தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை (20 ஜன 2020): தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் மிதமான பனிமூட்டம் நிலைவும். கடந்த 24 மணிநேரத்தில் திருவாரூர் மாவட்டம், பாண்டவையாறு, நீடாமங்கலம் தலா…

மேலும்...

தமிழகம் இதில் இரண்டாவது இடம் – எதில் தெரியுமா?

சென்னை (19 ஜன 2020): தற்கொலை செய்து கொள்பவர்களில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. வேலையில்லாமல் உயிரிழந்தவர்கள் குறித்த புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் ‘கடந்த 2018-வது ஆண்டில் மட்டும் சுயதொழில் செய்பவர்கள் 13,149 பேரும், வேலையில்லாதவர்கள் 12,936 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் தினம்தோறும் வேலையில்லாதவர்கள் 35, சுயதொழில் செய்வோர் 36 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை செய்து கொண்டவர்களில் விவசாயிகள் 10,349 பேர்,…

மேலும்...

வேலூரில் இளம் பெண் கூட்டு வன்புணர்வு: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

வேலூர் (19 ஜன 2020): வேலூர் கோட்டையில் வைத்து இளம் பெண் மூன்று பேர் கொண்ட கும்பலால் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். வேலூரில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் வேலை பார்த்து வந்த 24 வயது பெண் 3 பேர் கொண்ட கும்பலால் கடத்தி செல்லப்பட்டு வேலூர் கோட்டை பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை அந்த இளம்பெண் ஆபத்தான நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வன்புணர்வு…

மேலும்...

தமிழகம் முழுவதும் இன்று போலியோ தடுப்பு முகாம்!

சென்னை (19 ஜன 2020): போலியோ பாதிப்பில் இருந்து குழந்தைகளைக் காக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள 5 வயதுக்குட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 5 வயதுக்கு உள்பட்ட சுமாா் 70.50 லட்சம் குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்குவதற்காக, சுகாதாரத் துறை, அந்தந்த மாவட்ட நிா்வாகத்துடன்…

மேலும்...

தமிழக பாஜக தலைவராகும் எச்.ராஜா?

சென்னை (18 ஜன 2020): தமிழக பாஜக தலைவராக எச்.ராஜா அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் தமது தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா கவர்னரான பிறகு தமிழக பாஜக தலைவர் பதவிக்கு புதியவர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. 11, 12 பேர் கொண்ட பட்டியல் டெல்லி மேலிடத்துக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பொன் ராதாகிருஷ்ணன்,…

மேலும்...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் புதிய சாதனை படைத்த மாடுபிடி வீரர்!

மதுரை (18 ஜன 2020): அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் ரஞ்சித் குமார் புதிய சாதனை படைத்து சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப் பட்டார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நேற்று காலை தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. போட்டியில் 688 மாடுபிடி வீரர்கள், 739 காளைகள் பங்கேற்றன. இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ரஞ்சித் குமார் சுற்றி சுற்றி காளைகளை அடக்கினார். மிகவும் வலுவான காளைகளை கூட, இவர்…

மேலும்...

தமிழகம் முழுவதும் வீடுகள் கணக்கெடுப்பு தொடங்கியது!

சென்னை (18 ஜன 2020): தமிழகம் முழுவதும் வீடுகள் கணக்கெடுப்பு தொடங்கியது. இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. ஒரே நேரத்தில் நாடு முழுவதற்குமான ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு 1881-ஆம் ஆண்டு நடந்தது. அதிலிருந்து தொடங்கி பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் விடுபடாமல் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்கள் தொகை கணக்கெடுப்பானது மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948-இன் கீழ் உத்தரவாகப் பிறப்பிக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு…

மேலும்...

மிரட்டிய ஸ்டாலின் – பணிந்த எடப்பாடி!

சென்னை (16 ஜன 2020): இவ்வருடம் பெரியார் விருது இதுவரை அறிவிக்காதது காரணம் ஏன்? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில் உடனே பெரியார் விருதை அறிவித்துள்ளது தமிழக அரசு. தந்தை பெரியார் விருது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று (புதன்கிழமை) மாலை சமூக வலைதலங்களில் கேள்வி எழுப்பியிருந்தார். அதில், “தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தந்தை பெரியார் விருது 2019, யாருக்கு என்பது அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு முன், சொந்தக்…

மேலும்...

தமிழகம் முழுவதும் பொங்கல் உற்சாக கொண்டாட்டம்!

சென்னை (15 ஜன 2020): தமிழர் திருநாளாம் தை முதல் நாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் புதன்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்பாடு, கலாச்சாரம் மற்றும் விவசாயத்தை போற்றும் வகையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல்நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வீடுகளில் புது வண்ணம் பூசியும், அலங்காரத் தோரணங்களைக் கட்டியும், வண்ணக் கோலமிட்டும் கோலாகலமாகவும், உற்சாகமாகவும் உறவினர்கள், நண்பர்கள் சூழ இணைந்து கொண்டாடுகின்றனர்.

மேலும்...

தமிழக மக்களே…! இரண்டு நாட்களுக்கு கவனமா இருங்க!

சென்னை (14 ஜன 2020): தமிழகத்தில் இரண்டு நாட்கள் பனிமூட்டம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் தென் தமிழகம், கடலூா், டெல்டா மாவட்டங்களில் காலை நேரங்களில் மிதமான பனிமூட்டமும், ஏனைய மாவட்டங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். சில பகுதிகளில் அதிகாலை நேரங்களில் பனிபுகை காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்...