கலாஷேத்ரா பாலியல் புகாரில் கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் கைது!

சென்னை (03 ஏப் 2023): கலாஷேத்ரா பாலியல் புகாரில் கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளார். திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி, கலாஷேத்ரா கல்லூரியில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் கடந்த 2008-ம் ஆண்டு முதல்…

மேலும்...

தலித் மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தம் செய்த தலைமை ஆசிரியை மீது வழக்கு!

ஈரோடு (03 டிச 2022): ஈரோட்டில் தலித் மாணவர்களை வைத்து பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்த தலைமை ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் உள்ள அரசுப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் 6 மாணவர்களுடன் தலைமையாசிரியை கழிவறையை சுத்தம் செய்துள்ளார். மாணவி ஒருவரின் தாயார் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் தலைமை ஆசிரியை கீதா ராணி தலைமறைவாக உள்ளார். புகாரின்படி, கழிவறையை சுத்தம் செய்ய தலித் மாணவர்களை…

மேலும்...

ஹிஜாப் அனுமதி கோரிய மாணவிகளை பயங்கரவாதிகள் என அழைத்த பாஜக தலைவர்!

உடுப்பி (17 மார்ச் 2022): ஹிஜாப் தடைக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகிய மாணவிகள் “தேச விரோதிகள்” மற்றும் “பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்” என்று பாஜக மூத்த தலைவரும், உடுப்பி அரசுப் பல்கலைக்கழகக் கல்லூரி மேம்பாட்டுக் குழுவின் துணைத் தலைவருமான யஷ்பால் சுவர்ணா கூறியுள்ளார். இதுகுறித்து சுவர்ணா செய்தியாளர்களிடம் கூறும்போது, “நீதிமன்றத்தை அணுகியது மாணவிகள் அல்ல, தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அறிக்கைகள் கொடுப்பதன் மூலம் கற்றறிந்த நீதிபதிகளை…

மேலும்...

உணவு, குடிநீர் கிடைக்கவில்லை – உக்ரைனிலிருந்து வந்த தமிழக மாணவர் தகவல்!

தேனி (26 பிப் 2022): உக்ரைனில் மாணவர்களுக்கு குடிநீரோ உணவோ கிடைப்பது இல்லை என்று உக்ரைனிலிருந்து தமிழகம் வந்துள்ள தேனீ மாணவர் தெரிவித்துள்ளார். உக்ரைனைக் கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய ராணுவ வீரர்கள் போர் தொடுத்து வருகின்றனர். பதற்றமான சூழலுக்கு நடவே தமிழகத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்கள் அங்கு சிக்கியுள்ளனர். இந்நிலையில் போர் துவங்குவதற்கு சற்று முன்பு உக்ரைனிலிருந்து தமிழகம் வந்துள்ள தேனி மாணவர் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள தகவலில் “உக்ரைன் கீவ் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில்…

மேலும்...

எந்த சூழலிலும் ஹிஜாபை கைவிடமாட்டோம் – மாணவிகள் திட்டவட்டம்!

பெங்களூரு (05 பிப் 2022): எந்தச் சூழலிலும் ஹிஜாபை கைவிடமாட்டோம் என்று கர்நாடக கல்லூரி மாணவிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள பல கல்லூரிகளில் மாணவிகள் வகுப்புக்கு ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இது ஒருபுறமிருக்க முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது, இல்லையென்றால் நாங்கள் காவித் துண்டு அணிந்து வருவோம் என்று ஆர் எஸ் எஸ் அமைப்பு மாணவர்கள் காவித் துண்டுகளுடன் கல்லூரிகளுக்குள் நுழைந்து போராட்டம்…

மேலும்...

மாணவர்கள் பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள – வீடியோ

மாணவர்கள் பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நடிகர் சிவகார்த்திகேயன் அறிவுரை வீடியோ

மேலும்...

அந்த சூழலிலும் மாணவியை அவர் விடவில்லை – சின்மயி பரபரப்பு தகவல்!

சென்னை (13 ஜூன் 2021): மாதவிடாய் காலத்தில் பள்ளிக்கு விடுப்பு எடுத்த மாணவியை, பாலியல் ரீதியான கேள்விகள் மூலம் ஆசிரியர் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து சின்மயி தனது ட்விட்டரில் பதிவிடுகையில் பிஎஸ் சீனியர் செகண்டரி பள்ளியைச் சேர்ந்த 8 ஆசிரியர்கள் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த 8 பேரில் ஒருவர் பெண் குழந்தைகளை தவறாக படமெடுத்துள்ளார். அந்த 8 பேர் ஞானசேகரன், குருமூர்த்தி, பத்மநாபன், கலைமணி, பிரபாகரன்,…

மேலும்...

நைஜீரியாவில் பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் – 400 மாணவர்கள் மாயம்

நைஜீரியாவிலுள்ள நடுநிலைப் பள்ளியொன்றில் ஆயுதக் கும்பல் நடத்தி தாக்குதலுக்குப் பிறகு 400 மாணவா்கள் மாயமாகினா். அந்த நாட்டின் காட்சினா மாகாணத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதலின்போது 200 மாணவா்கள் அங்கிருந்து பத்திரமாகத் தப்பினா். இதுகுறித்து அந்த மாகாண காவல்துறை செய்தித் தொடா்பாளா் காம்போ இசா கூறியதாவது: கங்காரா நகரில் மாணவா்கள் தங்கிப் படிக்கும் அரசு அறிவியல் நடுநிலைப் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த ஆயுதக் கும்பல் ஏகே 47 ரகத் துப்பாக்கிகளைக் கொண்டு சரமாரியாக சுட்டது. அதனைத் தொடா்ந்து,…

மேலும்...

அதிர்ச்சி சம்பவம் – உத்திர பிரதேசத்தில் மாணவரை நிர்வாணமாக்கி கொடூர தாக்குதல்!

காசியாபாத் (05 அக் 2020): உத்திர பிரதேசத்தில் 12 ஆம் வகுப்பு மாணவரை 10 ஆம் வகுப்பு மாணவர்கள் நிர்வாணமாக்கி கொடூரமாக தாக்கியுள்ளனர். உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒரு அதே பள்ளியில் படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்தார். 17 வயதான அந்த மாணவர் மாணவியை சந்திக்க தனது 2 நண்பர்களுடன் காரில் சென்று உள்ளார். அவர்களை பின்தொடர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் 12 ம் வகுப்பு…

மேலும்...

கெஞ்சிக் கேட்கிறேன் – ஸ்டாலின் உருக்கம்!

சென்னை (13 செப் 2020): “மாணவர்களை கெஞ்சிக் கேட்கிறேன் தயவு செய்து தற்கொலை செய்து கொள்ளாதீர்கள்”. என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு இன்று தொடங்குகிறது. இந்நிலையில் நீட் தேர்வு அச்சத்தால், தேர்வுக்கு தயாராகி வந்த தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் சமீபத்தில் தற்கொலை செய்துக்கொண்டனர். இது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைகள் குறித்து காணொளி காட்சியில் பேசியுள்ள ஸ்டாலின்,”மாணவர்களை கெஞ்சிக் கேட்கிறேன்; இனி யாரும் தற்கொலை முடிவை எடுக்காதீர்கள். நீட் தேர்வுக்கு தயாரான…

மேலும்...