பட்டையை கிளப்பினார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை விரைவாகத் தொடங்க வேண்டும் என, தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்த அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “மதுரையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையைத் தொடங்குவதற்காக 27-1-2019 அன்று பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இம்மருத்துவமனைக்காக தலைவர் மற்றும் செயல் இயக்குநர்…

மேலும்...

தமிழ் நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14-வரை நீட்டிப்பு!

சென்னை (05 ஜூன் 2021): தமிழ் நாட்டில் தளர்வுகளுடனான லாக்டவுன் ஜூன் 14-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் ஓரளவுக்கு சரிந்து வரும் நிலையில், அரசு அலுவலகங்கள் 30% பணியாளர்களுடன் செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது . ஜூன் 7 முதல் மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி. ஜூன் 14 வரை அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக், சலூன்கள், தேநீர் கடைகள்…

மேலும்...

கொரோனா நோயாளிகள் அருகில் சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின் – நெகிழ்ந்த நோயாளிகள்!

(30 மே 2021): கோவையில் பிபிஇ கிட் அணிந்து கொரோனா நோயாளிகளின் அருகில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இன்று கொரோனா தடுப்பு பணிகளை முதல்வர் ஸ்டாலின் கண்காணித்தார். கோவையில் கொரோனா தடுப்பு பணிகள் எப்படி நடக்கின்றன, லாக்டவுன் கட்டுப்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று நேரடியாக ஆய்வு செய்தார். அதன் ஒரு கட்டமாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நோயாளிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார். இதில் நோயாளிகளிடம் அருகில் சென்ற…

மேலும்...