ஏன் இவ்வளவு அவசரப் படுகிறார்கள் – ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை!

சென்னை (12 அக் 2020): திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்த நினைப்பவர்கள் எண்ணம் நிறைவேறாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பக்குவப்பட்ட புரிந்துணர்வோடும், பண்பட்ட நேச மனப்பான்மையோடும், தி.மு.கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெகுமக்களின் ஏகோபித்த ஆதரவுடன், 2021 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி வெற்றிகரமாக வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது. தி.மு.கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்குள்ளே, ஏதாவது திருகு தாளங்களைச் செய்து, தூய சுமூகமான உறவு நிலையைக்…

மேலும்...

பாப்புலர் ஃப்ரெண்ட் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது – பாப்புலர் ஃப்ரண்ட் அறிக்கை!

புதுடெல்லி (28 ஜன 2020): CAA எதிர்ப்பு போராட்டங்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் நிதி உதவி என்ற குற்றச்சாட்டுகள் போலியானது! ஆதாரமற்றது என்று பாபுலர் ஃப்ரெண்ட் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் தேசிய பொதுச் செயலாளர் எம். முஹம்மது அலி ஜின்னா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: CAA போராட்டத்தை தூண்டுவதற்கு பாப்புலர் ஃப்ரண்டின் நிதி உதவி என பல்வேறு செய்தி சேனல்களில் வெளியிடப்படும் செய்தி அறிக்கைகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முற்றிலும் மறுப்பதுடன் வன்மையாக கண்டிக்கவும் செய்கின்றது. முதலில்,…

மேலும்...

அதிர்ச்சி அளிக்கிறது – ஜவாஹிருல்லா அறிக்கை!

சென்னை (20 ஜன 2020): ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்கிற விதியை ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது என்று மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மண்ணை மலடாக்கி விவசாய பூமியை நிர்மூலமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான அனுமதியை எளிமையாக்க மத்திய அரசு முடிவெடுத்து தற்போது ஹைட்ரோகார்பன் போன்ற நாசகார திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதியும், பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவும் தேவையில்லை என அறிவித்திருப்பது…

மேலும்...